Tuesday, September 29, 2009

ஏதோ மோகம் - பாகம் 4

“சின்ன வயசுலே அவங்க அப்பா தவறிட்டாங்க சார். இவளும்,இவ அக்காவுமா ரெண்டு பொண்ணு. அவங்கம்மா தான் வேலைபார்த்து ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. அவங்க அக்கா பத்து ஃபெயிலாகிடுச்சு. உடனே சொந்தத்திலே கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. இவ நல்லா படிப்பா. பிளஸ் டூலயும் நல்லா மார்க் எடுத்தா. குடும்ப சூழ்நிலை காரணமா மேல் கொண்டு படிக்க முடியலை. கம்யூட்டர் கோர்ஸ் முடிச்சுட்டு வேலைக்கு வந்திட்டா. அப்படியே கரெஸ்ல படிக்கிறா. எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு வரணும்கிறதுக்காக கடுமையா போராடிட்ட்டிருக்கா சார்...” என்று ஒரே மூச்சில் சேகர் சொல்லி முடித்தான்.


தூரத்தில் அலுவலக நண்பர்களோடு கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த ராதாவை பார்த்தேன். இப்போது அவள் முகத்தில் எனக்கு ஏதோ ஒரு சோகம் தெரிந்தது.


மதிய உணவு வேளை முடிந்து பயிற்சிகள் பரபரப்பாக தொடர்ந்தன. ராதா அவ்வப்போது என்னைப் உற்றுப்பார்ப்பதும், நான் பார்த்தால் லேசாக முறுவலித்து விட்டு பயிற்சியை கவனிப்பதுவுமாக இருந்தாள். நான் அவள் பார்வையில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன்.


மீண்டும் தேனீர் இடைவேளை.எல்லோரும் வெளியே சென்றனர். நானும் ஒரு மாற்றத்திற்காக வெளியே சென்றேன். ஆங்காங்கே தனித்தனி குழுவாக நின்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர்.

நான்கு பிஸ்கட்களை கையில் எடுத்துக்கொண்டு நான் தனியாக தள்ளி சென்று வெளியே சாலையை வேடிக்கை பார்த்தவாறு நின்றேன். அப்போது வேகமாக என் அருகில் வந்து நின்ற ராதா “என்ன டிரெய்னிங் எப்படி இருக்கு ? ” என்று கேட்டாள். ”நல்லாத்தான் போகுது” என்றேன்.

“நீங்கள்லாம் ஃபேக்டரி ஆளுங்க. அதனால சப்ஜெக்டோட கோர்ஸ் நடத்துறது நல்லா புரியும். நான் அக்கவுண்ட்ஸ் சைடுன்னால ஒண்ணும் புரியலை. எங்க மேனேஜ்மெண்ட்ல டாக்குமெண்டேசன் பண்ண ஆள் வேணும்கிறதுக்காக என்னையும் சேர்த்து அனுப்பிச்சிட்டாங்க.” என்றவளிடம் “ஐ.எஸ்.ஓ ன்னாலே டாக்குமெண்டேசன்தானே முக்கியம். அதான் உங்களை மாதிரி திறமையான ஆளுங்களையும் கூட அனுப்பிச்சிருக்காங்க” என்றேன்.

சிரித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “உங்ககிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே ? ” என்று கேட்டாள்..

( தொடரும் )


10 comments:

அ. நம்பி said...

//சிரித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “உங்ககிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே” என்றாள்.//

"..... ..... ... .... .." என்றேன்.

".... .... ..... .. .... ... .... .. ... ...?" என்று கேட்டாள் ராதா.

துபாய் ராஜா said...

திருத்தி விட்டேன்.இலக்கணத்தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அய்யா.

அ. நம்பி said...

அன்பருக்கு,

ஐந்தாம் பாகத்தை எவ்வாறு நீங்கள் தொடங்குவீர்கள் என்று நினைத்து வேடிக்கையாக எழுதி இருந்தேன்; பிழைகளைச் சுட்டவில்லை.

ஆனால் நீங்கள் பிழைகள் கண்டு திருத்தியுள்ளீர்கள். எழுதும் தமிழில் பிழைகளைத் தவிர்த்தல்வேண்டும் என்பதில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை இது காட்டுகிறது.இந்த ஈடுபாடு எழுத்துலகில் உங்களை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும்.

வளர்க; உளமார்ந்த வாழ்த்துகள்.

பிரபாகர் said...

//இப்போது அவள் முகத்தில் எனக்கு ஏதோ ஒரு சோகம் தெரிந்தது.//

சரிதான்... புரிதலின் பின் நமது பார்வை மாறுபடும் என்பது நிதர்சன உண்மை...

பிரபாகர்.

இரும்புத்திரை said...

இன்னும் கதை இருக்கா சஸ்பென்ஸ் தாங்க முடியல மிச்ச கதைய மெயில் பண்ணுங்க

Admin said...

நல்ல தொடர்... நன்றிகள்..

Raju said...

அடுத்து என்ன ஆச்சு அண்ணே..?

vasu balaji said...

நல்லா போகுது கதை. தொடருங்கள்.

நாடோடி இலக்கியன் said...

கதை நல்லா போகுது.

பெரிய பாகமா எழுதினா எல்லோரும் எஸ் ஆகிடுவாங்கன்னா அநியாயத்துக்கு சின்ன சின்ன எப்பிஸோடா எழுதுறீங்க.
நானாக இருந்தால் 4 பாகத்தையும் ஒரே பதிவா போட்டிருப்பேன்.பொழைக்க தெரிஞ்ச ஆள்தாம்யா நீங்க.

கலகலப்ரியா said...

ஆஹா அப்புறம் என்னாச்சுன்னு கேக்க வச்சிட்டீங்களே..