Saturday, May 31, 2014

அம்மான்னா சும்மாவா....

அம்மான்னா சும்மாவா....

நாடாளுமன்றத்தில் 37 தொகுதி கொடுத்து அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சின்னு அங்கீகாரம் கொடுத்து அம்மா மனசை குளிர வைத்த தமிழ்நாட்டு தங்கங்களே...உங்கள் மனம் குளிரவைக்கும் அம்மாவின் அதிரடி பரிசு...

விரைவில் மாவட்டம்தோறும் எதிர்பாருங்கள்...

சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதி ஜெயிக்க வைத்தால் மக்கள் மனம் மேலும் குளிறுமாறு வார்டுதோறும் மற்றும் ரேசன் கடைகளிலும் 'எலைட் பார்' மற்றும் குளிர்ந்த பீர் கிடைக்குமாறு அம்மா வசதி செய்து தருவார்கள்... தருவார்கள்..... தருவார்கள்...


பத்திரிக்கையில் வந்த பலபேருக்கு பயன் தரும் செய்தி...



http://www.maalaimalar.com/2014/05/30135818/Nungambakkam-near-today-Beer-S.html

நுங்கம்பாக்கத்தில் இன்று பீர் விற்பனைக்கு தனிகடை திறப்பு..

சென்னை, மே 30–

டாஸ்மாக் மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவினர் மது வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக ‘எலைட்’ என்ற பெயரில் மதுபானக்கடையை டாஸ்மாக் திறந்துள்ளது. அங்கு உள்நாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூர் – அல்சாமால், கோயம்பேடு– டென்ஸ் கொயர், அண்ணா சாலை– ஸ்பென்சர் பிளாசா, தேனாம் பேட்டை–ரமிமால், வேளச்சேரி–பீனிக்ஸ், நுங்கம்பாக்கம்–பார்சன், நாவலூர்–கோரமண்டல் ஆகிய இடங்களில் இந்த மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பார்வசதி கிடையாது. விற்பனை மட்டும்தான்.

இந்த கடைகளில் கலப்படம் இல்லாமல் மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதால் மது பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தன. பார்களில் பீர் விற்கப்பட்டு வருவதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

‘ஜில்‘ பீர் என்ற பெயரில் கடை மற்றும் பார் ஊழியர்கள் கொள்ளை லாபம் அடித்தனர். இதை டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ள எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதியில் கூட கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்கிறது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. மதுபாட்டில் ரூ.10 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு விற்கிறார்கள். அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்கும் படி வலியுறுத்தி அடிக்கடி தகராறும் நடக்கிறது.

இதற்கிடையில் ஷாப்பிங் மால்களில் விற்கப்படும் மதுபானங்களுடன் பீர் வகைகள் விற்க டாஸ்மாக் முடிவு செய்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக மையங்களில் இன்று முதல் ‘பீர்’ விற்பனை தொடங்கப்படுகிறது.

பீர் மட்டும் விற்பனை செய்யக்கூடிய கடை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்சன் காம்ப்ளக்சில் இன்று தொடங்கப்படுகிறது. இந்த கடையில் வேறு எந்த மதுபானமும் கிடைக்காது. உள்நாட்டு பீர் மற்றும் வெளிநாட்டு பீர் வகைகளும் இங்கு கிடைக்கும்.

இந்த கடையில் பெரிய அளவிலான குளிர்சாதன பெட்டிகள் மூலம் ‘ஜில்’ பீர் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை விற்கப்படும். ரூ.55 முதல் ரூ.220 வரையிலான பல்வேறு கம்பெனிகளின் பீர் பானங்கள் விற்கப்படும்.