Showing posts with label நட்பு/சமூகம்/அறிவிப்பு. Show all posts
Showing posts with label நட்பு/சமூகம்/அறிவிப்பு. Show all posts

Friday, January 22, 2010

பத்தாயிரம் பார்வைகளும்,ஃபாலோயர் விட்ஜெட்டும்...

லட்சம், கோடி என
எனதினிய நண்பர்கள்
ஏணிகள் பல
ஏறிக் கொண்டு
இருக்கும் போது
பதிவுலகம் வந்து
ஆண்டுகள் ஐந்தானாலும்
பத்தாயிரம் பார்வை
பெற்றது இன்றுதான்.

ஏனின்னும் வைக்கவில்லை
ஃபாலோயர் விட்ஜெட்டு பலகை
எத்தனையோ நண்பர்கள்
கேட்டிட்டார் தினம் தினம்...

கன்னி மொழி
அறிந்த அளவு
கணிணி மொழி
அறியாத காரணத்தால்
குழம்புது என் மனம் மனம்..


எவ்வளவோ முயற்சித்தும்
வலைப்பூவின் வண்ணம்
மாற்ற முடியாமல்
ஏற்றி வருகிறேன்
எனது பல எண்ணம்...

புதிய வலைப்பூ தொடங்கிட
அன்பு நண்பர்கள்
ஆலோசனை கூறியும்
ஒப்ப மறுக்கும் எனதுள்ளம்
உதவி யாராவது செய்திட்டால்
இனிதே துள்ளும்.

பணிப்பளு
பார வலி
போக்கவும்
அன்னை தமிழ்
கேட்க ,பேச
இயலாமை
பதிவெழுதி தணித்து
வரும் இந்த அடியேனை
ஊக்கம் தந்து
உற்சாகப்படுத்தும்
அன்பு உள்ளங்களுக்கு
நன்றிகள் பல...

மின்னியலான் என்னை தங்கள் மென்னியல் அறிவால் தொடர்பாளர்களாக இணைத்து கொண்ட வலையுலக நண்பர்கள் அத்திரி, அரூர், ஆதிமூலகிருஷ்ணன், ராஜூ, லோகு, பா.ராஜாராம், பித்தனின் வாக்கு, பிரபாகர், ஜெட்லி, ஜெகன்குமார், ஜீவா, கலகலப்ரியா, கரிசல்காரன், மனோ மற்றும் விஜய் ஆனந்திற்கு எனது அன்பு வணக்கங்களும் நன்றிகளும்.
எனது வலைப்பூவை தொடர விருப்பப்படும் நண்பர்களுக்கு ஒரு தகவல். எனது பிளாக் ஐந்து ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது என்பதால் ஃபாலோயர்ஸ் விட்ஜெட் சேர்க்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்ததில் தேவையற்ற மாற்றங்கள்தான் ஏற்பட்டன. உதாரணமாக 2006 முதல் பதிவிட்டு வருகிறேன்.பெட்டகத்திலும் 2006 முதல் பதிவுகள் உள்ளன.ஆனால் புரோபைலில் 2007 என்று மாறி விட்டது. என்ன செய்வது என தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

ஒரு சிறிய எளிய வழி.உங்கள் Dash Boardல் Reading Listன் கீழே உள்ள ADDஐ கிளிக் செய்தால் Add blogs to follow வரும்.அதில் எனது URLஐ (http://rajasabai.blogspot.com) கொடுத்து விட்டால் எனது
ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் சேர்ந்து எனது பதிவுகளும் தொடர்ந்து கிடைக்கப்பெறுவீர்கள்.

நன்றி. வணக்கம்.

Wednesday, January 06, 2010

புது வீடும், (உங்களுக்கு) ஒரு விருந்தும்...

அழகான அலெக்சாண்டிரியா நகர கடற்கரையில் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு இல்லத்தை ஏற்கனவே பயணப் பதிவின் இரண்டாம் பாகத்திலும்,
தீபாவளி சிறப்பு விருந்து பதிவிலும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தேன்.
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் என்பதால் அலைச்சலையும், நேரத்தையும் மிச்சப்படுத்த இப்போது அலுவலக அருகில் அஹாமி என்னும் இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டோம்.
அமைதியான, மரங்களடர்ந்த, அழகான புல்வெளி மற்றும் தோட்டத்துடன் கூடிய தனி வீடு. புதுவீட்டை சுத்தி பார்க்கலாம் வாங்க.
வெளி நுழைவாயில் கதவும் வரவேற்கும் கொடிப்பந்தலும்

அழகான புல்வெளி

ஷட்டில் கோர்ட்


வீட்டைச் சுற்றி பசுமையான செடி,கொடிகள்


அழகான மஞ்சள் செம்பருத்தி


ஊருக்கு வரும்போது ஒரு குச்சி கொண்டு வரச்சொல்லி மே(லி)டத்து உத்தரவு


அழகான கொடிப்பந்தலும், உள்நுழை வாயிலும்


முதல் முதல் வீட்டுக்கு வர்றீங்க. இனிப்பான வரவேற்பு .ஸ்பெசல் சாக்லேட்கள் எடுத்து சாப்பிடுங்க.

கதவை திறந்து உள்ளே வாங்க


வரவேற்கும் அழகான கார்பெட்டுகள்



வரவேற்பறை


டைனிங் டேபிளும், டிவி ஹாலும்


சமையலறை


வாங்க. இதுதான் இருக்கிறதுலே ரொம்ப முக்கியமான இடம். பார்ட்டி ஹால்.




விருந்தை ஆரம்பிப்போமா


செல்ஃப் சர்வீஸ்தான். அவங்கவங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க


இந்த தடவை சிம்பிளான விருந்துதான். அடுத்த தடவை ஜமாய்ச்சுடலாம்.


உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.
கட்டில்ல படுத்துகிட்டு கண்ணயரும் வரை கணிணியில் பதிவுகள் படிங்க

தூக்கம் வராதவங்க காதுல ஹெட்ஃபோன் மாட்டிகிட்டு பாட்டு கேட்டுகிட்டே வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள ராக் கார்டன் லேன்ல வாக்கிங் போகலாம்.


இப்போ குளிர் நேரம்கிறதால நீச்சல் குளத்தில் தண்ணீர் விடாமல் மூடி வைத்திருக்கிறோம். சம்மர்ல வாங்க. நல்லா டைவ் அடிச்சு குளிக்கலாம்.


Wednesday, December 16, 2009

ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும்...

இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும் ஒரே நாளில் வந்துள்ளன. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். பள்ளி பருவத்தில் எல்லா வீடுகளிலும் காலையில் வண்ணப்பொடிகளால் கோலமிட்டு, கோலத்தின் நடுவில் தினம் ஒரு பூ வைப்பதை பார்த்து வியந்தது, அரையாண்டு தேர்வு விடுமுறையில் காலையிலே எழுந்து பனி,குளிர் பாராமல் குளித்து, கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து சுடச்சுட கையில் வாங்கிய வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை காலை உணவாகவே சாப்பிட்டது என பல நிகழ்ச்சிகள் பசுமையாக உள்ளத்தில் வந்து போகின்றன.

சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதால் ஆஞ்சநேயர் மீது சிறுவயது முதலே மிகப்பிரியம். இராமாயணம்,மகாபாரதம் இரண்டு இதிகாசங்களிலுமே இவரது பங்களிப்பு இருப்பது எப்போதும் மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம்.

கடந்த இரண்டு மாதமாக பணிப்பளு அதிகம். இருக்கையில் அமர நேரமில்லை. வலைப்பக்கம் வரமுடியாமல் வேலை அதிகமாக இருந்ததால் நள்ளிரவில்தான் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடிந்தது என்றாலும் பின்னூட்டம் இட முடியாத படி அலுப்பு. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மார்கழி மாதம் போல் மனதில் எப்போதும் குளிர்ச்சி நிலவவும், தொய்வில்லாமல் தொடர்ந்து பதிவுகள் எழுதிடவும் ஆஞ்சநேயர் அருள்வாராக.


Monday, July 03, 2006

மணவிழா அழைப்பு




வணக்கம் நண்பர்களே!

தாயக வருகை எப்போதுமே ஒருவித உற்சாகத்தை கொடுக்கக் கூடியதுதான் என்றாலும்..

இந்த முறை அந்த உற்சாகம் கூடுதலாகிப் போனதிற்கு காரணம் எனக்கு பெண் பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தியும் தான்.

எல்லாம் நல்ல படியாக முடிந்து இம் மாதம் 12ம் தேதி என் வாழ்க்கைத் துணையாக ரேவதியை கரம் பற்றுகிறேன்.

வாழ்க்கைத்துணை எப்படி இருப்பாங்கன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஆனா.. இன்னும் கூட சொல்லவேண்டியவை நிறைய இருக்குன்னு பார்த்த பின் தான் உறைத்தது. அவை பற்றி பிறகு.




எல்லோருக்கும் நேரில் வந்து தான் அழைப்பு வைக்க ஆசை.. ஆனால் என்ன செய்வது..  யதார்த்தத்தில் நாம் நினைப்பது போலவா எப்போதும் நடக்க முடிகிறது! எனவே நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..
எல்லோருக்குமான பொது அழைப்பாக இதனை வைக்கிறேன்.

அவசியம் வாங்க! வாழ்த்தை தாங்க!

நினைவுக்கு: மணவிழாவுக்கு வருகை தரும் நண்பர்கள் முன்னமே தகவல் தெரிவித்து விட்டால்.. தங்கும் இடத்திற்கும், உணவிற்கும் சரியான ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும். அதோடு குற்றாலம், நெல்லையைச் சுற்றி இருக்கும் சுற்றுலத் தளங்களையும் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிருக்கு..

அப்ப வரீங்க தானே...

தொடர்பு கொள்ள வேண்டிய                                                                                                    கைபேசி எண்:- 94439 77076.


Sunday, June 04, 2006

'தமிழ்மணம்' நண்பர்கள்.....


தமிழ்மணத்தில் முதலில் ஆங்கிலத்திலும்,பின் தமிழிலும் பின்னூட்டம் இட்டு வந்தேன். ப்ளாக்கர் கணக்கு இல்லாததால் 'அனானி' வாய்ப்புள்ள பதிவுகளில் மட்டுமே பின்னூட்டம் இட முடிந்தது. பல பதிவர்களும் பதிலும் கொடுத்து, தனிவலைப்பூ தொடங்கவும் அறிவுறுத்தினார்கள்.அவர்களில் நிலவு நண்பன், ஜொள்ளுப்பாண்டி, பாலபாரதி, கானாபிரபா போன்ற நண்பர்கள் குறிப்பிடத் தகுந்தோர். மேலும் திரு.காசி, திரு.மணியன், திரு.தேசிகன், இளவஞ்சி, ராகவன், பிரசன்னா, மற்றும் பல நண்பர்களோடு பின்னூட்டத் தொடர்பு உள்ளது.


வலையுலகப்  பெரியவர்கள்  திரு.தருமி,  திரு.டோண்டு,  திரு.ஜோசப் மற்றும் லக்கிலுக், டுபுக்கு, பரஞ்சோதி போன்ற பல பதிவர்களோடு எனக்கு 'ஏகலைவன்' தொடர்பு. ஆம்! இவர்கள் அனைவரது அனுபவப் பதிவுகளையும் நான் விரும்பி படித்துள்ளேன். ஆனால் மிகத்தாமதமாக படித்ததனால் பின்னூட்டங்கள் இட்டதில்லை. நானும் இணையஉலகில் எழுத முனைந்ததற்கு இவர்களது பதிவுகள் தூண்டுதலாக இருந்தன.அதைப் பற்றியெல்லாம் வரும் பதிவுகளில் எழுதுவேன்.


'நிலவு நண்பனும் நானும்' ஒத்த கருத்துள்ளவர்கள் என்பதால் ஏற்கனவே பல விடயங்களை பகிர்ந்துள்ளோம். வரும்காலத்தில் அவர் மூலம் பல சிறந்த படைப்புகளும், வரலாற்று தொடர்களும் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


நண்பர் 'ஜொள்ளுப்பாண்டி'யோடு ஏற்பட்ட பின்னூட்டதொடர்பின் காரணமாக வருத்தப்படாத வாலிபர் சங்கமும், அதன் தீவிர உறுப்பினர்களான தேவ், கைப்புள்ள, சிபி, இளா, சிவா, பொன்ஸ், கார்த்தி மற்றும் பல நண்பர்கள் அறிமுகமானார்கள். சங்கத்தின் வளைகுடா கிளைச் செயலர் பொறுப்பும் கிடைத்தது. ஒருதடவை சங்கத்துக்கு வாங்க. 100% மனமகிழ்ச்சிக்கு நாங்க கியாரண்டி.

பாலபாரதி கைமுறிவினால் தற்போது ஓய்வில் உள்ளார். விரைவில் பல வித்யாசமான பதிவுகளோடு வருவார்.

தமிழ் இணையஉலகில் வளைய வரும் பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அனைத்து நண்பர்களோடும் நெருங்கிய நண்பனாய் பழகவேண்டும் என்பதே என் ஆசை.

அன்புடன்,

(துபாய்) ராஜா.

வலைபதிய வந்த கதை!!!!!!.


எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகள் போல கற்றுக்கொள்ளவேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள்.

ஒரு குழந்தையானது இப்பூமியில் பிறந்தவுடன் எந்த ஒரு கவலையும் இல்லாமல் வேளைக்கு உண்டு உறங்குகிறது.பின் சுற்றுப்புறம் நடப்பவற்றை மற்றும் காண்போர் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறது. பின் தானும் அவர்களைப் போல பேச மழலை மொழி எழுப்புகிறது. பின் நன்றாக பேசி, ஊர்ந்து, எழுந்து, விழுந்து ,நடந்து சராசரி மனித  வாழ்க்கைக்கு வந்து விடுகிறது.

அதுபோல்தான் நானும் 'தமிழ்மணம்' அறிமுகமானவுடன் எல்லோரது பதிவுகளையும் படித்து மட்டும் வந்தேன்.பின் பிடித்த பதிவுகளுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். நான் இட்ட பின்னூட்டங்களுக்கு பதிவர்கள் பதில் கொடுப்பதை கண்டு உற்சாகமானேன். தமிழில் எழுதவும் ஆரம்பித்தேன்.

இப்போது 'பிளாக்கர் கணக்கும், தனி வலைப்பதிவும் தொடங்கியாயிற்று. இனி நான் எழுதிய கவிதைகள், எனக்கு தெரிந்த கதைகள், அனுபவங்கள் எல்லாவற்றையும் இங்கு எடுத்துவிட வேண்டியதுதான்.

அன்புடன்,

(துபாய்) ராஜா.

Friday, June 02, 2006

தோ நானும் வந்துட்டேன்.... - (துபாய்) ராஜா


அன்பு வலைப்பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் வணக்கம்.

எனது பெயர் ராஜா.சொந்த ஊர் திருநெல்வேலி .மின் மற்றும் மின்னணு பொறியியல் படித்தவன்.தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.

எல்லாம் உன்னோட 'ப்ரொபைல்லே' பார்த்தாச்சு. விஷயத்திற்கு வா என்கிறீர்களா!!. தோ வந்துட்டேன்!!!!.

கடந்த பல ஆண்டுகளாக 'வலை உலகில்' வளைய வருபவன் என்றாலும் 'தமிழ்மணம்' அறிமுகமானது சற்று தாமதமாகத்தான்.

'தமிழ்மணம்' அறிமுகமானவுடன் எல்லோரது பதிவுகளையும் படித்து மட்டும் வந்தேன்.பின் படித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட ஆரம்பித்தேன். பலரது அறிமுகமும், நட்பும் கிடைத்தது. என்னையும் சில நண்பர்கள் எழுத தூண்டினார்கள்.

வலைப்பதிவர்கள் பலரும் தங்களது சொந்த அனுபவங்களையே சுவையாக எழுதி வருவதை கண்டேன். சிறுவயதிலும் மற்றும் பணி காரணமாகவும் எனக்கு ஏற்பட்ட பயணங்கள்,பலதரப்பட்ட சூழ்நிலைகள், சந்தித்த மக்கள் ஆகிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இப்போது வந்துள்ளேன், 


உங்களது அன்பும்,ஆதரவும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையில் இனி நானும் உங்களோடு.......!!!!!

அன்புடன்,

(துபாய்) ராஜா.