Thursday, September 03, 2009

ஆந்திர முதல்வருக்கு அஞ்சலி




நேற்று காலை காணாமல் போன விமானம் கர்னூல் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு ஆந்திர முதலவர் திரு.ராஜசேகர ரெட்டியும் உடன் சென்றவ்ர்களும் அகால மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் அரசியல் தெய்வமான என்.டி.ஆரையே ஒழித்துக்கட்டியவர் சந்திரபாபு நாயுடு. ஹைதராபாத்தை ஹைடெக் சிட்டியாக மற்றினார். பில்கேட்ஸை அழைத்து வந்து பல ஐ.டி.கம்பெனிகள் வரவைத்தார். நக்சலைட்டுகள் குண்டுவெடிப்பில் சிக்கி தப்பித்ததை அனுதாப ஓட்டுக்களாக வாங்கிவிடலாம் என அவசர அவசரமாக பதவிகாலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தினார்.ஆனால் அவரது அனைத்து கனவுகளுக்கும் முடிவு கட்டியவர் திரு.ராஜசேகரரெட்டி.

சந்திரபாபு நாயுடு மறந்த மக்கள் நலத்திட்டங்களும் முக்கியமாக விவசாயிகள் பயன்பெற பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தவர் திரு.ராஜசேகரரெட்டி.

சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி முதல்வர் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் அரசியலில் குதித்த சிரஞ்சீவியின் ஆசையையும் தவிடுபொடியாக்கி மீண்டும் மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி வர காரணமானவ்ர் திரு.ராஜசேகரரெட்டி.

ஆந்திர மாநிலத்தில் எல்லோரிடமும் அன்பும், அரவணைப்புமாக மிகவும்கட்டுக்கோப்பாக கட்சியை நடத்தியவர் திரு.ராஜசேகரரெட்டி.

அகால மரணமடைந்த அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.


7 comments:

கோவி.கண்ணன் said...

அஞ்சலி இடுகையில் நானும் இணைந்து கொள்கிறேன்.

அண்ணாருக்கும், அவருடன் மறைந்தவர்களுக்கும் அஞ்சலிகள்

பா.ராஜாராம் said...

ஆத்மா சாந்தியடையட்டும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அண்ணாருக்கும், அவருடன் மறைந்தவர்களுக்கும் அஞ்சலிகள்

இராகவன் நைஜிரியா said...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

Sanjai Gandhi said...

ஆழ்ந்த இரங்கல்.. உங்களுக்கும் நன்றி.

இடைவெளிகள் said...

பூ உதிர்ந்தால் நஷ்டமில்லை
தலைவா நீ உதிர்ந்தாய்!
நரகமாகிப்போனது
ஆந்திரமக்களின் வாழ்க்கை!

மிகச் சிறந்த அரசியல் தலைவரை இழந்து நிற்க்கும் ஆந்திர மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

தங்கராசு நாகேந்திரன் said...

எனது ஆழ்ந்த இரங்கல்