Wednesday, October 21, 2015
Wednesday, October 14, 2015
250-வது பதிவு –எழுத வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன…
எழுத்தும்
படிப்பும்
இயல்பு
வாழ்க்கையிலிருந்து
நம்மை
இழுத்துச் செல்ல
எப்போதும்
காத்திருக்கும் சுழல்கள்..
அவை
இரண்டும் இணைய
அரிதாக
அமைய வேண்டும்
அமைதியான
வாழ்க்கைச் சூழல்கள்…
வெளிப்பார்வைக்கு
நதியானது சலனமற்று அமைதியாக இருப்பது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே நீரோட்டம் இருந்து
கொண்டுதான் இருக்கும். அதுபோலவே மானிடர்தம் வாழ்வும் வழக்கமான அன்றாட வேலைகளில் பரபரப்பாக
இருப்பது போல் தெரிந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனித மனமானது குழந்தைப் பருவம்
முதல் தற்போதைய காலம் வரை நம் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை இன்றைய நிலையோடு பொருத்திப்
பார்த்து அசை போட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட அனுபவங்களையே ரிஷிக்களும்,
மகான்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் கவிதைகளும், கதைகளும், காவியங்களுமாய் எழுதி
வைத்து விட்டுச் சென்றனர். அப்படிப்பட்ட உணர்ச்சிகரமான உயிரோட்டங்களைப் படித்த தாக்கத்தில்தான் உலகம் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த காலத்தில் பத்திரிக்கைகள், நூல்கள் போன்ற படைப்புகளின் மூலம் இணையற்ற எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் தோன்றி, பெருகி பரவலாயினர்.
படிப்பதைப் போல எழுத்தும்
ஒரு போதை ஆகும். எழுத நினைப்பதை அவ்வப்போது எழுதி சரியாக தொகுத்து சேர்மான தகவல்கள்
சரியாக சேர்த்து பொதுவில் கொண்டு வருமுன் நாமே பல முறை படித்து படித்து பார்த்து பின்
மற்றவர் பார்வைக்கு தந்தால் எண்ண ஊறல் படிக்கும் எல்லோருக்குமே போதை தரும். தற்போதைய நவீன காலத்தில் சாதாரண மக்கள் முதல்
பிரபலங்கள் வரை தங்கள் சம்பந்தமான நிலைத் தகவல்கள், அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களைப்
பகிர்ந்து கொள்ள ட்விட்டர், பேஸ் புக், கூகுள் ப்ளஸ், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என
எத்தனையோ வசதிகள் இருப்பது போல் பத்து ஆண்டுகளுக்கு
முன் இருந்த வசதி ப்ளாக்கர் எனப்படும் பதிவுலகம் ஆகும்.
பிரபலமான
பதிவர்களின் பதிவுகளையும், பகிர்வுகளையும் படித்து ஆர்வத்தில் பதிவரானவர் பலர். அப்படி
என்னோடு எழுத வந்தவர்களில் பலரும் இப்போது பதிவுலகில் இல்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக
பதிவுகள் எழுதி வந்தாலும் நான் கூட அவ்வப்போது பணிப்பளு மற்றும் சூழ்நிலை காரணமாக சில
ஆண்டுகள் எழுதாமல் இருந்திருக்கிறேன் என்றாலும் தமிழ்மணம் மூலம் பதிவுகள் படிக்கத்
தவறுவதில்லை. குறையாத ஆர்வத்தின் காரணமாக பணிப்பளு குறைந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம்
படிப்பு, எழுத்து என பதிவுலகத்தில் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதால் புதிது, புதிதாக
நண்பர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றனர்.
ஐம்பதாவது பதிவு மற்றும் நூறாவது பதிவிலே எழுத வந்த காரணம், ஆர்வம் குறித்து எழுதி விட்டதால் நான் எழுதியவற்றில் சில முக்கியமான பதிவுகளை
கீழே தொகுத்துள்ளேன்.
ஒரு இனிய காதல் தொடர்கதை
சில குளிர்ச்சியான கவிதைகள்
பயணப்பதிவுகள்
விறுவிறுப்பான திகில் கதைகள்
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக நான் எழுதிய படைப்புகள்
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
இது வரை பணிக்காக பல நாடுகள் சென்று தாய்மொழி பேச வழியில்லாமல், உற்றார், உறவினர், ஊர்,
பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, மக்கள், நல்லது, கெட்டது அனைத்தையும் இழந்து வெளிநாடுகளில்
வாழு(டு)ம் போது மட்டும்தான் கதை, கவிதை என படைப்புகள்
எழுதி வந்தேன். இனி ஊரில் இருக்கும் போதும் தொடர்ந்து எழுத வேண்டும் என எண்ணம் கொண்டு பல தலைப்புகளிலும் குறிப்புகளை தொகுத்து வைத்து உள்ளேன். தமிழ்த்தாயின் தயவும், காலதேவனின் கருணையும், அன்பு
நண்பர்கள் உங்கள் ஆதரவும் இருந்தால் எழுத்துலகில் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்
......
நன்றி. வணக்கம்.
என்றென்றும் அன்புடன்
அன்பன்
துபாய் ராஜா.
Friday, October 09, 2015
கூத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்...
பத்து ஆண்டு காலத்திற்கு பின் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்புகள் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற, சட்ட மன்ற தேர்தல் ஏற்பாடுகளை விட விறுவிறுப்பாக இருப்பதால் பத்திரிக்கைகள் போட்டி போட்டு கொண்டு செய்திகளை வழங்கி 'கூத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்' என பழமொழியையே மாற்றி விட்டன.
'சங்கம் களவு போயிடுச்சு... மீட்டெடுக்கப் போறாம்'- சரத் அணியைச் சீண்டும் வடிவேலு!
ராதிகா பொங்கி எழுந்ததன் பின்னணி: திரைமறைவில் நடந்த சம்பவங்கள் அம்பலம்
ராதிகா பொங்கி எழுந்ததன் பின்னணி: திரைமறைவில் நடந்த சம்பவங்கள் அம்பலம்
ராதிகா, சிம்புவுக்கு நன்றி: விஷால் குஷால்!
நாட்டிலேயே அதிகமாக சம்பாதிக்கும் நடிகர்ளுக்கு இடையே என்ன பிரச்சினை என்று அலசி, ஆராய்ந்து தினம் தினம் நூறு தகவல்கள் தரும் பத்திரிக்கைகள் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கும் தேவையான முக்கியவத்தை கொடுக்குமாறு பணியாற்றி பத்திரிக்கை தர்மம் நிலைக்க செய்வார்களா என்பது பாமர மக்களோடு, படித்த மக்களின் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.
Tuesday, October 06, 2015
காதல் பா(ர்)வை
உலையில் கொதிக்கும்
அரிசி போல
ஒய்யாரி நீ
பார்க்கையில்
என் நிலையில்
பல மாற்றங்கள்...
உருட்டி விழித்திடும்
காதல் கன்னி
உன் கண்வரிசை
காட்டிடும்
சில தோற்றங்கள்...
உற்று நோக்கிட்டாலும்
காதல் மாணவன்
எனக்கு
எப்போதும் புரிந்திடா
கணித தேற்றங்கள்...
துணிந்து தோழி நீ
துணை வந்தால்
துல்லியமாய் ஏறிடலாம்
நம் வாழ்வில்
பல ஏற்றங்கள்…
Saturday, October 03, 2015
Friday, October 02, 2015
காதல் நினைவு...
நினைவு
தெரிந்த நாள்
முதல்
தலைமுடியை
தூக்கி வாரி
வணங்காமுடியாய்
வளைய வருவதுதான்
என் பழக்கம்...
ஒரு தீபாவளித் திருநாளில்
எனது வீட்டிற்கு
வந்து
திரும்பும் உன்னை
பேருந்துநிலையம்
வரை
வழியனுப்ப
நானும்
உடன் நடந்து
வந்து கொண்டிருந்தேன்...
ஆளில்லா இருட்டுச்சாலை
அந்திக்கருக்கல்காற்றில்
அலைந்து கலைந்திருந்த
என் தலைமுடியை
மேலும் கலைத்து
பணியச் செய்து
பார் இப்போது
முன்னை விட
அழகாகி விட்டாய்
என்றாய்…
அன்று முதல்
மாறியது
என்
தலை எழில்
மட்டுமல்ல …
காதல் கன்னி
உன்
கை பட்டு
தடதடத்து
தடுமாறிப்
போனது
என்
தலை எழுத்தும்
கூடத்தான்…
Subscribe to:
Posts (Atom)