ஒருவாறாக
ஒன்றரை
வருடங்களுக்குப் பின்
ஓடோடி வருகிறேன்
உன்னை காண!!.
எண்ணிப்பார்க்கிறேன்!!.
இத்தனைகாலம் எப்படி
நான் இருந்தேன்?.
என் தாயே உன்னைப் பிரிந்து!!.
படிப்பு,பணி காரணமாக
வீட்டைவிட்டு வெளியே வந்து
ஆண்டுகள் பன்னிரெண்டு
ஆகியிருந்தாலும்
இத்தனைகாலம் பிரிந்தது
இல்லையம்மா உன்னைவிட்டு!!
ஆண்டு தொடக்கத்திலேயே
அன்னைநாட்டிற்கு சென்றுவா!!
என்று துறைத்தலைவர்
உரைத்தபோதும்
இப்போது இல்லை
என மறுத்துவிட்டேன்!!.
திடீரென சென்றவாரம்
உன்னைகாண செல்லவேண்டும்
என்றதும் ஒருவார்த்தைபேசாமல்
உடனே கையொப்பமிட்டார்.
விடுப்புவிண்ணத்தில்!!.
உள்ளக்கடுப்படைந்தார்
உடன்பணிபுரிவோர்
கறுப்புஎண்ணத்தில்!!.
அன்னைக்கு என்ன வேண்டும்?
தந்தைக்கு என்ன வேண்டும்?
அழைத்திட்டேன் தொலைபேசியில்!!.
அன்புமகன் நீ அருகில் இருந்தால்
அதுபோதும் எங்களுக்கு
என்றாரே எம்பெற்றோர்!!.
சிரிப்பழகி சிநேகாபோல்
சிட்டான பெண் ஒன்று
பார்த்திருப்பதாக
செப்பினாள் என்சோதரி!!.
சிநேகாவிற்கு கூட சிரித்தால்
கண்சுருங்குமாம்.பல்விரியுமாம்.
இப்பெண் அதைவிட அழகு!.
என இயம்பிட்டாள் என் தமக்கை!!.
கொஞ்சம் உயரமுடன்
நிறைய உண்மையுடன்
இருந்தால் மட்டும்
போதுமெனக்கு
என்று உரைத்திட்டேன்
உடன்பிறந்தாளிடம்!!.
ஆழிப்பேரலை அடிக்கடி
அச்சுறுத்தும் பூகம்பபூமியில்
புரிகின்றான் பணி
என் அண்ணன்!!.
என்பயணம் அறிந்தவுடன்
எடுத்துவிட்டான் அவனும்
பாசத்தை பங்குகொள்ள
பறக்கும் உலோகப்பறவயில்
பயணச்சீட்டு!!.
ஊர் சென்றதும்
நண்பரையெல்லாம்
சந்திக்க நான் குறித்தேன்
நாள்கணக்கு!!.
ஐநான்கு தினம் பத்தாது!!
அவ்வளவு ஆள் கணக்கு!!.
இன்னும் இரண்டுநாள் தான்
இருக்கிறது இங்கிருந்து
நான் கிளம்ப!!.
எத்தனையோ இருக்கிறது
உங்களிடம்தான் விளம்ப!!.
இப்போது பெறுகிறேன்
உங்களிடமிருந்து
அன்புவிடை!!.
ஊர்சென்று வந்ததும்
விரிக்கிறேன்
எனதுஎண்ணக்கடை!!.
அன்புடன்,
(துபாய்) ராஜா.