வலைப்பதிவர் பெயர் : (துபாய்)ராஜா.
வலைப்பூ பெயர் : ராஜா சபை.
சுட்டி(url) : http://rajasabai.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர் : திருநெல்வேலி.
நாடு : இந்தியா
வலைப்பூ அறிமுகம்
செய்தவர் : நிலவுநண்பன்.
முதல் பதிவு
ஆரம்பித்த நாள்,வருடம் : 02.06.2006.
இது எத்தனையாவது பதிவு : 5.
இப்பதிவின் சுட்டி(url) :
http://rajasabai.blogspot.com/2006/06/blog-post_08.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : என் எண்ணங்களை,அனுபவங்களை
அனைவருடனும் பகிர்ந்துகொள்ள.
சந்தித்த அனுபவங்கள் : கணக்கில் வராது அந்த கணங்கள்..
பெற்ற நண்பர்கள் : அத்தனையும் முத்து.நண்பர்கள்தான்
நான் சேர்த்த சொத்து.
கற்றவை : இதுவரை பார்த்து,படித்து,பழகியதெல்லாம்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : சிதறும் சிந்தனைகளை சேர்க்கலாம்.
இனி செய்ய நினைப்பவை : நிறைய எழுதவேண்டும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு : எல்லோருக்கும் நல்ல நண்பன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் :
இணையதளத்தில் இனிய உலகம் உருவாக்குவோம்.
அன்புடன்,
(துபாய்) ராஜா.
Thursday, June 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தங்களையும் ஆறு பதிவு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்..
பங்கு பெறவும்...
லிவிங் ஸ்மைல்..
ராசா, நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாப்பா. உன்ன ஆறு பதிவு விளையாட்டிற்கு கூப்பிட்டு இருக்கின்றேன். வந்தவுடன் சமத்தாக நீயும் ஒரு பதிவ போட்டு விடு. முடிந்தால் இந்தியாவில் இருந்தபடியே போடு. வீட்டுல எல்லாத்தையும் கேட்டதா சொல்லு மக்கா....
http://tsivaram.blogspot.com/2006/06/blog-post_17.html
அட, நீங்கள் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையா ? நானும்் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன்.
ஒரு பதிவு போட்டா மூன்று பேருக்கு மகிழ்ச்சி தரலாம் :)
அடடே.. உங்க வலைப்பூவா துபாய் ராஜா.. சொல்லவே இல்லியே.. வலைப்பூ துவங்கியதற்கு வாழ்த்துக்கள்!
மன்னிக்கவும்.. நீங்க எனக்குத் தெரிஞ்ச துபாய் ராஜா இல்லைன்னு நினைக்கிறேன்! அவர் தான்னு நினைச்சு எழுதிட்டேன். இன்னிக்கு என்னடான்னா துபாய் ராஜாவுக்குக் கல்யாணம்னு யாரோ பதிவு போட்டிருக்காங்க, நீங்க வேற கல்யாண அழைப்பு பதிவு போட்டிருக்கீங்க! இன்னொரு துபாய் ராஜாவுக்குக் கல்யாணமாகி ராகுல்னு ஒரு பையன் இருக்கான் :-)
பின்னூட்டமிட்டு வாழ்த்திய நண்பர்கள்
லிவிங் ஸ்மைல், நாகை சிவா, மணியன் சார்,சேதுக்கரசி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
Post a Comment