Wednesday, September 16, 2009

ஏதோ மோகம்....
“சார், H.R மேனேஜர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க“ என்று அட்டெண்டர் வந்து அழைத்ததும் வெயிட்டிங் ஹாலில் இருந்த நான் குழம்பி போய்விட்டேன். நான் அந்த கம்பெனிக்கு சென்றிருந்ததோ டெக்னிக்கல் விஷயமான மீட்டிங். H.R டிபார்ட்மெண்ட்டுக்கும் நான் சென்ற வேலைக்கும் சம்பந்தமேயில்லை. நான் யோசிப்பதைப் பார்த்த அட்டெண்டர் “சார், உங்க பேர் ராஜா தானே“ என்று கேட்டவர், நான் ”ஆமாம்” என்றவுடன் “உங்களைத்தான் அழைத்து வரச்சொன்னார்கள் “ என்றார்.


சரி என்னதான் விஷயம் பார்த்துவிடுவோமே என்று முடிவுசெய்து அவருடன் சென்றேன். அவர் அறையினுள் சென்று அறிவித்து விட்டு வந்து “சார்,அம்மா உங்களை உள்ளே வரச்சொன்னார்கள்” என்றார். மேனேஜர் அம்மா என்றவுடன் நான் இன்னும் குழம்பியவாறு அறையினுள் சென்றேன்.


உள்ளே கண்ணாடி அணிந்த ஒரு பெண்மணி தொலைபேசியில் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். எங்கோ பார்த்த முகமாய் இருக்கிறதே என யோசித்தவாறு நின்ற என்னை அமருமாறு சைகை காட்டி விட்டு பேச்சை தொடரலானார்.


மேஜையில் ராதா - MBA , HR Manager என்ற பெயர் பலகையைப் பார்த்து அதிர்ச்சியாகி மறுபடியும் அவர் முகத்தை பார்த்தேன்.  ஆம் அதே ராதா தான்
.

என் நினைவுகள் சுழல ஆரம்பித்தன.


சரியாக ஏழு ஆண்டுகள் முன் சென்னையில் நான் வேலை செய்த நிறுவனத்தில் ISO 9001 தரச்சான்றிதழ் வாங்க முயற்சித்து கொண்டிருந்தோம். கிண்டியில் உள்ள சிறுதொழில் வளர்ச்சிக்கான மத்திய அரசின் S.I.S.I நிறுவனம் சலுகை கட்டணத்தில் பல சிறிய நிறுவனங்களுக்கும் ஒரு கன்சல்டண்ட் மூலம் ISO 9001 சான்றிதழ் வாங்க பயிற்சி கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். எங்கள் நிறுவனத்தைப் போல தமிழ்நாடு முழுவதுமிருந்து நிறைய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.


ஒரு மாதம் சென்ற பின் பயிற்சி நாள் குறித்து விபரங்கள் அனுப்பியிருந்தார்கள். அந்த மாத இறுதியில் S.I.S.I நிறுவன வளாகத்தில் உள்ள கருத்தரங்கில் நான்கு நாள்கள் பயிற்சி என்றும் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் தலா நான்கு பேர் மட்டும் வர அனுமதி என்றும் குறித்திருந்தார்கள்.இப்படி தமிழ்நாடு முழுவதும் இருந்து இருபது நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வருவார்கள் என்றும் குறிப்பு இருந்தது.எங்கள் பாஸ் (நிறுவன உரிமையாளர்), நான், சேகர், ரமேஷ் செல்வதாக ஏற்பாடு. குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. நான் அந்த சமயம் சைதாப்பேட்டையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். எனவே பைக்கில் வந்துவிடுவதாக கூறிவிட்டேன். சென்னைக்காரரான சேகர் வீடு, பாஸ் வீட்டின் அருகே என்பதால் அவருடன் காரில் வருமாறு கூறினார். ரமேஷ் அம்பாள் நகரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடியால் நேராக வந்துவிடுவதாக கூறிவிட்டார்.


பயிற்சியின் முதல்நாள் ஒன்பது மணிக்கு முன் எல்லோரும் கருத்தரங்கில் குழுமினோம்.பல்வேறு வயதில் சுமார் எண்பது பேர்கள். பயிற்சியாளர்கள் பத்துபேர் என அரங்கம் முழுதும் ஆண்கள், ஆண்கள், ஆண்கள். நிகழ்ச்சியின் முதல்கட்டமாக அனைவரும் அவரவர் நிறுவனங்கள் மற்றும் சுயதகவல்களை கூறிக்கொண்டிருந்தபொழுது ஒரு இளம்பெண் அவசர அவசரமாக வந்து “எக்ஸ்க்யூஸ்மீ’ என்றாள்.

(தொடரும்)


10 comments:

லோகு said...

நீங்க ராஜா அவங்க ராதா.. மீண்டும் ஒரு காதல் கதையா.. அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்..

Raju said...

எல்லாத்துக்கும் தொடரும் போடுறீங்களே தலைவா..?
என்னா ட்விஸ்ட்டு.ம்ம்.. ந‌டத்துங்க.

தங்கராசு நாகேந்திரன் said...

Label கதை/காதல்/அனுபவம்
சொந்தக்கதையா?
தேர்ந்த தமிழ் பட கதாசிரியர் மாதிரி கதையைக் கொண்டு போறிங்க
ம்ம்ம்ம் அடுத்த பதிவு எப்போது.

இரும்புத்திரை said...

michcha kathai enke

சந்தனமுல்லை said...

சீரியல் அதிகம் பாக்கிற எஃபெக்டா?! சுவாரஸ்யமான நேரத்தில் ஒரு கமர்ஷியல் பிரேக்!! :)

அ. நம்பி said...

`படிப்பவர்களைத் தொடர்ந்து படிக்கவைப்பது எப்படி?'

ராஜாவைக் கேட்டால் தெரியும்.

துபாய் ராஜா said...

// லோகு said...
நீங்க ராஜா அவங்க ராதா.. மீண்டும் ஒரு காதல் கதையா..//

போங்க தம்பி.எனக்கு வெக்கவெக்கமா
வருது.... :))

துபாய் ராஜா said...

// ♠ ராஜு ♠ said...
எல்லாத்துக்கும் தொடரும் போடுறீங்களே தலைவா..?
என்னா ட்விஸ்ட்டு.ம்ம்.. //

வாங்க ராஜு தம்பி.ட்விஸ்ட்டு இருந்தாத்தானே நல்ல டேஸ்ட்டு...
:))

ஹேமா said...

சரி...ஒரு தொடர்கதை.அடுத்த பாகத்தை எதிர்பார்த்தபடி.

கலாட்டாப்பையன் said...

\\என் நினைவுகள் சுழல ஆரம்பித்தன.//

எப்படி டார்டைஸ் கொசுவர்த்தி அளவுக்கா ??

இது எனது உங்கள் வலையில் முதல் பின்னுட்டம்.... நல்ல இருதுச்சு.....