Wednesday, April 18, 2012

நம்ம வீட்டு கல்யாணத்தில் சந்திப்போம்...



பதிவுலக பண்பாளரும், பாசத்தில் சிறந்தவரும், பழக்கத்தில் குணம் நிறைந்தவருமான உயர்திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் இல்லத்திருமணம் 25.04.2012 புதன்கிழமை, திருநெல்வேலி செல்வி மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. ஏற்கனவே அவரது வலைப்பூவிலும் திருமண அழைப்பிதழை இட்டுள்ளார். பதிவுலக சொந்தங்கள் பலரும் வருகை தர உள்ளனர். நெல்லையின் மிகப்பெரிய பதிவர் சந்திப்பாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நாளை இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்புகிறேன். 20.04.2012 வெள்ளி முதல் 28.04.2012 சனிக்கிழமை  வரை நெல்லையில்தான் இருப்பேன். திருமணத்திற்கு வருகை தரும் நண்பர்கள் 0091-94891 53344 என்ற எண்ணில் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.

வாருங்கள் நண்பர்களே…. நம்ம வீட்டு கல்யாணத்தில் சந்திப்போம். 

நன்றி.வணக்கம்.