Sunday, June 04, 2006

'தமிழ்மணம்' நண்பர்கள்.....


தமிழ்மணத்தில் முதலில் ஆங்கிலத்திலும்,பின் தமிழிலும் பின்னூட்டம் இட்டு வந்தேன். ப்ளாக்கர் கணக்கு இல்லாததால் 'அனானி' வாய்ப்புள்ள பதிவுகளில் மட்டுமே பின்னூட்டம் இட முடிந்தது. பல பதிவர்களும் பதிலும் கொடுத்து, தனிவலைப்பூ தொடங்கவும் அறிவுறுத்தினார்கள்.அவர்களில் நிலவு நண்பன், ஜொள்ளுப்பாண்டி, பாலபாரதி, கானாபிரபா போன்ற நண்பர்கள் குறிப்பிடத் தகுந்தோர். மேலும் திரு.காசி, திரு.மணியன், திரு.தேசிகன், இளவஞ்சி, ராகவன், பிரசன்னா, மற்றும் பல நண்பர்களோடு பின்னூட்டத் தொடர்பு உள்ளது.


வலையுலகப்  பெரியவர்கள்  திரு.தருமி,  திரு.டோண்டு,  திரு.ஜோசப் மற்றும் லக்கிலுக், டுபுக்கு, பரஞ்சோதி போன்ற பல பதிவர்களோடு எனக்கு 'ஏகலைவன்' தொடர்பு. ஆம்! இவர்கள் அனைவரது அனுபவப் பதிவுகளையும் நான் விரும்பி படித்துள்ளேன். ஆனால் மிகத்தாமதமாக படித்ததனால் பின்னூட்டங்கள் இட்டதில்லை. நானும் இணையஉலகில் எழுத முனைந்ததற்கு இவர்களது பதிவுகள் தூண்டுதலாக இருந்தன.அதைப் பற்றியெல்லாம் வரும் பதிவுகளில் எழுதுவேன்.


'நிலவு நண்பனும் நானும்' ஒத்த கருத்துள்ளவர்கள் என்பதால் ஏற்கனவே பல விடயங்களை பகிர்ந்துள்ளோம். வரும்காலத்தில் அவர் மூலம் பல சிறந்த படைப்புகளும், வரலாற்று தொடர்களும் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


நண்பர் 'ஜொள்ளுப்பாண்டி'யோடு ஏற்பட்ட பின்னூட்டதொடர்பின் காரணமாக வருத்தப்படாத வாலிபர் சங்கமும், அதன் தீவிர உறுப்பினர்களான தேவ், கைப்புள்ள, சிபி, இளா, சிவா, பொன்ஸ், கார்த்தி மற்றும் பல நண்பர்கள் அறிமுகமானார்கள். சங்கத்தின் வளைகுடா கிளைச் செயலர் பொறுப்பும் கிடைத்தது. ஒருதடவை சங்கத்துக்கு வாங்க. 100% மனமகிழ்ச்சிக்கு நாங்க கியாரண்டி.

பாலபாரதி கைமுறிவினால் தற்போது ஓய்வில் உள்ளார். விரைவில் பல வித்யாசமான பதிவுகளோடு வருவார்.

தமிழ் இணையஉலகில் வளைய வரும் பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அனைத்து நண்பர்களோடும் நெருங்கிய நண்பனாய் பழகவேண்டும் என்பதே என் ஆசை.

அன்புடன்,

(துபாய்) ராஜா.

26 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

ராசா,
உங்க பாசத்தை என்னானு சொல்றது ? படிக்க படிக்க எனக்கு கண்ணீரு தாரை தாரையா வருது. தொடச்சு தொடச்சு கர்சீப்பே நனைஞ்சுபோச்சு. அப்படியொரு பாச மழைய எம்மேல பொழிஞ்சிடீயளே !!
நல்லா இருக்கனும் ராசா நீங்க !! :))

ப்ரியன் said...

அட ராஜா!நான் ஊர்ல இல்லாத நாளா பாத்து வலைப்பதிக்க ஆரம்பிச்சுடீங்க...ம்...வாழ்த்துக்கள் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வாருங்கள் துபாய் ராஜா..

ஜொள்ளுப்பாண்டிக்கு காசு கொடுத்தீங்களா..இப்படி அழுகிறாரு..

கானா பிரபா said...

வணக்கம் என் அன்புக்குரிய ராஜா

தங்களின் ராஜசபை கண்டு அகமகிழ்கின்றேன்.
நீங்கள் வலைப்பதிவு போட்டு நாலு நாளாச்சு, இன்று தான் தெரிந்தது.
உங்கள் படைப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.

துபாய் ராஜா said...

பாண்டி!படிச்ச உனக்கே அப்படீன்னா,
எழுதுன எனக்கு எப்படி இருக்கும்.
கழுத்தளவு கண்ணீர்ல நின்னு எழுதுனேன்யா!!:))).

துபாய் ராஜா said...

/ஜொள்ளுப்பாண்டிக்கு காசு கொடுத்தீங்களா..இப்படி அழுகிறாரு/

ஞானியார்!பாண்டிக்கும்,எனக்கும் உள்ளது ஒரு தனி பாசக்கதை!!.

எனக்கு வ.வா.ச.வளைகுடா கிளை
செயலர் பதவியை வாங்கித்தந்ததே
பாசக்கார பய பாண்டிதான்.:-)))

துபாய் ராஜா said...

/அட ராஜா!நான் ஊர்ல இல்லாத நாளா பாத்து வலைப்பதிக்க ஆரம்பிச்சுடீங்க...ம்...வாழ்த்துக்கள்
:)/.

வரவேற்பிற்கு நன்றி ப்ரியன்!இப்போ எந்தஊர்ல இருக்கிறீங்க சொல்லுங்க.
நேரில் வந்து பார்க்கிறேன்.

துபாய் ராஜா said...
This comment has been removed by a blog administrator.
துபாய் ராஜா said...

வணக்கம் பிரபா!வரவேற்பிற்கு நன்றி.
இப்போது இந்தியாவிலா?ஆஸ்திரேலியாவிலா?.எங்குள்ளீர்கள்?.
அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன்.
தாங்கள் இந்தியாவில் இருந்தால்
சந்திப்போம்.

மலைநாடான் said...

ராஜாவின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா.. வாருங்கள் ராஜா!
உங்கள் சபை நல்லவைகளால் சிறந்தோங்கட்டும்.
வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

வணக்கம் மலைநாடான்.வரவேற்பிற்கு
நன்றி.எமது சபையில் எப்போதும்
தங்களுக்கு இடம் உண்டு.

Santhosh said...

வாங்க ராஜா வாங்க,
ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த ஆட்களில் நீங்களும் ஒருத்தர்

//பாண்டி!படிச்ச உனக்கே அப்படீன்னா,
எழுதுன எனக்கு எப்படி இருக்கும்.
கழுத்தளவு கண்ணீர்ல நின்னு எழுதுனேன்யா!!:))). //

ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... பாசக்கார பயலுங்களா இருக்கிங்களே.

துபாய் ராஜா said...

வரவேற்பிற்கு நன்றி சந்தோஷ்!!!.

உலகத்தின் பல நாடுகளில் சிதறுண்டு
கிடந்தாலும் பந்தபாசத்துல சிக்குண்டு
கிடக்குறதுல்ல நம்ம ப்பயபுள்ளையகூட்டம்!!!.:-))

பொன்ஸ்~~Poorna said...

//பல பதிவர்களும் பதிலும் கொடுத்து, தனிவலைப்பூ தொடங்கவும் அறிவுறுத்தினார்கள்.அவர்களில் நிலவு நண்பன்,
ஜொள்ளுப்பாண்டி,பாலபாரதி,கானாபிரபா போன்ற நண்பர்கள் குறிப்பிடத்தகுந்தோர்.
//

கண்டனங்கள் ராஜா, கடைசியா நான் சொல்லித் தானே நீங்க அக்கவுன்ட் ஓபன் பண்ணினீங்க?!! ம்ஹும்.. ஏதோ சங்கத்தவர்ல சேர்த்துட்டதுனால சும்மா விடறேன்!!

இருக்கட்டும்

கானா பிரபா said...

வணக்கம் ராஜா

நான் தற்போது பெங்களூரில், இந்த சனிக்கிழமை சிட்னி பயணம்.
ஓ உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு இம்முறை கிடைக்காதா:-(

துபாய் ராஜா said...

பொன்ஸ்!!மேல இருக்கிறதுல்லாம்
'பெரிசுங்க'!!.நம்ம சங்கத்து வாலிப வயஜூ சேக்காளிங்களை தான் தனிபேரால போட்டிருக்குன்லே!!.:-)

(அதும்தவிர உங்களலாம் பத்தி தனிப்பதிவு போட தகவல்கள் திரட்டிட்டிருக்கேன் தாயி!!!.:-)))

துபாய் ராஜா said...

நன்றி பிரபா!நான் நீங்கள் புறப்படும் வரும் சனிக்கிழமையன்று மாலைதான்
'திருவனந்தபுரம்'வந்து இறங்குகிறேன்.முன்கூட்டியே திட்டம் இட்டிருந்தால் இந்த முறை சந்தித்து இருக்கலாம்.

சரி!வாழ்க்கை என்பது வட்டச்சக்கரம்தானே!.வரும்காலத்தில்
நாம் நிச்சயம் சந்திப்போம்.

சனியன்று எப்போது கிளம்பிகிறீர்கள்?
நான் வரும் நேரம் தாங்கள் இந்தியாவில் இருந்தால் கைபேசி எண் அல்லது தொடர்பு எண் கொடுங்கள்.நான் வந்தவுடன் பேசுகிறேன்.

ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளுப்பாண்டிக்கு காசு கொடுத்தீங்களா..இப்படி அழுகிறாரு.. //

ஐயகோ நிலவு நண்பா இப்படியொரு அவச்சொல் கேட்கவா நான் வந்தென் :(
இது துபாய் ராசாவ்வின் பாசத்தினால் தானே விளைந்த ஆனந்தக் கண்ணீர்! கொடுத்து விளைந்த கண்ணீர் அல்ல :))

//பாண்டி!படிச்ச உனக்கே அப்படீன்னா,
எழுதுன எனக்கு எப்படி இருக்கும்.
கழுத்தளவு கண்ணீர்ல நின்னு எழுதுனேன்யா!!:))). //

ராசா பாசக்கார பயபுள்ளயா இருக்கியே ! இதப்படிக்கறப்போ நான் நீந்திகிட்டு இருக்கேன் :)))))

துபாய் ராஜா said...

//"ஐயகோ நிலவு நண்பா இப்படியொரு அவச்சொல் கேட்கவா நான் வந்தென் :(
இது துபாய் ராசாவ்வின் பாசத்தினால் தானே விளைந்த ஆனந்தக் கண்ணீர்! கொடுத்து விளைந்த கண்ணீர் அல்ல :))"//

அருகிலே நிலவு நண்பன் இருந்தும்
ஆழ்கடல் தாண்டியுள்ள அன்புபாண்டி!!
உன்மீது வைத்துவிட்டேன் நான் அளவிலாபாசம்!!.
நிலவுநண்பன் நினைத்துவிட்டார் இதுவெல்லாம் வெறும்வேசம்!!!!.
அவர் போட்டுவிட்டுப்போகட்டும் கோசம்!!.
எந்நாளும் மாறுமோ நம் நேசம்!!.

கைப்புள்ள said...

இயல்பான அழகான தாய்மண் கவிதையைப் பாராட்டி பின்னூட்டம் போட வந்தா சுட்டியைக் காணுமே?

நல்லாருக்கு ராஜா...கலக்குங்க.
:)-

நன்மனம் said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ராஜா.

(உங்களின் பயண பதிவில் பின்னூட்டம் இட வசதி இல்லை ஆதலால் இங்கு)

பொன்ஸ்~~Poorna said...

//அதும்தவிர உங்களலாம் பத்தி தனிப்பதிவு போட தகவல்கள் திரட்டிட்டிருக்கேன் தாயி!!!.:-))) //

தனிப்பதிவா?!!! ஏதாச்சும் ஏடாகூடமா எழுதிறாதப்பா... ஏற்கனவே போட்டோவைப் பார்த்தே மக்கள் எல்லாம் பயந்து கிடக்காங்க!! :))

துபாய் ராஜா said...

நன்றி கைப்பு ! இப்போது பாருங்கள்.

துபாய் ராஜா said...

நன்மனம்!வாழ்த்திற்கு நன்றி.
பயணப்பதிவில் பின்னூட்டம் இடமுடியாமையை சீக்கிரம் சரிசெய்து
விடுகிறேன்.

துபாய் ராஜா said...

//"போட்டோவைப் பார்த்தே மக்கள் எல்லாம் பயந்து கிடக்காங்க!! :))"//

மக்கள் மட்டுமில்லேக்கா!நாங்களும்தான்.போர்வையில கட்டி அடிக்கிற ஆளுல நீங்க!!!. :))).

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்! (தாமதமாக)

வருக! வருக!