Monday, July 03, 2006

மணவிழா அழைப்பு
வணக்கம் நண்பர்களே!

தாயக வருகை எப்போதுமே ஒருவித உற்சாகத்தை கொடுக்கக் கூடியதுதான் என்றாலும்..

இந்த முறை அந்த உற்சாகம் கூடுதலாகிப் போனதிற்கு காரணம் எனக்கு பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தியும் தான்.

எல்லாம் நல்ல படியாக முடிந்து இம் மாதம் 12ம் தேதி என் வாழ்க்கைத் துணையாக ரேவதியை கரம் பற்றுகிறேன்.

வாழ்க்கைத்துணை எப்படி இருப்பாங்கன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஆனா.. இன்னும் கூட சொல்லவேண்டியவை நிறைய இருக்குன்னு பார்த்த பின் தான் உறைத்தது. அவை பற்றி பிறகு.
எல்லோருக்கும் நேரில் வந்து தான் அழைப்பு வைக்க ஆசை.. ஆனால் என்ன செய்வது..  யதார்த்தத்தில் நாம் நினைப்பது போலவா எப்போதும் நடக்க முடிகிறது! எனவே நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..
எல்லோருக்குமான பொது அழைப்பாக இதனை வைக்கிறேன்.

அவசியம் வாங்க! வாழ்த்தை தாங்க!

நினைவுக்கு: மணவிழாவுக்கு வருகை தரும் நண்பர்கள் முன்னமே தகவல் தெரிவித்து விட்டால்.. தங்கும் இடத்திற்கும், உணவிற்கும் சரியான ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். அதோடு குற்றாலம், நெல்லையைச் சுற்றி இருக்கும் சுற்றுலத் தளங்களையும் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிருக்கு..

அப்ப வரீங்க தானே...

தொடர்பு கொள்ள வேண்டிய                                                                                                    கைபேசி எண்:- 94439 77076.


56 comments:

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் துபாய் ராஜா. உங்களுக்கேத்த ராணியோடு நீங்கள் குடும்பம் நடத்தும் போதில் நாங்கள் நேரில் வருகிறோம். மன நிறைவோடு வாழ வாழ்த்துக்கள்.

ஜோ/Joe said...

துபாய் ராஜா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜோ/Joe said...

துபாய் ராஜா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நன்மனம் said...

வாழ்த்துக்கள் ராமு.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்களுக்கு..
நன்றி மனு..!

துபாய் ராஜா said...

நன்றி ஜோ..

துபாய் ராஜா said...

நன்றி ஸ்ரீதர்..

மணியன் said...

புதுமணமக்கள் இராஜாவிற்கும் ரேவதிக்கும் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கும் இல்வாழ்வு அமைந்திட வாழ்த்துக்கள் !!

துபாய் ராஜா said...

நன்றி மணியண்ணா...

ilavanji said...

மணமக்களுக்கு என் மனங்கனிந்த இனிய திருமண வாழ்த்துக்கள்! :)

நாகை சிவா said...

திருமணம் அமோகமாக நடைபெற வாழ்த்துக்கள்.

மனதின் ஓசை said...

துபாய் ராஜா...மிகச் சிறப்பான ஒரு மணவாழ்க்கை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

(வாங்க வாங்க.. எவ்வளோ நாள்தான் ஜாலியா இருப்பீங்க... மாட்னீங்களா?) :-)

ஜொள்ளுப்பாண்டி said...

வாழ்த்துக்கள் துபாய் ராசா! :))

கைப்புள்ள said...

இனிய மணவாழ்விற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ராஜா! வெக்கப் படுறீங்கன்னு தெரியுது...அதுக்குன்னு முகத்தையெல்லாம் மறைச்சிக்கனுமா?
:)

பெரியவரு கிட்டயும் பேசியாச்சுங்கோ...டாங்ஸ்!

துபாய் ராஜா said...

நன்றி இளவஞ்சி வாத்தியாரே!

துபாய் ராஜா said...

நன்றி சிவா!

துபாய் ராஜா said...

//வாங்க வாங்க.. எவ்வளோ நாள்தான் ஜாலியா இருப்பீங்க... மாட்னீங்களா?) :-)//
அட! நீங்க வேறயா...
வாழ்த்துக்கு நன்றி!

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கு நன்றி பாண்டி..
நீங்க வாரீங்க தானே!
காலையில உங்க க.பி.கழகம் தான் மொதல்ல செய்தி போட்டாங்க...
பாக்கலியா...?!

துபாய் ராஜா said...

//இனிய மணவாழ்விற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ராஜா! வெக்கப் படுறீங்கன்னு தெரியுது...அதுக்குன்னு முகத்தையெல்லாம் மறைச்சிக்கனுமா?
:)//

:))))
(ஆஹா.. கண்டு புடுச்சிட்டியே கைப்புள்ள..)

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் தலைவா

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...:-))))

துளசி கோபால் said...

ராஜாவின் பார்வை ரேவதி பக்கம்
கண் தேடுதே......

மிச்சத்தை நீங்களே பாடிக்குங்க.

ராஜா & ரேவதி,

அருமையான மணவாழ்வு அமைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க ரெண்டு பேரும்.

என்றும் அன்புடன்,
துளசி & கோபால்.

பொன்ஸ்~~Poorna said...

ராஜா, கலக்குங்க... ஸ்னேகா தானா? ;)

மகேஸ் said...

தங்களின் மண வாழ்க்கை இனிதே சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மகேஸ்

முத்துகுமரன் said...

இந்த மாசத்தின் இரண்டாவது விக்கெட்.. வேற யாரும் இருகீங்களாப்பா :-)

மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்

thamillvaanan said...

வணக்கம் துபாய் ராஜா!

கானா பிரபா வாழ்த்தியதை பார்த்து அந்த பதினாறை ஒருவாறு தேடிபிடித்திருக்கிறேன்.

(எனவே நான் பதினாறையும் ஒவ்வொன்றாக சொல்லி வாழ்த்துக்கிறேன்.)

1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.


மேற்குறிப்பிட்ட பதினாறும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
தமிழ்வாணன்.

பிகு முழுமையான குறிப்புகளுக்கு இங்கு செல்லவும்

துபாய் ராஜா said...

//ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...:-))))//
அட! போனிலும் வாழ்த்து.. இங்குமா... அசத்துரீங்களே தலைவா..
நன்றி!
ராணி யாருன்னு வீட்டுக்கார அம்மா சண்டைக்கு வரப் போறாங்க...

துபாய் ராஜா said...

//ராஜா & ரேவதி,

அருமையான மணவாழ்வு அமைய மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க ரெண்டு பேரும்.
//

நன்றி துளசியம்மா.. நன்றி..
பெரியவுங்க வாழ்த்தினதுல மனம் மகிழ்ந்து போனேன்.

துபாய் ராஜா said...

//ராஜா, கலக்குங்க... ஸ்னேகா தானா? ;)//

அய்யோ... பொண்ஸ் அக்கா.. அவங்க பேரு ரேவதி

துபாய் ராஜா said...

//தங்களின் மண வாழ்க்கை இனிதே சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,//

நன்றி மகேஷ்!

துபாய் ராஜா said...

// இந்த மாசத்தின் இரண்டாவது விக்கெட்.. வேற யாரும் இருகீங்களாப்பா :-)

மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்//

வங்கண்ணே.. வாழ்த்துக்களுக்கு நன்றி!

துபாய் ராஜா said...

//வணக்கம் துபாய் ராஜா!

கானா பிரபா வாழ்த்தியதை பார்த்து அந்த பதினாறை ஒருவாறு தேடிபிடித்திருக்கிறேன்.

(எனவே நான் பதினாறையும் ஒவ்வொன்றாக சொல்லி வாழ்த்துக்கிறேன்.)

1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.


மேற்குறிப்பிட்ட பதினாறும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
தமிழ்வாணன்.//

நன்றி தமிழ்வாணன்..
கல்யாணம் முடிஞ்ச பின்னாடி வந்து படிச்சுக்கிறேன்.
:-))

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள் துபாய் ராஜா...

துபாய் ராஜா said...

வாங்க சின்ன குட்டி...

வாழ்ழ்த்துக்களுக்கு நன்றி!

Karthik Jayanth said...

(துபாய்) ராஜா,

அருமையான மணவாழ்வு அமைய மனமார்ந்த வாழ்த்துகள் :-) . இங்க இருந்து போக வர டிக்கெட் குடுங்க.. மதுரைல இருந்து தின்னவேலிக்கு நானே என்னோட சொந்த செலவுல வந்துகிடுறேன் :-)))

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கஸ்தூரிப்பெண் said...

தமிழ்மணத்தின் இரண்டாவது நற்செய்தி!!!

நல்வாழ்த்துக்கள்!!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள் ராஜா,

துபாய் ராஜா said...

//அருமையான மணவாழ்வு அமைய மனமார்ந்த வாழ்த்துகள் :-) . இங்க இருந்து போக வர டிக்கெட் குடுங்க.. மதுரைல இருந்து தின்னவேலிக்கு நானே என்னோட சொந்த செலவுல வந்துகிடுறேன் :-)))//

அட! இது கூட செய்யாமலா...
ஒரு போன் போடுங்க டிக்கெட்டை அனுப்பி தாரேன்.
:-)))

துபாய் ராஜா said...

// Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். //

நன்றி பெயர் சொல்லா பெரியவரே!
:)))

துபாய் ராஜா said...

//தமிழ்மணத்தின் இரண்டாவது நற்செய்தி!!!

நல்வாழ்த்துக்கள்!!//

வாங்க அக்காவ்...
கல்யாணத்துக்கு வாங்க நீங்களும் நம் ஊரு தானே?

துபாய் ராஜா said...

//வாழ்த்துக்கள் ராஜா,//
நன்றி தல! அப்படியே ஒரு போன் போடுறது... :)

உங்கள் நண்பன்(சரா) said...

வாழ்த்துக்கள் நண்பனே...
உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அந்த நெல்லையப்பர் அருள் புரிவாராக...


அன்புடன்....
சரவணன்.

துபாய் ராஜா said...

//வாழ்த்துக்கள் நண்பனே...
உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அந்த நெல்லையப்பர் அருள் புரிவாராக...//
வாழ்த்துக்களுக்கு நன்றி..
அப்படியே கோவையிலிருந்து நெல்லைக்கு வாரது...

அருள் குமார் said...

வாழ்த்துக்கள் ராஜா :)

Sud Gopal said...

மணமக்களுக்கு என் மனங்கனிந்த இனிய திருமண வாழ்த்துக்கள்!

லிவிங் ஸ்மைல் said...

மணவாழ்க்கையில் ஒன்று சேரவுள்ள நண்பர்கள் ரேவதிக்கும் ராஜாவுக்கும் என்றென்றும் என் வாழ்த்துக்கள்....


வாழ்க்கைப் பயணம் இனிதே அமையட்டும்...

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கு நன்றி அருள்.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சுதர்சன் கோபால்.

துபாய் ராஜா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி லிவிங் ஸ்மைல்.

துபாய் ராஜா said...

கைபேசியிலும் வாழ்த்துக்கள் தெரிவித்திட்ட தமிழ் மணம் நண்பர்கள் பால பாரதி,கானா பிரபா,நாமக்கல் சிபி, ப்ரியன்,கைப்புள்ள,தோழி லிவிங் ஸ்மைல் அனைவருக்கும் நன்றி.

கதிர் said...

என்றென்றும் சந்தோஷமான வாழ்க்கை அமைய தம்பியின் வாழ்த்துக்கள்

அன்புடன்
தம்பி

துபாய் ராஜா said...

திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அன்பர்கள்,கைபேசியில் அழைத்து வாழ்த்திட்ட நண்பர்கள், இணையம் மூலம் மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த
அன்பார்ந்த'தமிழ்மணம்' வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!.

பாலசந்தர் கணேசன். said...

துபாய் ராஜா ராஜாதி ராஜனாக வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கு நன்றி பாலசந்தர்கணேசன்.

Chandravathanaa said...

ராஜா
இல்லறம் இனிதே தொடர வாழ்த்துக்கள்

இரசிகை said...

belated wishes nga....:)))