Sunday, October 25, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.


எதிர்பாராத விதமாக அவசர விடுமுறையில் சென்ற சக துறைநண்பரின் பணியும் நம் தலைமேல் விழுந்து பணிப்பழு பாரமாய் அழுத்துகிறது. பதிவிட எவ்வளவோ விஷ்யங்கள் இருந்தாலும் எழுத நேரமில்லை. நண்பர்கள் தொடர்வருகையும், அண்ணாச்சி கிளியனூர் இஸ்மத் அளித்த விருதும், நண்பர் பிரபாகரின் அருமையான அறிமுகமும் பதிவுகளையும், பகிர்வுகளையும் இன்னும் சிறப்பாக படைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை கூட்டியுள்ளன. எனவே இந்த பயணத்தொடரை சாதாரணமாக எழுதாமல் சென்ற இடங்கள் குறித்த பல சிறப்பு தகவல்களையும் சேர்த்து  தரலாம் என உள்ளேன்.இந்த பாகத்தில் அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.

பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.எட்டு தேசங்களின் இடையே ஓடும் நைல் நதியில் அஸ்வான் பேரணை ஆப்பிரிக்கா கண்டத்தின் வடகிழக்கே எகிப்து நாட்டில் 4187 மைல் தூரமோடும் உலகிலே எல்லாவற்றிலும் மிக நீளமான நைல் நதியில் அஸ்வான் பேரணை கட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நதி அமேஸான், நைல் நதியை விட நீளத்தில் (3900 மைல்) சற்று சிறியதே. நீல நைல், வெண்ணிற நைல், அத்பாரா எனப்படும் மூன்று மூல நதிகள் ஒன்றாய் இணைந்து, பிரதம நதியான நீள நைல் எகிப்து நாட்டில் ஓடி மத்தியதரைக் கடல் சங்கம அரங்கில் புகுந்து கலக்கிறது. 

நைல் நதி ஓட்டத்திலே ஓர் உலக விந்தை! நீல நைல் இதியோப்பியா, ஸயர், கெனியா, டான்ஜினியா, ரவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளின் வழியாகவும், வெண்ணிற நைல் யுகாண்டா, சூடான் வழியாகவும், பிரதம நைல் இறுதியில் எகிப்து வழியாகவும், ஆக எட்டு தேசங்களின் வழியாக ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே நதிநீர் பங்கீடு பிரச்சினையாக இருக்கும் போது நைல் நதியில் அல்லது அதன் மூல நதிகளில், பல நாடுகளின் உடன்பாடு, ஒப்பந்தம் பெற்றுப் பேரணைகள் கட்டுவதோ, கால்வாய்கள் வெட்டுவதோ எத்துணைச் சிக்கலான, சிரமான இமாலய முயற்சிகள்.நைல் நதியில் நான்கு பேரணைகள் (ரோஸைரஸ் அணை, சென்னார் அணை, அஸ்வான் பேரணை, ஓவன் நீர்வீழ்ச்சி அணை) கட்டப்பட்டுப் பயனளித்து வருகின்றன. நைல் நதியின் சராசரி நீரோட்ட அளவு: விநாடிக்கு 3.1 மில்லியன் லிடர் (680,000 காலன்)! அனுதினமும் ஆயிரக் கணக்கான பேர் நைல் நதிப் போக்குவரத்தில் பயணம் செய்து வருகிறார்கள். வேளாண்மை, போக்குவரத்து, சுற்றுலாப் பயணம், மீன்வளப் பிடிப்பு போன்ற முக்கிய வாழ்வு, வர்த்தக, ஊழிய, உவப்புப் பணிகள் அனைத்தும், அணைகள் அமைக்கப் பட்டதால், ஓரளவு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும், பின்னால் அவை பெருமளவில் விருத்தி யடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.


1843 ஆம் ஆண்டு நைல் நதி தீரத்தில் அடுத்தடுத்து வரிசையாகக் கெய்ரோவுக்கு 12 மைல் தூரத்தில் நதிக் கீழோட்டச் சங்கமப் படுகையில் [Downstream Delta] பல திருப்பு அணைகள் கட்டத் தீர்மானிக்கப் பட்டது. அவ்விதம் செய்வதால் நதி மேலோட்ட [Upstream River] நீர் மட்டம் உயர்ந்து, வேளாண்மைக் கால்வாய்களுக்கு நீர் வெள்ளம் அனுப்ப முடியும். அத்துடன் நீர்ப் போக்குவரத்து வசதிகளையும் கட்டுப்பாடு செய்ய முடியும். 1861 ஆண்டு வரை 'சங்கம நதி அரண் ' [Delta Barrage] முழுவதும் கட்டி முடிக்கப் படாமலே இருந்தது. அதற்குப் பிறகு அதே நதி அரண் நீட்சியாகி செம்மைப் படுத்தப் பட்டது. 1901 இல் நைல் சங்கமப் பகுதி டாமைட்டா கிளையின் [Damietta Branch] பாதி தூரத்தில் ஸிஃப்டா நதி அரண் [Zifta Barrage] அந்த அமைப்புடன் சேர்க்கப் பட்டது. அடுத்து அசியட் நதி அரண் [Asyut Barrage] 1902 இல் முடிக்கப் பட்டது.


அஸ்வான் நைல் நதியின் முதல் எகிப்து நீர்வீழ்ச்சி [Cataract] ஆகும். அவ்விடத்தில் பழைய அஸ்வான் கீழ் அணையும் [Old Aswan Lower Dam], புதிய அஸ்வான் மேல் அணையும் [New Aswan Higher Dam] அஸ்வான் நகருக்கு அருகில் அமைந்துள்ளன. அஸ்வான் கீழணை (1899-1902) ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டது. அதன் நீர்மட்டச் சக்தியை இழுத்து, 345 மெகாவாட் மின்சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நீர்மின்சார நிலையம் ஒன்று நிறுவனமானது.


அஸ்வான் பேரணை உருவாகி வரும்போது, இடப்பெயர்ச்சியில் பாதிப்பான நபர்களின் எண்ணிக்கை 90,000! அஸ்வான் மேல் அணை கெய்ரோவுக்கு 600 மைல் நதி மேலோட்ட தூரத்திலும், கீழணைக்கு 3.6 மைல் தூர மேலோட்ட தீரத்திலும் (1960-1970) ஆண்டுகளில் அமைக்கப் பட்டது. நைல் நதி 1800 அடி அகலம் உள்ள இடத்தில் கட்டப் பட்டது, மேலணை. மேலணை நீர்மின்சக்தி நிலையத்தின் தகுதி 2100 மெகாவாட் மின்சார ஆற்றல்! பிரம்மாண்டமான அஸ்வான் மேலணையின் நீளம்: 12,000 அடி [3600 மீடர்] (2.3 மைல்)! அணையின் நீர் உயரம்: 370 அடி. மேலணையின் அடிப்பகுதி 0.6 மைல் [1 கி.மீடர்] அகலத்தில் கட்டப் பட்டிருக்கிறது! நதிநீர் மட்டத்திற்கு மேல் அணையின் விளிம்பு 330 அடி [100 மீடர்] உயரத்தில் உள்ளது.

அஸ்வான் அணைக்கரையில் சில அழகிய காட்சிகள்.
அணை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைஉச்ச வெள்ள அடிப்பில் அணை வழியாகச் செல்லும் நீரோட்டம்: விநாடிக்கு 11,000 கியூபிக் மீடர்! அபாய நிலைக்கு நீர் உயரம் எழும்போது, விபத்தைத் தவிர்க்க 5000 கியூபிக் மீடர் வெளியேற்றும் 'அபாயத் திறப்பு வாய்கள் ' [Emergency Spillways] அமைக்கப் பட்டுள்ளன! அஸ்வான் மேலணை எழுப்பப் பட்டதால், 6000 சதுர கி.மீடர் பரப்புள்ள, செயற்கையான நீர்த் தேக்கம் 'நாஸர் ஏரி ' [Lake Nasser] உருவாகி உள்ளது! மாபெரும் நீர்த் தேக்கமான நாஸர் ஏரி 288 மைல் [480 கி.மீடர்] நீளமும், 10 மைல் [16 கி.மீடர்] அகலமும் கொண்டு, (150-165) கியூபிக் கி.மீடர் (cubic km) நீர்க் கொள்ளளவு உடையது. 


தற்போது அஸ்வான் மேலணையில் ஒவ்வொன்றும் 175 மெகா வாட் உற்பத்தி செய்து வரும், 12 நீர் டர்பைன் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன (மொத்தம்: 1680 மெகா வாட்). 1967 ஆண்டு முதல் தொடர்ந்து நீர் மின்சார நிலையங்கள் மின்சக்தி பரிமாறி வருகின்றன. நிலையத்தின் உற்பத்தி உச்சமான போது, எகிப்து நாட்டின் பாதியளவு மின்சக்தி ஆற்றலைப் பங்கெடுத்து, முதன்முதல் பெரும்பான்மையான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி வகுத்தது.


அணையில் தேக்கப்பட்டுள்ள நீர்

அணையிலிருந்து வெளிவரும் நைல்நதி

11 comments:

ஜெட்லி... said...

nalla irukku raajaa...

payana kurippu super..

ஹேமா said...

மனதில் இதமான சுற்றுலாவாய் இருந்திருக்கும்.படங்களைப் பார்க்கவே ஆசையாய் இருக்க்.நீங்கள் தொகுத்துத் தரும் விதமும் அருமையாய் இருக்கிறது.அடுத்த பாகத்திற்கு ஆவலுடன்.

எம்.எம்.அப்துல்லா said...

போய்ட்டு வந்து பொறுமையா அவ்வளவையும் எழுதும் உங்கள் உழைப்புக்கு என் வந்தனங்களும்,வாழ்த்துகளும்

:)

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு படமும் விவரங்களும்.நன்றி.

ISR Selvakumar said...

நைல் நதி - எனது பால்ய கால கனவு. இன்னமும் அதைப் பார்க்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை.

முதன் முதலில் இத்தனை புகைப்படங்களுடன் நைல் பற்றிய பயணக்கட்டுரை படிக்கிறேன்.

நன்றி!

விக்னேஷ்வரி said...

அழகான புகைப்படங்களுடன் நல்ல தகவல்கள்.

அ. நம்பி said...

இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எழுதுகிறீர்கள்; பாராட்டுகள். வழக்கம்போலவே கட்டுரையும் படங்களும் நன்று.

இடைவெளி குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை; பணிதான் முக்கியம்.

பிரபாகர் said...

நீங்கள் சென்றுவந்த இடத்திற்கு நாங்கள் செல்லத்தேவையில்லை போலிருக்கு ராஜா... அவ்வளவு தெளிவாய் படங்களுடன் தகவல்கள்... வேலையினை பொறுத்து தொடர்ந்து அளியுங்கள். வழக்கம்போல் ஆர்வமாய்....

பிரபாகர்.

Admin said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்.

மாதேவி said...

நைல் நதியில் அஸ்வான் பேரணைக்காட்சிகள்

அழகான புகைப்படங்கள் விபரங்களுடன் நன்றி.

கானா பிரபா said...

பயணம் இனிக்கிறது நன்றி நண்பா