Wednesday, September 30, 2015

காதல் தேர்...



தேர் செல்லும்
 வீதியெல்லாம்
திட்டமிட்ட
அளவு...

 திகட்ட திகட்ட
பார்த்தாலும்
திருப்தியாகவில்லை
 தேவதை 
உன்  பேரழகு… 

---------------------------------------------------

அனைத்து கோயில்களிலும்
 ஆண்டுக்கொரு முறை
 தேரோட்டம்… 

 அழகணங்கவள்
 ஆழப்பதிந்திட்ட 
என் மனதில்
 இனியவள்
 எதிர்வரும் 
போதெல்லாம்
எத்தனை 
எத்தனை
 போராட்டம்... 

------------------------------------------------------


கீழே உள்ள  போட்டிகளுக்கு கட்டுரை, கவிதைப் படைப்புகளை அனுப்பி முடித்ததை கொண்டாட உடைத்த பூசணிக்காய் கவிதை தான் இந்த              'காதல் தேர் ' 

------------------------------------------------------------





   போட்டிக்கு நான் அனுப்பிய  கட்டுரைகள்


வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி



போட்டிக்கு நான் அனுப்பிய  கவிதைகள்

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி


அனைத்துப் படைப்புகளையும் படித்து மகிழுங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தொடர்ந்து பகிருங்கள்.


நன்றி. வணக்கம்.


4 comments:

KILLERGEE Devakottai said...


கவிதை அருமை தங்களது திருஷ்டி நீங்கட்டும் வாழ்க வளமுடன்

சென்னை பித்தன் said...

திருஷ்டிப் பூசணிக்காயே இவ்வளவு அழகா இருக்கே!தினம் திருவிழாதான்

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

கவிதை அருமை தங்களது திருஷ்டி நீங்கட்டும் வாழ்க வளமுடன்...//

மனமார்ந்த வாழ்த்துரைக்கு நன்றி நண்பரே...

துபாய் ராஜா said...


// சென்னை பித்தன் said...

திருஷ்டிப் பூசணிக்காயே இவ்வளவு அழகா இருக்கே!தினம் திருவிழாதான்... //

உற்சாகம் தரும் ஊக்கக் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா...