Monday, July 31, 2006

திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!.


சாதாரண பயணம்
'சரித்திரம்' படைத்துவிட்டது.

ஆம் நண்பர்களே !
விடுமுறையில் சென்றவன்
'விதி'முறைகளுக்குள் சென்றுவிட்டேன்.

ஊருக்கு செல்வதைப்பற்றி
ஏற்கனவே ஒரு தனிப்பதிவு இட்டிருந்தேன்.

சென்ற இடத்தில் திருமணம்
நிச்சயமானது.தங்கள் அனைவருக்கும்
அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன்.

க.பி.கவ.வா.ச. சார்பிலும்
திருமணசெய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சிட்னியிலிருந்து நண்பர் கானா பிரபா,
சூடானிலிருந்து தோழர் நாகை சிவா
மற்றும் பல அயல்நாட்டு நண்பர்கள்
கைபேசியில் அழைத்து வாழ்த்திட்டனர்.

எனதினிய நண்பன் பாலபாரதி,
ப்ரியன்,ராஜஸ்தானிலிருந்து நம்ம
தல கைப்புள்ள, லிவிங் ஸ்மைல் வித்யா,
தேவு, விவசாயி இளா, பார்த்திபன்,
கட்டதுரை மற்றும் பல நண்பர்கள்
உள்நாட்டின் பலபகுதிகளிலிருந்தும்
உளமார்ந்த வாழ்த்து கூறினர்.

தங்கத்தளபதி நாமக்கல் சிபி
காலை,மாலை,மதியம்,இரவு என
நினைத்தபொழுதெல்லாம் அழைத்து
என்னை அன்பில் நனைத்துவிட்டார்.

க.பி.க,வ.வா.ச பதிவுகளிலும்
மற்றும் எனது வலைப்பதிவிலும்
பல நண்பர்கள் பின்னூட்ட
வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து
துபாய் திரும்பி வந்தாயிற்று.

இணையமெங்கும் எனது
திருமணச்செய்தியை
சிறப்பாக பரப்பிட்ட
க.பி.கழக கண்மணிகள்,
வ.வா.சங்க சிங்கங்கள்
அனைவரையும் வாழ்த்தி
வணங்குகிறேன்.

திருமணத்திற்கு நேரில் வந்து
வாழ்த்திய அன்பர்கள்,
கைபேசியில் அழைத்து
வாழ்த்திட்ட நண்பர்கள்,
இணையம் மூலம்
மனமார்ந்த மணநாள்
வாழ்த்துக்கள் தெரிவித்த
அன்பார்ந்த 'தமிழ்மணம்'
வலைபதிவு நண்பர்கள்
அனைவருக்கும் 
 நன்றி! நன்றி!! நன்றி!!!.

Monday, July 03, 2006

மணவிழா அழைப்பு




வணக்கம் நண்பர்களே!

தாயக வருகை எப்போதுமே ஒருவித உற்சாகத்தை கொடுக்கக் கூடியதுதான் என்றாலும்..

இந்த முறை அந்த உற்சாகம் கூடுதலாகிப் போனதிற்கு காரணம் எனக்கு பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தியும் தான்.

எல்லாம் நல்ல படியாக முடிந்து இம் மாதம் 12ம் தேதி என் வாழ்க்கைத் துணையாக ரேவதியை கரம் பற்றுகிறேன்.

வாழ்க்கைத்துணை எப்படி இருப்பாங்கன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஆனா.. இன்னும் கூட சொல்லவேண்டியவை நிறைய இருக்குன்னு பார்த்த பின் தான் உறைத்தது. அவை பற்றி பிறகு.




எல்லோருக்கும் நேரில் வந்து தான் அழைப்பு வைக்க ஆசை.. ஆனால் என்ன செய்வது..  யதார்த்தத்தில் நாம் நினைப்பது போலவா எப்போதும் நடக்க முடிகிறது! எனவே நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..
எல்லோருக்குமான பொது அழைப்பாக இதனை வைக்கிறேன்.

அவசியம் வாங்க! வாழ்த்தை தாங்க!

நினைவுக்கு: மணவிழாவுக்கு வருகை தரும் நண்பர்கள் முன்னமே தகவல் தெரிவித்து விட்டால்.. தங்கும் இடத்திற்கும், உணவிற்கும் சரியான ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். அதோடு குற்றாலம், நெல்லையைச் சுற்றி இருக்கும் சுற்றுலத் தளங்களையும் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிருக்கு..

அப்ப வரீங்க தானே...

தொடர்பு கொள்ள வேண்டிய                                                                                                    கைபேசி எண்:- 94439 77076.