Saturday, October 31, 2009

ஏதோ நினைவுகள்...


அடர்மழை நாளொன்றில்
அலுப்போடும்
கொஞ்சம் சலிப்போடும்
ஒரு பயணம்....

மழைநீர் தள்ளும்
வைப்பர் போல
மனநினைவுகள்
தள்ள முயல்கிறேன்...

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
விரட்டும் மனமோகம்....

கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....

அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் நினைவுகள்....

மழைநீர் வடிந்தாலும்
என் மனநினைவுகள்
வடியாது...

வெள்ளநீர்
விலகினாலும்
விலகாது
வீண் நினைவுகள்...
என்னோட இந்த கவிதை தனிமைக்கொடுமையில் விளைந்த சோகத்தின் வெளிப்பாடுன்னா கவிதாக்கா கவிதை சுகராக கீதம். இனிமையான எதிர்க்கவிதை புனைந்த கவிதாக்காவிற்கு வாழ்த்துக்கள்.

Sunday, October 25, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.


எதிர்பாராத விதமாக அவசர விடுமுறையில் சென்ற சக துறைநண்பரின் பணியும் நம் தலைமேல் விழுந்து பணிப்பழு பாரமாய் அழுத்துகிறது. பதிவிட எவ்வளவோ விஷ்யங்கள் இருந்தாலும் எழுத நேரமில்லை. நண்பர்கள் தொடர்வருகையும், அண்ணாச்சி கிளியனூர் இஸ்மத் அளித்த விருதும், நண்பர் பிரபாகரின் அருமையான அறிமுகமும் பதிவுகளையும், பகிர்வுகளையும் இன்னும் சிறப்பாக படைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை கூட்டியுள்ளன. எனவே இந்த பயணத்தொடரை சாதாரணமாக எழுதாமல் சென்ற இடங்கள் குறித்த பல சிறப்பு தகவல்களையும் சேர்த்து  தரலாம் என உள்ளேன்.



இந்த பாகத்தில் அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.

பாகம் 5 – அஸ்வான் அணை குறித்த தகவல்கள்.



எட்டு தேசங்களின் இடையே ஓடும் நைல் நதியில் அஸ்வான் பேரணை ஆப்பிரிக்கா கண்டத்தின் வடகிழக்கே எகிப்து நாட்டில் 4187 மைல் தூரமோடும் உலகிலே எல்லாவற்றிலும் மிக நீளமான நைல் நதியில் அஸ்வான் பேரணை கட்டப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நதி அமேஸான், நைல் நதியை விட நீளத்தில் (3900 மைல்) சற்று சிறியதே. நீல நைல், வெண்ணிற நைல், அத்பாரா எனப்படும் மூன்று மூல நதிகள் ஒன்றாய் இணைந்து, பிரதம நதியான நீள நைல் எகிப்து நாட்டில் ஓடி மத்தியதரைக் கடல் சங்கம அரங்கில் புகுந்து கலக்கிறது. 

நைல் நதி ஓட்டத்திலே ஓர் உலக விந்தை! நீல நைல் இதியோப்பியா, ஸயர், கெனியா, டான்ஜினியா, ரவாண்டா, புருண்டி ஆகிய நாடுகளின் வழியாகவும், வெண்ணிற நைல் யுகாண்டா, சூடான் வழியாகவும், பிரதம நைல் இறுதியில் எகிப்து வழியாகவும், ஆக எட்டு தேசங்களின் வழியாக ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே நதிநீர் பங்கீடு பிரச்சினையாக இருக்கும் போது நைல் நதியில் அல்லது அதன் மூல நதிகளில், பல நாடுகளின் உடன்பாடு, ஒப்பந்தம் பெற்றுப் பேரணைகள் கட்டுவதோ, கால்வாய்கள் வெட்டுவதோ எத்துணைச் சிக்கலான, சிரமான இமாலய முயற்சிகள்.



நைல் நதியில் நான்கு பேரணைகள் (ரோஸைரஸ் அணை, சென்னார் அணை, அஸ்வான் பேரணை, ஓவன் நீர்வீழ்ச்சி அணை) கட்டப்பட்டுப் பயனளித்து வருகின்றன. நைல் நதியின் சராசரி நீரோட்ட அளவு: விநாடிக்கு 3.1 மில்லியன் லிடர் (680,000 காலன்)! அனுதினமும் ஆயிரக் கணக்கான பேர் நைல் நதிப் போக்குவரத்தில் பயணம் செய்து வருகிறார்கள். வேளாண்மை, போக்குவரத்து, சுற்றுலாப் பயணம், மீன்வளப் பிடிப்பு போன்ற முக்கிய வாழ்வு, வர்த்தக, ஊழிய, உவப்புப் பணிகள் அனைத்தும், அணைகள் அமைக்கப் பட்டதால், ஓரளவு ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டாலும், பின்னால் அவை பெருமளவில் விருத்தி யடைந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.


1843 ஆம் ஆண்டு நைல் நதி தீரத்தில் அடுத்தடுத்து வரிசையாகக் கெய்ரோவுக்கு 12 மைல் தூரத்தில் நதிக் கீழோட்டச் சங்கமப் படுகையில் [Downstream Delta] பல திருப்பு அணைகள் கட்டத் தீர்மானிக்கப் பட்டது. அவ்விதம் செய்வதால் நதி மேலோட்ட [Upstream River] நீர் மட்டம் உயர்ந்து, வேளாண்மைக் கால்வாய்களுக்கு நீர் வெள்ளம் அனுப்ப முடியும். அத்துடன் நீர்ப் போக்குவரத்து வசதிகளையும் கட்டுப்பாடு செய்ய முடியும். 1861 ஆண்டு வரை 'சங்கம நதி அரண் ' [Delta Barrage] முழுவதும் கட்டி முடிக்கப் படாமலே இருந்தது. அதற்குப் பிறகு அதே நதி அரண் நீட்சியாகி செம்மைப் படுத்தப் பட்டது. 1901 இல் நைல் சங்கமப் பகுதி டாமைட்டா கிளையின் [Damietta Branch] பாதி தூரத்தில் ஸிஃப்டா நதி அரண் [Zifta Barrage] அந்த அமைப்புடன் சேர்க்கப் பட்டது. அடுத்து அசியட் நதி அரண் [Asyut Barrage] 1902 இல் முடிக்கப் பட்டது.


அஸ்வான் நைல் நதியின் முதல் எகிப்து நீர்வீழ்ச்சி [Cataract] ஆகும். அவ்விடத்தில் பழைய அஸ்வான் கீழ் அணையும் [Old Aswan Lower Dam], புதிய அஸ்வான் மேல் அணையும் [New Aswan Higher Dam] அஸ்வான் நகருக்கு அருகில் அமைந்துள்ளன. அஸ்வான் கீழணை (1899-1902) ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டது. அதன் நீர்மட்டச் சக்தியை இழுத்து, 345 மெகாவாட் மின்சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நீர்மின்சார நிலையம் ஒன்று நிறுவனமானது.


அஸ்வான் பேரணை உருவாகி வரும்போது, இடப்பெயர்ச்சியில் பாதிப்பான நபர்களின் எண்ணிக்கை 90,000! அஸ்வான் மேல் அணை கெய்ரோவுக்கு 600 மைல் நதி மேலோட்ட தூரத்திலும், கீழணைக்கு 3.6 மைல் தூர மேலோட்ட தீரத்திலும் (1960-1970) ஆண்டுகளில் அமைக்கப் பட்டது. நைல் நதி 1800 அடி அகலம் உள்ள இடத்தில் கட்டப் பட்டது, மேலணை. மேலணை நீர்மின்சக்தி நிலையத்தின் தகுதி 2100 மெகாவாட் மின்சார ஆற்றல்! பிரம்மாண்டமான அஸ்வான் மேலணையின் நீளம்: 12,000 அடி [3600 மீடர்] (2.3 மைல்)! அணையின் நீர் உயரம்: 370 அடி. மேலணையின் அடிப்பகுதி 0.6 மைல் [1 கி.மீடர்] அகலத்தில் கட்டப் பட்டிருக்கிறது! நதிநீர் மட்டத்திற்கு மேல் அணையின் விளிம்பு 330 அடி [100 மீடர்] உயரத்தில் உள்ளது.

அஸ்வான் அணைக்கரையில் சில அழகிய காட்சிகள்.




அணை குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை



உச்ச வெள்ள அடிப்பில் அணை வழியாகச் செல்லும் நீரோட்டம்: விநாடிக்கு 11,000 கியூபிக் மீடர்! அபாய நிலைக்கு நீர் உயரம் எழும்போது, விபத்தைத் தவிர்க்க 5000 கியூபிக் மீடர் வெளியேற்றும் 'அபாயத் திறப்பு வாய்கள் ' [Emergency Spillways] அமைக்கப் பட்டுள்ளன! அஸ்வான் மேலணை எழுப்பப் பட்டதால், 6000 சதுர கி.மீடர் பரப்புள்ள, செயற்கையான நீர்த் தேக்கம் 'நாஸர் ஏரி ' [Lake Nasser] உருவாகி உள்ளது! மாபெரும் நீர்த் தேக்கமான நாஸர் ஏரி 288 மைல் [480 கி.மீடர்] நீளமும், 10 மைல் [16 கி.மீடர்] அகலமும் கொண்டு, (150-165) கியூபிக் கி.மீடர் (cubic km) நீர்க் கொள்ளளவு உடையது. 


தற்போது அஸ்வான் மேலணையில் ஒவ்வொன்றும் 175 மெகா வாட் உற்பத்தி செய்து வரும், 12 நீர் டர்பைன் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன (மொத்தம்: 1680 மெகா வாட்). 1967 ஆண்டு முதல் தொடர்ந்து நீர் மின்சார நிலையங்கள் மின்சக்தி பரிமாறி வருகின்றன. நிலையத்தின் உற்பத்தி உச்சமான போது, எகிப்து நாட்டின் பாதியளவு மின்சக்தி ஆற்றலைப் பங்கெடுத்து, முதன்முதல் பெரும்பான்மையான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வழி வகுத்தது.


அணையில் தேக்கப்பட்டுள்ள நீர்

அணையிலிருந்து வெளிவரும் நைல்நதி

Friday, October 23, 2009

பல்லவனில்....

கற்றைவாழ் சடையாள்
நெற்றிக்கண்ணினை
சிறிதே காட்ட
சீண்டுவான்
இன்னுமஞ்சான்
செருப்படி படும் வரை....

Wednesday, October 21, 2009

பணிப்பளு...


ஊற்றாக தோன்றி
ஓடையாக உருவாகி
அருவியாய் விழுந்து
ஆற்றில் கலந்து
கால்வாய் பல கடந்து
கடலில் கலக்கும்போது
காணாமல் போகிறோம்
கடைசியில் நாம்.......

Sunday, October 18, 2009

தீபாவளி சிறப்பு விருந்து...

யாரு வீட்டு பார்ட்டி.... இது எங்க வீட்டு பார்ட்டி....

தீபாவளிக்கு சிறப்பு விருந்துன்னு முடிவு பண்ணி தடபுடலா ஏற்பாடு செஞ்சு பக்காவா பார்ட்டி கொண்டாடியாச்சு.உங்கள் பார்வைக்கு சில படங்கள்.


இப்படித்தான் முதல்ல டேபிள் அலங்காரம்..

கறி, மீன், பார்பிக்யூ ரெடியாகி...











மற்ற சைவ, அசைவ உணவு வகைகளும் டேபிளுக்கு வர...











எல்லோரும் களத்துல குதிச்சு....















இளைஞர்கள் ஒரு பக்கம்....











பெரியவர்கள் ஒரு பக்கமா....











அடிச்சு ஆடி அனைத்தையும் காலி பண்ணி தீபாவளியை கொண்டாடி முடிச்சோம்.

எங்களது இல்லம் இருப்பது அபார்ட்மெண்டின் கடைசி 16வது மாடி. எங்களது அபார்ட்மெண்ட்,அழகிய கடற்கரைச்சாலை அடுத்து கடல் என்ற அருமையான அமைப்பு. எந்த அறையில் இருந்து பார்த்தாலும் கடல்தான். இனிமையான அலையோசையோடு எப்போதும் குளிர்ந்த காற்று.

எங்கள் இல்லத்திலிருந்து சில இனிய காட்சிகள்.

அலை கடலும், அழகான சாலையும்.....











நீச்சல்குளம், சாலை, கடல்..











கேமரா மூலம் சில ஒளி விளையாட்டுகள்...
































இன்னுமொரு விருது

அண்ணாச்சி திரு.கிளியனூர் இஸ்மத் அவர்கள் இன்னுமொரு விருது வழங்கி சிறப்பித்துள்ளார். எனது படைப்புகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த "உல்லாசப் பறவை விருது" வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த விருது மேலும் பல வித்தியாசமான பகிர்வுகளையும், பயண அனுவங்களையும், கவிதைகள், தொடர்கதைகள் எழுதிடவும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. அண்ணாச்சிக்கு மிக்க நன்றி.

Saturday, October 17, 2009

தீபா”வலி”






அமெரிக்க அதிபர்
மலேசிய அமைச்சர்
நாட்டின் பிரதமர்
இன்னும் பல
தலைவரெல்லாம்
தொலைக்காட்சியில்
தீபாவளி வாழ்த்து
கூறினர்
இந்திய மக்களுக்கு.....

நானும் வாழ்த்து
கூறினேன்
தொலைபேசியில்
என் இனிய
குடும்ப மக்களுக்கு.....

--------------------------------------

தீபாவளிக்கு தீபாவளி
தேங்காய் பர்பி
செய்வார் என் அம்மா.


பள்ளிக்கு
எடுத்துச்சென்று
பகிர்ந்துண்ணுவேன்
பசங்களோடு..

படிப்பு முடித்து
பலநாடுகள்
சென்றேன்
பணிக்காக..

தீபாவளியுமில்லை...
தேங்காய் பர்பியுமில்லை...

----------------------------------------

எல்லா கதவுகளையும்
இழுத்தடைத்து
இருட்டறைக்குள்
இருந்தாலும்
வீல் வீல் என
வீறிட்டு அழுகிறது
வெடிச்சத்தத்திற்கு
பயந்த குழந்தை...

-------------------------------------

Friday, October 16, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


எல்லோருக்கும்

இனிய

தீபாவளி

நல்வாழ்த்துக்கள்...

Wednesday, October 14, 2009

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் – பாகம் 4 – அஸ்வான் பேரணை.

பாகம் 3

பாகம் 4 – அஸ்வான் பேரணை


எதுவுமே இல்லாத பாலைவனத்தில் எல்லா வசதிகளுடனும் எழிலாக இருந்த உணவகம்.









உணவகத்தில் சோளரொட்டியும், காரமாய் குழம்பும் இருந்தது. கொண்டு வரச்சொல்லி அமர்ந்தோம்.




















கொண்டுவந்த ரொட்டியை உணவகப் பணியாளர் அப்படியே டேபிளில் வைத்துச் செல்ல ஒட்டுநர் இருவரும் எடுத்து சாப்பிடச் சொல்ல எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நமது ஊரில் ஹோட்டல்களில் இலை ஓரம் கிழிந்தததற்கெல்லாம் எப்படி சண்டை போட்டிருக்கிறோம் இங்கே தட்டு கூட இல்லை அப்படியே வைத்து செல்கிறானே என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். சரி என்ன செய்ய இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ள வேண்டியதுதான் என்றவாறு சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.












ஒன்றரைமணி நேர பயணத்திற்குபின் அஸ்வான் அணையின் முகப்பை அடைந்தோம். அங்கே இருந்த பிரமாண்ட நினைவுச்சின்னம் எங்களை மிகவும் கவரவே இறங்கி பார்க்கச்சென்றோம்.





























அஸ்வான் அணை சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டதால் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட ஸ்தூபி அது. ஐந்து பெரிய பக்கவாட்டு சுவர்களும் உச்சியில் வட்டவடிமாக இணைக்கப்பட்டிருந்தன.





























ஒரு சுவரில் எகிப்து, சோவியத் ரஷ்யா நாடுகளின் அடையாள முத்திரை சின்னங்களோடு இரண்டு நாட்டு மொழிகளிலும் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. மற்ற சுவர்களில் எகிப்திய ஓவியங்கள் அழகாக வரையப்பட்டிருந்தன.




















நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஓட்டுநர் இருவரும் பணிநேர காவலாளியிடம் பேசி மேலே சென்று பார்க்க அனுமதி வாங்கி வந்தனர். லிப்டின் மூலம் மேலே சென்று பார்க்கலாம் என்று கூற கிடைத்த வாய்ப்பை விடவேண்டாம் என உடனே ஒப்புக்கொண்டோம். சுவரின் கீழ்பகுதியில் சிறிய கதவுடன் இருப்பதே லிப்ட் ஆகும். சுவர் பெரியதாக இருப்பதால் பார்க்க சிறிதாக தெரிகிறது. பத்துபேர் நிற்கும் அளவு பெரிய லிப்ட்தான்.









சோவியத் ரஷ்யா மற்றும் எகிப்து நாடுகளின் அதிகாரபூர்வ அரசாங்க அடையாளச் சின்னங்கள்.











மேல்புற வட்டவடிவ அமைப்பு.











மேலிருந்து கீழே பார்த்த சில காட்சிகள்...
வாகனங்கள் நிறுத்துமிடம்











அணையின் நடுவே ஒரு அரங்கு











அணையின் தடுப்புச்சுவரும் அதன்மேல் அமைக்கப்பட்ட அழகான சாலையும்











ஸ்தூபிக்கு வரும் பாதை - மேலிருந்து ஒரு பார்வை
வித்தியாசமான கோணத்தில் மேற்புற அமைப்பு


நினைவுச்சின்னத்தின் நினைவாக ஒரு குழுப்படம்
வித்தியாசமான கோணத்தில் கீழ்ப்புற அமைப்பு


ஸ்தூபியின் மேல்புற வட்டவடிவ அமைப்பு
அணையும், அணை சார்ந்த இடங்களும் - ஸ்தூபியின் மேலிருந்து கீழே சில காட்சிகள்













( பயணமும் படங்களும் தொடரும்.... )