Wednesday, September 02, 2009

மோகினியை கண்டேன்........ (முடிவு)அந்த நேரத்தில் “டாண். டாண்” என பிள்ளையார்கோயில் மணியும் பூஜை நடக்கும் சப்தமும் கேட்டு திடுக்கிட்டு தன்நிலைக்கு வந்தேன். வீட்டின் முன்பக்கம் சுமோ ஹாரன் சத்தம் இடைவிடாமல் கேட்டது. ஏதோ ஒரு சக்தியின் உந்துதலால் வீட்டின் முன்பக்கம் நோக்கி ஓடிச்சென்று சுமோவில் ஏறி அமர்ந்தேன்.


”சார், பஸ் வர்ற சத்தம் கேட்டது. அந்த நேரத்துல கோயில்ல மணியும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அங்கேயிருந்து ஹாரன் அடிச்சா உங்களுக்கு சத்தம் கேக்காது. அதுதான் வண்டியை எடுத்துட்டு நேரா இங்க வந்துட்டேன்.” என்றார் டிரைவர் சுப்பிரமணி.

பஸ் அதற்குள் மேலமருதப்பபுரத்தை கடந்து ஊத்துமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. சுப்பிரமணி பின்னாடியே விரட்டிச் சென்று என்னை பஸ்சில் ஏற்றிவிட்டார். டிக்கெட் எடுத்துவிட்டு இருக்க இடமும் கிடைத்துவிட்டதால் ஒரு குழப்பமான மனநிலையில் கண்ணயர்ந்து விட்டேன். ஆலங்குளம் வந்ததெல்லாம் தெரியாது. அம்பை வந்துதான் கண்விழித்தேன். பின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அலுப்பில் அசந்து தூங்கிவிட்டேன்.

காலையில் மறுபடியும் அடித்துபிடித்து கிளம்பி அலுவலகம் வந்தபோது “ஏன் சார், அந்த வீட்டையா போய் பார்த்திங்க” என்று உள்ளூர்காரரான ஆபிஸ் பாய் மாரியப்பன் கேட்டு  “விவரம்”  கூறினார்.

அந்த வீட்டு சொந்தகாரர்கள் நல்ல வசதியானவர்களாம். அவர்களுக்கு மோகினி என்ற ஒரே பெண்ணாம். பெயருக்கேற்றவாறு அந்த ஊரிலே சிறந்த அழகியாம். நல்ல புத்திசாலியும் கூடவாம். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மேல் படிப்பிற்கு கல்லூரி செல்ல ஆசைப்பட்டதாம். ஆனால் பெற்றோர்கள் படிக்க அனுமதிக்காமல் சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து நாளும் குறித்துவிட்டார்களாம். எவ்வளவோ போராடியும் மேல்படிப்பிற்கு முடியாத காரணத்தால் ஒரு பவுர்ணமி நாளன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பூச்சிமருந்து குடித்து கிணத்தில் குதித்துவிட்டதாம் அந்த பெண். பிணமாகத்தான் வெளியே எடுத்தார்களாம். ஊராரின் பழிசொல்லுக்கு பயந்து அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் மோகினியின் பெற்றோரும் வீட்டை அப்படியே விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டார்களாம்.

அதிலிருந்து ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மோகினி அந்த வீட்டைச் சுற்றி நடமாடுவதாக ஊருக்குள் பேச்சாம். ஆடு,மாடு,கோழி எதுவுமே அந்த வீட்டுப் பக்கம் மேயப் போகாதாம். நள்ளிரவு நேரங்களில் நாய்கள் பயங்கரமாக ஊளையிடுமாம்.

“இதெல்லாம் தெரியாம நீங்க அந்த வீட்டுக்கு போயிருக்கீங்க“ என்று மாரியப்பன் “விவரம்” கூறிமுடித்தபோது எனக்கு உடம்பெல்லாம் மறுபடியும் ஒருமுறை புல்லரித்தது.

ஏனென்றால் முந்தைய தினம் பவுர்ணமி.


12 comments:

கிளியனூர் இஸ்மத் said...

எனக்கு ஒரு மாதிரியா திகிலா இருக்கு....

தங்கராசு நாகேந்திரன் said...

மிஸ் பண்ணிட்டிங்க இருந்து என்ன ஏதுன்னு அந்த மோகினியை கேட்டிருந்துருக்கலாம்
வர்ற பவுர்னமிக்கு ரெண்டு பேரும் போகலாமா

நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வர்றேன்

Raju said...

எல்லாருக்கும் இது மாதிரி அமானிஷ்ய அணுபவம் இருக்கும் போலயே ராஜா அண்ணே..!

Anbu said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

துபாய் ராஜா said...

//கிளியனூர் இஸ்மத் said...
எனக்கு ஒரு மாதிரியா திகிலா இருக்கு....//

அண்ணாச்சி,உங்களுக்குமா.....

நீங்கதான் எங்களுக்கு தைரியம் கொடுக்கணும்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

துபாய் ராஜா said...

// தங்கராசு நாகேந்திரன் said...
மிஸ் பண்ணிட்டிங்க இருந்து என்ன ஏதுன்னு அந்த மோகினியை கேட்டிருந்துருக்கலாம்
வர்ற பவுர்னமிக்கு ரெண்டு பேரும் போகலாமா

நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வர்றேன்//

மாப்பு வச்சுட்டிய ஆப்பு.....

தங்கராசண்னே... வேணும்னா அட்ரஸ் தர்றேன்.நீங்க தனியாப் போய்
தகவல் கேட்டுட்டு வாங்க... :))

துபாய் ராஜா said...

//ராஜு.. said...
எல்லாருக்கும் இது மாதிரி அமானிஷ்ய அணுபவம் இருக்கும் போலயே ராஜா அண்ணே..!//

ராஜூ தம்பி,அதுல ஓண்ணை எடுத்து விடுங்க.பீதியை கெளப்புவோம்.....

:))

துபாய் ராஜா said...

//Anbu said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அன்பு தம்பி,நானே அரண்டு போய் இருக்கேன்.நீங்க வேற ஊளையிட்டு உறக்கத்தை கெடுக்காதீங்க... :))

Anonymous said...

அவ்வ்வ்அவ்வ்வ்அவ்வ்வ்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்ல இருக்கு! கிளைமாக்ஸ் நாளைக்கா? இல்ல வர்ற வெள்ளி இரவா? அன்னைக்குதானே பௌர்ணமி !!!!!! தாயத்து, தாயத்து....(விவேக் ஸ்டைலில் படிக்கவும்). குமுதம்லா படிக்கிறவங்களுக்கு ப்ரீ கொடுக்குறாங்க ...

லோகு said...

Intresting......

மறுபடி போனீங்களா..

அ. நம்பி said...

ஏன் முடித்துவிட்டீர்கள்? தொடர்ந்திருக்கலாம்.