Thursday, September 17, 2009

ஏதோ மோகம் - பாகம் 2
அனைவரது கவனத்தையும் ஒருங்கே திருப்பிய அந்தப் பெண்ணுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மாநிறம். நடுத்தர உயரம். நீண்ட கூந்தல். சிறந்த அழகி இல்லையென்றாலும் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்ந்தவள் என்று கூறியவள் தாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டு அவள் நிறுவன நண்பர்களுடன் சென்று அமர்ந்து கொண்டாள். அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு இருந்தது. தடைப்பட்ட அறிமுகப்படலம் மீண்டும் தொடர்ந்தது. தொழில் நகரங்களான கோவை மற்றும் ஹோசூரிலிருந்தே பெரும்பாலான நிறுவனங்கள் வந்திருந்தன.


அவள் முறை வரும்போது பெயர் ராதா என்றும் பிளஸ் 2 படித்துமுடித்து விட்டு MS Office முடித்திருப்பதாக கூறினாள். அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்டாக அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் மேலும் கரெஸ்சில் BBA இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறினாள்.


நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோர்ஸ் மெட்டிரியல் விநியோகமும்,அந்தந்த நிறுவனத்தின் M.R (Management Representative) தேர்வும், அறிவிப்பும் நடந்தது. அதன் பின் தேநீர் இடைவேளை. அரங்கிற்கு வெளியே ஹாலில் தேநீர்,பிஸ்கட்டுகள் வைத்திருப்பதாக அறிவித்தனர். அனைவரும் தேநீர் அருந்த அரங்கை விட்டு வெளியே சென்றனர்.


எனக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இல்லாத காரணத்தினாலும்,எனது பாஸ் என்னை எங்கள் நிறுவனத்தின் MR ஆக அறிவித்துவிட்டபடியாலும் வெளியே செல்லாமல் இருக்கையிலே அமர்ந்து சில குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தேன்.எனது அசிஸ்டெண்டான ரமேஷ் ‘சார்,பிஸ்கட்டாவது சாப்பிடுங்க; என்றவாறு எடுத்து வந்தவற்றை கொடுத்தார்.அதை கொறித்தவாறே கோர்ஸ் மெட்டிரியலில் MRக்கான கடமைகள் என்னென்ன என பார்த்து கொண்டிருந்தேன்.


அரைமணி நேர டீ பிரேக் முடிந்து அனைவரும் அரங்கிற்குள் வந்தனர்.கோர்ஸ் மெட்டிரியலில் இருந்து விளக்கமும்,செய்முறை பயிற்சிகளும் ஆரம்பித்தனர். முக்கியமான பயிற்சி என்பதால் வந்திருந்த எல்லா நிறுவனங்களுமே சிறப்பான நபர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தமை எல்லோருடைய ஈடுபாடான செயல்களில் தெரிந்தது. அதற்குள் மதிய உணவு நேரமும் வந்துவிட்டது. ஒருமணி நேர உணவு இடைவேளைக்கு பின் அனைவரும் ஆஜராக வேண்டும் என அறிவித்தனர்.


எனது பாஸ் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து வருவதாக கூறிச்சென்றார்.நான் ஓய்வறைக்கு சென்று கை,முகம் கழுவி பின் உணவு அரங்கம் வந்தேன்.நூறு பேர் அமரக்கூடிய அளவு நல்ல பெரிய அரங்கம்.நல்ல காற்றோட்ட வசதியுடன் இருந்தது.பஃபே சிஸ்டம் என்பதால் அனைவரும் வரிசையில் நின்று அவரவருக்கு பிடித்த உணவு வகைகளை தேர்வு செய்து எடுத்து கொண்டிருந்தனர்.


நானும் வரிசையில் நின்று எனக்கு பிடித்த உணவினை எடுத்து கொண்டு அமர இடம் தேடிய பொழுது ‘ராஜா சார்,ராஜா சார்’,உங்களுக்கு இங்கே இடம் பிடிச்சி வச்சுருக்கேன். வாங்க” என சேகர் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். இரண்டிரண்டு பேர் எதிரெதிராக மொத்தம் நான்கு பேர் அமரக்கூடிய மேஜையில் சேகரும்,அந்தப் பெண்ணும் அருகருகேயும் ,ரமேஷ் எதிரேயும் அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

(தொடரும்)


6 comments:

சந்தனமுல்லை said...

ahem...! அப்புறம்....?

ஷொர்ட் கமெர்ஷியல் ப்ரேக்?!! :))

துபாய் ராஜா said...

// சந்தனமுல்லை said...
ahem...! அப்புறம்....?

ஷொர்ட் கமெர்ஷியல் ப்ரேக்?!! :))//

வாங்க சந்தனமுல்லை.வண்டி வேகம் எடுக்கும் போது அப்பப்போ பிரேக் போட்டாத்தானே நல்லது.... :))

பிரபாகர் said...

ராஜா,

நன்றாக இருக்கிறது. ஒரு முடிவோடு தான் எழுதுகிறீர்கள்... ஆவலாய் அடுத்ததற்கு...

பிரபாகர்.

லோகு said...

கதை சுவாரஸ்யமா இருக்குண்ணா..

ஆனா ரொம்ப மெதுவா போகுதே.. கொஞ்சம் வேகத்தை கூட்டுங்க..

ஹேமா said...

இன்னும் கதை சூடு பிடிக்கல.ம்ம்...தொடரட்டும்.

தங்கராசு நாகேந்திரன் said...

வசீகரமா இருக்கு உங்க கதை தொடருங்கள்..