Wednesday, January 06, 2010

புது வீடும், (உங்களுக்கு) ஒரு விருந்தும்...

அழகான அலெக்சாண்டிரியா நகர கடற்கரையில் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு இல்லத்தை ஏற்கனவே பயணப் பதிவின் இரண்டாம் பாகத்திலும்,
தீபாவளி சிறப்பு விருந்து பதிவிலும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி இருந்தேன்.
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான பயணம் என்பதால் அலைச்சலையும், நேரத்தையும் மிச்சப்படுத்த இப்போது அலுவலக அருகில் அஹாமி என்னும் இடத்திற்கு குடி பெயர்ந்து விட்டோம்.
அமைதியான, மரங்களடர்ந்த, அழகான புல்வெளி மற்றும் தோட்டத்துடன் கூடிய தனி வீடு. புதுவீட்டை சுத்தி பார்க்கலாம் வாங்க.
வெளி நுழைவாயில் கதவும் வரவேற்கும் கொடிப்பந்தலும்

அழகான புல்வெளி

ஷட்டில் கோர்ட்


வீட்டைச் சுற்றி பசுமையான செடி,கொடிகள்


அழகான மஞ்சள் செம்பருத்தி


ஊருக்கு வரும்போது ஒரு குச்சி கொண்டு வரச்சொல்லி மே(லி)டத்து உத்தரவு


அழகான கொடிப்பந்தலும், உள்நுழை வாயிலும்


முதல் முதல் வீட்டுக்கு வர்றீங்க. இனிப்பான வரவேற்பு .ஸ்பெசல் சாக்லேட்கள் எடுத்து சாப்பிடுங்க.

கதவை திறந்து உள்ளே வாங்க


வரவேற்கும் அழகான கார்பெட்டுகள்வரவேற்பறை


டைனிங் டேபிளும், டிவி ஹாலும்


சமையலறை


வாங்க. இதுதான் இருக்கிறதுலே ரொம்ப முக்கியமான இடம். பார்ட்டி ஹால்.
விருந்தை ஆரம்பிப்போமா


செல்ஃப் சர்வீஸ்தான். அவங்கவங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க


இந்த தடவை சிம்பிளான விருந்துதான். அடுத்த தடவை ஜமாய்ச்சுடலாம்.


உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.
கட்டில்ல படுத்துகிட்டு கண்ணயரும் வரை கணிணியில் பதிவுகள் படிங்க

தூக்கம் வராதவங்க காதுல ஹெட்ஃபோன் மாட்டிகிட்டு பாட்டு கேட்டுகிட்டே வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள ராக் கார்டன் லேன்ல வாக்கிங் போகலாம்.


இப்போ குளிர் நேரம்கிறதால நீச்சல் குளத்தில் தண்ணீர் விடாமல் மூடி வைத்திருக்கிறோம். சம்மர்ல வாங்க. நல்லா டைவ் அடிச்சு குளிக்கலாம்.


5 comments:

Anonymous said...

என்னா வில்லத்தனம்.. ரொம்ப பசிக்குது சாப்பாடு வரும் வரை புளொக்கில் மேயலாம் என்டு பார்த்தால் சாப்பாட்டைக் காட்டி வெறுப்பேத்துறீங்க.. அழகான வீடு.. கொஞ்சம் தூசு இருக்கு. தொடச்சு வையுங்க சார்

துபாய் ராஜா said...

// முகிலினி said...
என்னா வில்லத்தனம்.. ரொம்ப பசிக்குது சாப்பாடு வரும் வரை புளொக்கில் மேயலாம் என்டு பார்த்தால் சாப்பாட்டைக் காட்டி வெறுப்பேத்துறீங்க.//

வாங்கோ.வாங்கோ.முகிலினி, வாங்கோ.
எவ்வளவோ தேடியும் உங்க வீட்டை (வலைப்பூ)கண்டுபிடிக்க முடியலை. சீக்கிரம் வீட்டு (வலைப்பூ) முகவரி கொடுங்கோ. :))

//அழகான வீடு.. கொஞ்சம் தூசு இருக்கு. தொடச்சு வையுங்க சார்//

பேச்சிலர்ஸ் வீடுன்னாலே அப்படிதான் இருக்கும் முகில். :))

லோகு said...

நல்லாருக்குங்க..

புது வீடுன்னதும் ஏதாவது சின்ன வீடா இருக்கும்னு பார்க்க வந்தேன்.. நல்லவேளை அப்படி எதும் இல்ல.. :)

அகல்விளக்கு said...

ஆஹா...

அருமையான இல்லம் அண்ணா....

விருந்துக்கு அழைத்ததுக்கு நன்றி...

:-)

நீச்சல் குளத்தில் நீர் நிரப்பியதும் மீண்டும் கூப்பிடுங்க....

vasu balaji said...

வந்துட்டோம்ல.