Tuesday, October 06, 2009

நூறாவது பதிவு – வாசிப்பும்,வலையுலகும்,வருங்காலமும்.....



இது எனது நூறாவது பதிவு. கடந்து வந்த பாதையை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே வாசிப்பு ஆர்வம் அதிகம். பத்து வயதுக்குள்ளே பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் ,திரு.இராஜாஜியின் வியாசர் விருந்து படித்தது வெள்ளியன்று வரும் சிறுவர் மலருக்காக உடன்பிறப்போடு சண்டை போட்டு கிழித்தது. சிறுவர் இதழ்களான அம்புலிமாமா,பாலமித்ரா,ராணி காமிக்ஸ், கோகுலம் என தேடித்தேடி படித்தது. பள்ளியில் அந்த கதைகளை நல்ஒழுக்க வகுப்புகளில் மேடையேறி பகிர்ந்து கொண்டது. என எல்லா நினைவுகளும் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன. ம்ம்ம்...... அது ஒரு அழகிய கனாக்காலம்.

வயது ஏற ஏற ராணி முத்து, மாலைமதி, கிரைம் நாவல்கள், பாக்கெட் நாவல்கள் பழக்கம் ஆயின. அந்த கால ஆனந்த விகடன், குமுதம் வார இதழ்களில் தொடராக வந்த கதைகளை பலரும் “பைண்ட்” செய்து வைத்திருப்பார்கள். பலமுறை கேட்டாலும் பலத்த யோசனைக்குப்பின்தான் கிடைக்கும். கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், ‘மோகமுள்’ ஜானகிராமன், சுஜாதா, ராஜேஷ்குமார், ‘ஞே’ ராஜேந்திரகுமார், சுபா எல்லாம் இப்போதும் மிகவும் ஆதர்ச எழுத்தாளர்கள். லஷ்மி, ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் குடும்ப நாவல்களும் பிடிக்கும். தொண்ணூறாம் வருட தீபாவளி மலராக ஆனந்த விகடனில் சுஜாதாவின் ஏன்,எதற்கு,எப்படி வெளியிட்டார்கள். பல அரிய அறிவியல் தகவல்களை எளிமையாக புரிய வைத்த அந்த புத்தகம் மூன்று பாகம் வந்தது.

குரல் கொஞ்சம் கணீரென்று இருப்பதால் பள்ளியின் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வகுப்பாசிரியர்களால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டேன். எனது தமிழாசிரியர்களும் என் மீது தனிப்பிரியம் கொண்டு இலக்கியமன்றங்களில் ஈடுபடுத்தினர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆசிரியர் விடுப்பில் சென்றபோது ஒருமாதம் மட்டும் வந்த பயிற்சி தமிழ் ஆசிரியை கதை,கவிதைகள் எழுத தூண்டி பல கத்துக்குட்டி கவிதைகள் எழுதிக்காட்டியபோது பாராட்டியமை மிகவும் குறிப்பிடத்தக்கது. தணியாத தமிழார்வத்தால் தமிழ் இலக்கியம் படித்த எனது தமக்கையாரின் அகநானூறு, புறநானூறு முதல் நவீன இலக்கியம் வரையான பாடங்களை அவருக்கு முன் நான் படிப்பேன். எனது தமக்கையார் தற்போது தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பள்ளியில் படிக்கும்போது விடுமுறைக்காக எந்த ஊருக்கு சென்றாலும் தேடும் முதல் இடம் நூலகமே. இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. நூலகம் இல்லாத ஊருக்கு சென்றால் மிகவும் நொந்து போய்விடுவேன். பணிவிஷயமாக பல மாநிலங்களுக்கு சென்றபோது தமிழ் படிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். தொடர்பு கொள்ள, செய்திதாள் படிக்க என்ற அளவிலே பயன்படுத்திவந்த இணையத்தில் ஏதோ தேடுதலின் போது எதிர்பாராதவிதமாக வலையுலகம் அறிமுகமானது. பலவிதமான பகிர்வுகள் நிறைந்த பதிவுலகம் இனிதே ஈர்த்தது.

முதலில் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் பின் அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தேன். அனானி ஆப்சனிலும் கீழே எனது பெயர் குறிப்பிட்டே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். பல நண்பர்களும் அறிமுகமானார்கள். அவர்கள் மூலம் ஈ கலப்பை பற்றி அறிந்து தரவிறக்கம் செய்து தமிழிலே பின்னூட்டங்கள் இட்டு வந்தேன். நட்பு வளையம் பெருகியது. பின் தனியே இந்த வலைப்பூவையும் 2006ல் பதிவுலக நண்பர்கள் மூலம் உருவாக்கி பதிவுகள் இட ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தேன். என்னைப் பாதித்த செய்திகளையும் சொந்த கருத்துகளோடு பதிவாக இட்டுள்ளேன். எங்க ஊரு பாட்டுக்காரிகள் என்பதே நான் முதல் முதல் எழுதிய அனுபவ நிகழ்ச்சி. பின் எழுதிய கவிதைகள் அனைத்தும் எனக்கு மிகப்பிடித்தமானவை. உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

நான் எழுதிய சொந்த திகில் அனுபவங்களான மோகினியைக் கண்டேன், முறுக்கு முனி போன்றவற்றிற்கு கிடைத்த வரவேற்புகளால் ஏதோ மோகம் தொடர்கதை எழுதவும் துணிந்தேன். பாராட்டுக்களும், மிகச்சிறிய பாகங்கள் என விமர்சனங்களும் ஒருங்கே குமிந்தாலும் ஒவ்வொரு பாகமுடிவிலும் ட்விஸ்ட் வைத்து முடித்ததில் எனக்கே என் எழுத்து பிடித்திருந்தது. இன்னும் எவ்வளவோ பெரிய தொடர்கள் எழுதவும் ஊக்கம் தந்திருக்கிறது.

அடுத்து ஒரு வரலாற்றுப் பயணம் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு கவிதைகள்,கதைகள் என தொடர உத்தேசித்துள்ளேன். தமிழ்த்தாயின் தயவும், ,காலதேவனின் கருணையும்,அன்பு நண்பர்கள் உங்கள் ஆதரவும் இருந்தால் எழுத்துலகில் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம் ......

36 comments:

Anbu said...

வாழ்த்துக்கள் அண்ணா...நூறு பதிவுகளுக்கு

லோகு said...

வாழ்த்துக்கள் அண்ணா.. தொடர் கதை மட்டுமல்லால், சிறு கதைகளையும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

பழமைபேசி said...

வாழ்த்துகள் நண்பா!

பிரபாகர் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜா... 100 ஆவது பதிவிற்கு. வாசித்தலை பற்றி நான் எனக்காக எழுதினாலும் அப்படியே நீங்கள் எழுதியது போல் தான் இருக்கும், அவ்வளவு ஒற்றுமை.

கலக்குங்கள்.... இன்னும் நிறைய...... எதிர்பார்க்கிறேன், 200 ஆவது பதிவிலும் பின்னூட்டமிடவேண்டும் வெகு விரைவில்....

பிரபாகர்.

அ. நம்பி said...

//...எழுத்துலகில் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்.//

சாதிக்கவேண்டும்; சாதிப்பீர்கள்.

வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துக்கள் ராஜா சபை :)

venkat said...

உங்கள் பணி இனிதே சிறக்க வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

100-க்கு வாழ்த்துகள்!! :-)

சுவாரசியமாக இருந்தது..

ஹேமா said...

இனிய மனம் நிறைந்த வாழ்த்துகள் ராஜா.உங்கள் பதிவுகளில் சிறுகதைகள்.கவிதைகள் எனக்குப் பிடிச்சது.இன்னும் நிறைய எழுத வழ்த்துகள்.

கலகலப்ரியா said...

உங்க வரலாற்றில ஒரு பகுதியே எழுதிட்டீங்க..! நூறு இருநூறாகி.. ஆயிரமாயிரமாக வாழ்த்துக்கள்...!

நர்சிம் said...

100க்கு வாழ்த்துக்கள்.

நல்ல சுவாரஸ்ய நடை.

நிறைய எழுதுங்கள்.அது ‘ஙே’

ஷாகுல் said...

வாழ்த்துக்கள் ராஜா

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்....! தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி ..!! மேலும் பலநூறு பதிவுகள் எழுதுங்கள்..!!!

துளசி கோபால் said...

சதமடிச்சதுக்கு இனிய பாராட்டுகள்.

இன்னும் இது பெருகிவரட்டும்.

நல்லா இருங்க.

நையாண்டி நைனா said...

வாழ்த்துகள் நண்பா!

கபிலன் said...

தங்கள் எழுத்துப் பணி மென்மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்!

கிளியனூர் இஸ்மத் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் பலநூறு பதிவுகளை பதிக்க வேண்டுகிறேன்....

vasu balaji said...

வாழ்த்துகள் ராஜா!

Raju said...

ரைட்டு அண்ணே, அப்பிடியே 100,200 னு அடிச்சு ஆடுங்க.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் தலைவரே!

RAGUNATHAN said...

//விடுமுறைக்காக எந்த ஊருக்கு சென்றாலும் தேடும் முதல் இடம் நூலகமே. இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. நூலகம் இல்லாத ஊருக்கு சென்றால் மிகவும் நொந்து போய்விடுவேன்.//

உங்க கூடவே பொறந்தது என்னிக்கும் மாறாது....

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்...அடுத்து, விரைவில் ஆயிரமாவது பதிவிட வாழ்த்துகிறேன்... -:)

சின்னக்குட்டி said...

ராஜாவுக்கு இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

சதம் கண்ட துபாய் ராஜாவிற்கு வாழ்த்துக்கள்! இன்னும் பலநூறு சதம் காண வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் ராஜா.

வாசிப்பு அனுபவம் பற்றிய குறிப்புகள் அசத்தல், கிட்டதட்ட எல்லோருக்கும் இது போன்ற அனுபவமே இருக்கும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் துபாய் ராஜா

100 , 1000 ஆக வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் அன்பரே...மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கிறேன்.

Santhosh said...

தல,
குறைந்த நாட்களில் நூறு அடிச்சி இருக்கீங்க.. கலக்கல் தொடர்ந்து எழுதுங்க..

துபாய் ராஜா said...

//Anbu said...
வாழ்த்துக்கள் அண்ணா...நூறு பதிவுகளுக்கு..//

வாழ்த்துக்களுக்கு நன்றி அன்புத்தம்பி.

துபாய் ராஜா said...

// லோகு said...
வாழ்த்துக்கள் அண்ணா.. தொடர் கதை மட்டுமல்லால், சிறு கதைகளையும் நிறைய எதிர்பார்க்கிறேன்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி லோகு.

நிறைய எழுத திட்டம் இருக்கு.ஆனா என்ன சிறுகதையா நினைச்சு தொடங்கறதெல்லாம் எழுத எழுத தொடர்கதையா ஆயிடுது... :))

துபாய் ராஜா said...

// பழமைபேசி said...
வாழ்த்துகள் நண்பா!//

நன்றி தோழரே...

Jawahar said...

ராஜா, நல்ல வலுவான பின்னணி... அதான் இப்படி வெளுத்துக் கட்டுகிறீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு லட்சமாவது இடுகையைப் படித்து அதற்கும் பின்னூட்டம் போடுவேன்!

http://kgjawarlal.wordpress.com

Jackiesekar said...

வாழ்த்துக்கள் துபாய் ராஜா...உங்கள் தமிழ் ஆர்வமும் வாசிப்பும் என்றும் குறையாதிருக்க இறைவனை வேண்டுகின்றேன்...
அன்புடன்
ஜாக்கி

மாதேவி said...

வாழ்த்துக்கள்!. பதிவுகளும் வாழ்த்துக்களும் மென்மேலும் தொடரட்டும்.

anujanya said...

இரண்டு நாட்களில் நான் 'சதம்' அடித்தவருக்குப் பாராட்டும் மூன்றாவது பதிவர் நீங்கள். வாழ்த்துகள் ராஜா. நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

கீழை ராஸா said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

கானா பிரபா said...

வாழ்த்துகள் நண்பா