Thursday, September 10, 2009

டில்லி அரசு பள்ளியில் மின்கசிவு. தப்பிக்க ஓடிய மாணவிகள் 5 பேர் நெரிசலில் சிக்கி பலி


புதுடில்லி : டில்லியில் அரசு பள்ளியில் மின்சாரம் பரவுவதாக வந்த செய்தியை அடுத்து தங்களை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர். மாணவ, மாணவிகள் 30 பேர் படுகாயமுற்றனர். மாணவர்கள் இறந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசாருக்கும், பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மின்சாரக்கசிவு ஏற்பட்டதாக தகவல் : டில்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. நகர் முழுவதும் மேக மூட்டங்களுடன் காணப்பட்டு வருகிறது. கசூரிகாஸ் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வழக்கம் போல் அவரவர் பாடங்களை கவனித்து கொண்டிருந்தனர். சில வகுப்புகளில் தேர்வு துவங்கிய நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர் . இந்நி‌லையில் பள்ளியை சூழ்ந்து இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருப்பதாகவும், இது பள்ளி கட்டடத்தில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் செய்தி பரவியது.

30 பேர் காயம் : 5 பேர் கவலைக்கிடம் : இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை ‌விட்டு வெளியேறுமாறு பள்ளி நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. அச்சமுற்ற மாணவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கூட்டம், கூட்டமாக ‌வெளியேறினர். இப்போது ஏற்பட்ட நெரிசிலில் பலர் சிக்கி கீழே விழுந்தனர். இதில் பல மாணவர்களின் கால் மிதியில் சிக்கி மயக்கமுற்றனர். நெரிசலில் 5 மாணவர்கள் பிணங்களாயினர். படுகாயமுற்ற 30 மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசார் மீது கல்வீச்சு : பள்ளியில் மாணவிகள் இறந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. இதனை கேள்விப்பட்ட பெற்றோர்கள் அவசர, அவசரமாக பள்ளி முன் வந்து குவிந்தனர். தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு புறப்பட்டனர். கூடி நின்ற பெற்றோர்கள் எதிர்ப்பு கோஷங்கள‌ை எழுப்பினர். இதனையடுத்து போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனால் போலீசாருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குழந்தைகள‌ை இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகம் முன்பு கதறி அழுதபடி நிற்கின்றனர்.

முதல்வர் ஷீலா தீட்ஷித் விரைந்தார் : சம்பவம் நடந்த பள்ளி மற்றும் காயமடைந்த மாணவர்களை பார்த்து விசாரிக்க முதல்வர் ஷீலா தீட்ஷத் விரைந்தார். விபத்தில் சிக்கி காயமுற்றவர்கள‌ை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர், நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார். சம்வம் குறித்து உயர் மட்ட குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

4 comments:

சந்தனமுல்லை said...

:(( என்ன கொடுமை!! ச்சே!!

லோகு said...

:((((((((

வருத்தமான செய்தி..

Anbu said...

கொடுமையான செயல்..

thiyaa said...

வருத்தமான செய்தி..