Saturday, September 23, 2006

பகல்நிலவு


பகலில்
என்ன
நிலவு ??!!.

ஓஓஓ !!!.

என்னவள்
எதிரில்
வருகிறாள்.

Sunday, September 17, 2006

மயக்கம்



மயில்
ஆடி
மயக்கும்.


குயில்
பாடி
மயக்கும்.


கிளி
பேசி
மயக்கும்.


என்னவளோ
ஒரு பார்வையிலே
மயக்கிவிட்டாள்
என்னை.


Monday, August 28, 2006

பெரியோர்

இட்டார்
பெரியோர்.


இடாதார்
இழிகுலத்தார்.


வா அன்பே !


நாம்
இருவரும்
முத்தம்
இட்டு
காதலில்
பெரியோர்
ஆகிவிடலாம்.

Sunday, August 27, 2006

உண்மை


பூமி
சூரியனை
சுற்றி
இயங்குகிறதாம்.

சந்திரன்
பூமியை
சுற்றி
இயங்குகிறதாம்.

இதெல்லாம்
உண்மையோ,
இல்லையோ.
என் அன்பே !

நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.

Friday, August 25, 2006

இதயத்துடிப்பு



எல்லோர்
இதயமும்

'லப் டப்'
என்றுதான்
துடிக்குமாம்.

என்னவள்
இதயமோ

என்னிரு
பெயரை
சொல்லி
துடிக்கிறதாம்!!.


இக்கவிதை என் துணைவி ஆங்கிலத்தில் எழுதியது.
அதை நான் என் பார்வையில் எழுதினேன்.
அவர்கள் எழுதியபடி கீழே.

HeartBeat

Usually
HeartBeat
is 'Lup tup'.

But My
Heartbeat is
'Raja Ramu'.

Wednesday, August 23, 2006

ஏன் தெரியுமா ??!!.


இப்போதெல்லாம்
சுறுசுறுப்பாக
ஏதாவது
செய்துகொண்டே
இருக்கிறேன்.

ஏன் தெரியுமா ??!!.

சும்மா இருந்தால்
உன் நினைவுகள்
வந்து என்னை
மிகவும்
சோர்வடைய
செய்யுதடி!!.

Tuesday, August 22, 2006

சுவையானது


அணில் கடித்த பழம்தான்
மிகச்சுவையானது
என நினைத்திருந்தேன்.

அவள் அருந்திய
உணவின் மிச்சத்தை
நான் உண்ணும் வரை.

Monday, August 21, 2006

கவர்ச்சி


நிலாக்கன்னியிடம்
அப்படி என்ன
கவ்ர்ச்சி ??!!.

அவளைச்
சுற்றிமட்டும்
அத்தனை
நட்சத்திரக்காளையர்கள் !!.

Tuesday, August 15, 2006

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்







அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Friday, August 04, 2006

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.


உலகெங்கும் வருடா வருடம் ஆகஸ்ட் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை "நண்பர்கள் தினம்" கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததுதான். இணையம் மூலம் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்ததால்,இந்த வருடம் எனக்கு மிகவும் இன்பமான வருடம்.

மதுமிதாவுக்கான பதிவில் " அத்தனையும் முத்து. நண்பர்கள்தான் நான் சேர்த்த சொத்து " என்று கூறியிருந்தேன்.ஆம்.நல்முத்து கிடைப்பது கடினம். நல்ல நண்பர்கள் கிடைப்பது மிக மிக கடினம்.

பெற்ற நண்பர்களை பேணிக்காப்போம்.

அனைவருக்கும் இனிய மனம்கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Monday, July 31, 2006

திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!.


சாதாரண பயணம்
'சரித்திரம்' படைத்துவிட்டது.

ஆம் நண்பர்களே !
விடுமுறையில் சென்றவன்
'விதி'முறைகளுக்குள் சென்றுவிட்டேன்.

ஊருக்கு செல்வதைப்பற்றி
ஏற்கனவே ஒரு தனிப்பதிவு இட்டிருந்தேன்.

சென்ற இடத்தில் திருமணம்
நிச்சயமானது.தங்கள் அனைவருக்கும்
அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன்.

க.பி.கவ.வா.ச. சார்பிலும்
திருமணசெய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சிட்னியிலிருந்து நண்பர் கானா பிரபா,
சூடானிலிருந்து தோழர் நாகை சிவா
மற்றும் பல அயல்நாட்டு நண்பர்கள்
கைபேசியில் அழைத்து வாழ்த்திட்டனர்.

எனதினிய நண்பன் பாலபாரதி,
ப்ரியன்,ராஜஸ்தானிலிருந்து நம்ம
தல கைப்புள்ள, லிவிங் ஸ்மைல் வித்யா,
தேவு, விவசாயி இளா, பார்த்திபன்,
கட்டதுரை மற்றும் பல நண்பர்கள்
உள்நாட்டின் பலபகுதிகளிலிருந்தும்
உளமார்ந்த வாழ்த்து கூறினர்.

தங்கத்தளபதி நாமக்கல் சிபி
காலை,மாலை,மதியம்,இரவு என
நினைத்தபொழுதெல்லாம் அழைத்து
என்னை அன்பில் நனைத்துவிட்டார்.

க.பி.க,வ.வா.ச பதிவுகளிலும்
மற்றும் எனது வலைப்பதிவிலும்
பல நண்பர்கள் பின்னூட்ட
வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து
துபாய் திரும்பி வந்தாயிற்று.

இணையமெங்கும் எனது
திருமணச்செய்தியை
சிறப்பாக பரப்பிட்ட
க.பி.கழக கண்மணிகள்,
வ.வா.சங்க சிங்கங்கள்
அனைவரையும் வாழ்த்தி
வணங்குகிறேன்.

திருமணத்திற்கு நேரில் வந்து
வாழ்த்திய அன்பர்கள்,
கைபேசியில் அழைத்து
வாழ்த்திட்ட நண்பர்கள்,
இணையம் மூலம்
மனமார்ந்த மணநாள்
வாழ்த்துக்கள் தெரிவித்த
அன்பார்ந்த 'தமிழ்மணம்'
வலைபதிவு நண்பர்கள்
அனைவருக்கும் 
 நன்றி! நன்றி!! நன்றி!!!.

Monday, July 03, 2006

மணவிழா அழைப்பு




வணக்கம் நண்பர்களே!

தாயக வருகை எப்போதுமே ஒருவித உற்சாகத்தை கொடுக்கக் கூடியதுதான் என்றாலும்..

இந்த முறை அந்த உற்சாகம் கூடுதலாகிப் போனதிற்கு காரணம் எனக்கு பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தியும் தான்.

எல்லாம் நல்ல படியாக முடிந்து இம் மாதம் 12ம் தேதி என் வாழ்க்கைத் துணையாக ரேவதியை கரம் பற்றுகிறேன்.

வாழ்க்கைத்துணை எப்படி இருப்பாங்கன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஆனா.. இன்னும் கூட சொல்லவேண்டியவை நிறைய இருக்குன்னு பார்த்த பின் தான் உறைத்தது. அவை பற்றி பிறகு.




எல்லோருக்கும் நேரில் வந்து தான் அழைப்பு வைக்க ஆசை.. ஆனால் என்ன செய்வது..  யதார்த்தத்தில் நாம் நினைப்பது போலவா எப்போதும் நடக்க முடிகிறது! எனவே நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..
எல்லோருக்குமான பொது அழைப்பாக இதனை வைக்கிறேன்.

அவசியம் வாங்க! வாழ்த்தை தாங்க!

நினைவுக்கு: மணவிழாவுக்கு வருகை தரும் நண்பர்கள் முன்னமே தகவல் தெரிவித்து விட்டால்.. தங்கும் இடத்திற்கும், உணவிற்கும் சரியான ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். அதோடு குற்றாலம், நெல்லையைச் சுற்றி இருக்கும் சுற்றுலத் தளங்களையும் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிருக்கு..

அப்ப வரீங்க தானே...

தொடர்பு கொள்ள வேண்டிய                                                                                                    கைபேசி எண்:- 94439 77076.


Thursday, June 08, 2006

மதுமிதா என்னையும் விட்டுறாதீங்கோ

வலைப்பதிவர் பெயர் : (துபாய்)ராஜா.

வலைப்பூ பெயர் : ராஜா சபை.

சுட்டி(url) : http://rajasabai.blogspot.com/

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர் : திருநெல்வேலி.

நாடு : இந்தியா

வலைப்பூ அறிமுகம்
செய்தவர் : நிலவுநண்பன்.

முதல் பதிவு
ஆரம்பித்த நாள்,வருடம் : 02.06.2006.

இது எத்தனையாவது பதிவு : 5.

இப்பதிவின் சுட்டி(url) :
http://rajasabai.blogspot.com/2006/06/blog-post_08.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : என் எண்ணங்களை,அனுபவங்களை
அனைவருடனும் பகிர்ந்துகொள்ள.

சந்தித்த அனுபவங்கள் : கணக்கில் வராது அந்த கணங்கள்..

பெற்ற நண்பர்கள் : அத்தனையும் முத்து.நண்பர்கள்தான்
நான் சேர்த்த சொத்து.

கற்றவை : இதுவரை பார்த்து,படித்து,பழகியதெல்லாம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : சிதறும் சிந்தனைகளை சேர்க்கலாம்.

இனி செய்ய நினைப்பவை : நிறைய எழுதவேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு : எல்லோருக்கும் நல்ல நண்பன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் :

இணையதளத்தில் இனிய உலகம் உருவாக்குவோம்.

அன்புடன்,

(துபாய்) ராஜா.

Wednesday, June 07, 2006

தாய் மண்ணே வணக்கம்..!!


ஒருவாறாக 
ஒன்றரை 
வருடங்களுக்குப் பின்
ஓடோடி வருகிறேன்
உன்னை காண!!.


எண்ணிப்பார்க்கிறேன்!!.
இத்தனைகாலம் எப்படி
நான் இருந்தேன்?.
என் தாயே உன்னைப் பிரிந்து!!.


படிப்பு,பணி காரணமாக
வீட்டைவிட்டு வெளியே வந்து
ஆண்டுகள் பன்னிரெண்டு 
 ஆகியிருந்தாலும்
இத்தனைகாலம் பிரிந்தது
இல்லையம்மா உன்னைவிட்டு!!


ஆண்டு தொடக்கத்திலேயே
அன்னைநாட்டிற்கு சென்றுவா!!
என்று துறைத்தலைவர்
உரைத்தபோதும்
இப்போது இல்லை
என மறுத்துவிட்டேன்!!.


திடீரென சென்றவாரம்
உன்னைகாண செல்லவேண்டும்
என்றதும் ஒருவார்த்தைபேசாமல்
உடனே கையொப்பமிட்டார்.
விடுப்புவிண்ணத்தில்!!.


உள்ளக்கடுப்படைந்தார்
உடன்பணிபுரிவோர்
கறுப்புஎண்ணத்தில்!!.


அன்னைக்கு என்ன வேண்டும்?
தந்தைக்கு என்ன வேண்டும்?
அழைத்திட்டேன் தொலைபேசியில்!!.
அன்புமகன் நீ அருகில் இருந்தால்
அதுபோதும் எங்களுக்கு
என்றாரே எம்பெற்றோர்!!.


சிரிப்பழகி சிநேகாபோல்
சிட்டான பெண் ஒன்று
பார்த்திருப்பதாக
செப்பினாள் என்சோதரி!!.


சிநேகாவிற்கு கூட சிரித்தால்
கண்சுருங்குமாம்.பல்விரியுமாம்.
இப்பெண் அதைவிட அழகு!.
என இயம்பிட்டாள் என் தமக்கை!!.


கொஞ்சம் உயரமுடன்
நிறைய உண்மையுடன்
இருந்தால் மட்டும்
போதுமெனக்கு
என்று உரைத்திட்டேன்
உடன்பிறந்தாளிடம்!!.


ஆழிப்பேரலை அடிக்கடி
அச்சுறுத்தும் பூகம்பபூமியில்
புரிகின்றான் பணி
என் அண்ணன்!!.


என்பயணம் அறிந்தவுடன்
எடுத்துவிட்டான் அவனும்
பாசத்தை பங்குகொள்ள
பறக்கும் உலோகப்பறவயில்
பயணச்சீட்டு!!.


ஊர் சென்றதும்
நண்பரையெல்லாம்
சந்திக்க நான் குறித்தேன்
நாள்கணக்கு!!.


ஐநான்கு தினம் பத்தாது!!
அவ்வளவு ஆள் கணக்கு!!.


இன்னும் இரண்டுநாள் தான்
இருக்கிறது இங்கிருந்து
நான் கிளம்ப!!.


எத்தனையோ இருக்கிறது
உங்களிடம்தான் விளம்ப!!.


இப்போது பெறுகிறேன்
உங்களிடமிருந்து
அன்புவிடை!!.


ஊர்சென்று வந்ததும்
விரிக்கிறேன்
எனதுஎண்ணக்கடை!!.


அன்புடன்,

(துபாய்) ராஜா.

Sunday, June 04, 2006

'தமிழ்மணம்' நண்பர்கள்.....


தமிழ்மணத்தில் முதலில் ஆங்கிலத்திலும்,பின் தமிழிலும் பின்னூட்டம் இட்டு வந்தேன். ப்ளாக்கர் கணக்கு இல்லாததால் 'அனானி' வாய்ப்புள்ள பதிவுகளில் மட்டுமே பின்னூட்டம் இட முடிந்தது. பல பதிவர்களும் பதிலும் கொடுத்து, தனிவலைப்பூ தொடங்கவும் அறிவுறுத்தினார்கள்.அவர்களில் நிலவு நண்பன், ஜொள்ளுப்பாண்டி, பாலபாரதி, கானாபிரபா போன்ற நண்பர்கள் குறிப்பிடத் தகுந்தோர். மேலும் திரு.காசி, திரு.மணியன், திரு.தேசிகன், இளவஞ்சி, ராகவன், பிரசன்னா, மற்றும் பல நண்பர்களோடு பின்னூட்டத் தொடர்பு உள்ளது.


வலையுலகப்  பெரியவர்கள்  திரு.தருமி,  திரு.டோண்டு,  திரு.ஜோசப் மற்றும் லக்கிலுக், டுபுக்கு, பரஞ்சோதி போன்ற பல பதிவர்களோடு எனக்கு 'ஏகலைவன்' தொடர்பு. ஆம்! இவர்கள் அனைவரது அனுபவப் பதிவுகளையும் நான் விரும்பி படித்துள்ளேன். ஆனால் மிகத்தாமதமாக படித்ததனால் பின்னூட்டங்கள் இட்டதில்லை. நானும் இணையஉலகில் எழுத முனைந்ததற்கு இவர்களது பதிவுகள் தூண்டுதலாக இருந்தன.அதைப் பற்றியெல்லாம் வரும் பதிவுகளில் எழுதுவேன்.


'நிலவு நண்பனும் நானும்' ஒத்த கருத்துள்ளவர்கள் என்பதால் ஏற்கனவே பல விடயங்களை பகிர்ந்துள்ளோம். வரும்காலத்தில் அவர் மூலம் பல சிறந்த படைப்புகளும், வரலாற்று தொடர்களும் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


நண்பர் 'ஜொள்ளுப்பாண்டி'யோடு ஏற்பட்ட பின்னூட்டதொடர்பின் காரணமாக வருத்தப்படாத வாலிபர் சங்கமும், அதன் தீவிர உறுப்பினர்களான தேவ், கைப்புள்ள, சிபி, இளா, சிவா, பொன்ஸ், கார்த்தி மற்றும் பல நண்பர்கள் அறிமுகமானார்கள். சங்கத்தின் வளைகுடா கிளைச் செயலர் பொறுப்பும் கிடைத்தது. ஒருதடவை சங்கத்துக்கு வாங்க. 100% மனமகிழ்ச்சிக்கு நாங்க கியாரண்டி.

பாலபாரதி கைமுறிவினால் தற்போது ஓய்வில் உள்ளார். விரைவில் பல வித்யாசமான பதிவுகளோடு வருவார்.

தமிழ் இணையஉலகில் வளைய வரும் பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அனைத்து நண்பர்களோடும் நெருங்கிய நண்பனாய் பழகவேண்டும் என்பதே என் ஆசை.

அன்புடன்,

(துபாய்) ராஜா.

வலைபதிய வந்த கதை!!!!!!.


எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகள் போல கற்றுக்கொள்ளவேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள்.

ஒரு குழந்தையானது இப்பூமியில் பிறந்தவுடன் எந்த ஒரு கவலையும் இல்லாமல் வேளைக்கு உண்டு உறங்குகிறது.பின் சுற்றுப்புறம் நடப்பவற்றை மற்றும் காண்போர் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறது. பின் தானும் அவர்களைப் போல பேச மழலை மொழி எழுப்புகிறது. பின் நன்றாக பேசி, ஊர்ந்து, எழுந்து, விழுந்து ,நடந்து சராசரி மனித  வாழ்க்கைக்கு வந்து விடுகிறது.

அதுபோல்தான் நானும் 'தமிழ்மணம்' அறிமுகமானவுடன் எல்லோரது பதிவுகளையும் படித்து மட்டும் வந்தேன்.பின் பிடித்த பதிவுகளுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். நான் இட்ட பின்னூட்டங்களுக்கு பதிவர்கள் பதில் கொடுப்பதை கண்டு உற்சாகமானேன். தமிழில் எழுதவும் ஆரம்பித்தேன்.

இப்போது 'பிளாக்கர் கணக்கும், தனி வலைப்பதிவும் தொடங்கியாயிற்று. இனி நான் எழுதிய கவிதைகள், எனக்கு தெரிந்த கதைகள், அனுபவங்கள் எல்லாவற்றையும் இங்கு எடுத்துவிட வேண்டியதுதான்.

அன்புடன்,

(துபாய்) ராஜா.

Friday, June 02, 2006

தோ நானும் வந்துட்டேன்.... - (துபாய்) ராஜா


அன்பு வலைப்பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம்.

எனது பெயர் ராஜா.சொந்த ஊர் திருநெல்வேலி .மின் மற்றும் மின்னணு பொறியியல் படித்தவன்.தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.

எல்லாம் உன்னோட 'ப்ரொபைல்லே' பார்த்தாச்சு. விஷயத்திற்கு வா என்கிறீர்களா!!. தோ வந்துட்டேன்!!!!.

கடந்த பல ஆண்டுகளாக 'வலை உலகில்' வளைய வருபவன் என்றாலும் 'தமிழ்மணம்' அறிமுகமானது சற்று தாமதமாகத்தான்.

'தமிழ்மணம்' அறிமுகமானவுடன் எல்லோரது பதிவுகளையும் படித்து மட்டும் வந்தேன்.பின் படித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். பலரது அறிமுகமும், நட்பும் கிடைத்தது. என்னையும் சில நண்பர்கள் எழுத தூண்டினார்கள்.

வலைப்பதிவர்கள் பலரும் தங்களது சொந்த அனுபவங்களையே சுவையாக எழுதி வருவதை கண்டேன். சிறுவயதிலும் மற்றும் பணி காரணமாகவும் எனக்கு ஏற்பட்ட பயணங்கள்,பலதரப்பட்ட சூழ்நிலைகள், சந்தித்த மக்கள் ஆகிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இப்போது வந்துள்ளேன், 


உங்களது அன்பும்,ஆதரவும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையில் இனி நானும் உங்களோடு.......!!!!!

அன்புடன்,

(துபாய்) ராஜா.