Haze என்னும் புகைமூட்டப் பிரச்சினை நம்மைப் போன்ற இந்திய மக்களுக்கு ஒரு செய்தி மட்டும் தான். ஆனால் அதனால் வருடாவருடம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு  ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஏற்படும் தீர்க்கமுடியாத பிரச்சினையாகும்.
உலகின் பெரும்பகுதி பசுமை மாறாக்காடுகளை கொண்ட இந்தோனேஷியாவில் கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. அதனால் உண்டான கருஞ்சாம்பல் புகையானது அண்டை நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளை சூழ்ந்து சுற்றுப்புறசூழல் கேட்டை உருவாக்கியுள்ளது. இவற்றில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் மலேஷியாவும், சிங்கப்பூரும் தான் .
காற்றில் கலந்துள்ள மாசின் அளவுக்
குறியீடு (P.S.I) நூறுக்குள் மேல் போனாலே ஆரோக்கியக்கேடு ஆகும்.  இருநூறை எட்டிவிட்டால் முகமூடி  அணிந்துதான் நடமாட வேண்டும். ஆனால் இந்தோனேசியாவில்
தற்போது இந்த குறியீட்டின் அளவு ஆயிரத்தையும் தாண்டி விட்டது. இந்த புகை மூட்டப் பிரச்சினையினால்
நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு நோய்களினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
24-hr PSI 
 | 
  
Healthy persons 
 | 
  
Elderly, pregnant
  women, children 
 | 
  
Persons with
  chronic lung disease, heart disease 
 | 
 
≤100 
(Good/Moderate)  | 
  
Normal activities 
 | 
  
Normal activities 
 | 
  
Normal activities 
 | 
 
101 - 200 
(Unhealthy)  | 
  
Reduce^
  prolonged** or strenuous*** outdoor physical exertion 
 | 
  
Minimise^^
  prolonged** or strenuous*** outdoor physical exertion 
 | 
  
Avoid^^^
  prolonged** or strenuous*** outdoor physical exertion 
 | 
 
201 - 300 
(Very Unhealthy)  | 
  
Avoid^^^
  prolonged** or strenuous*** outdoor physical exertion 
 | 
  
Minimise^^
  outdoor activity 
 | 
  
Avoid^^^ outdoor
  activity 
 | 
 
>300  
(Hazardous)  | 
  
Minimise^^
  outdoor activity 
 | 
  
Avoid^^^ outdoor
  activity 
 | 
  
Avoid^^^ outdoor
  activity 
 | 
 
கடந்த முப்பதாண்டுகளாக தொடரும்
இந்த பிரச்சினைக்கு முக்கியக் காரணம் காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதுதான். விஷமிகள்
தீ வைக்கின்றனர். விவசாயிகள் தீ வைக்கின்றனர்.
மரக்கடத்தல் மாஃபியாக்கள் தீ வைக்கின்றனர் என்று பலவிதமான காரணங்கள் கூறப்பட்டு வந்த
இந்த பிரச்சினைக்கு அனைத்து நாடுகளும் இந்தோனேசியாவையே குற்றம் சாட்டி வந்தன. கடுமையான
சட்ட திட்டங்கள் கொண்டு வந்த பின்னும் கட்டுக்குள் வராத இந்த காட்டுத் தீ பிரச்சினைக்கு
கடந்த மூன்றாண்டுகளாக இந்தோனேஷியா தகுந்த ஆதாரங்களோடு சிங்கப்பூர், மலேஷியாவை குற்றம்
சாட்ட ஆரம்பித்துள்ளது.
உலகெங்கும் பாமாயில் எனப்படும்
பனை எண்ணெயின் தேவை அதிகரித்த போது சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்கள் மலேஷியாவில்
இருந்த ரப்பர் தோட்டங்களையும், காடுகளையும் அழித்து எண்ணெய்ப் பனையை பயிரிட்டு லாபம் சம்பாதித்தனர்.
இடப்பிரச்சினை, உலகளாவிய எண்ணெய் தேவையின் காரணமாக நாடு விட்டு நாடு இந்தோனேஷியாவிற்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்திய இந்த முதலாளிகள்
காட்டிய பண ஆசையினால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இந்தோனேஷியாவின் ஏழை விவசாயிகளும், பண்ணை முதலாளிகளும் தங்கள் தோட்டங்களை அழித்தும், காடுகளை ஆக்ரமிப்பு
செய்தும் எண்ணெய்ப்பனையை பயிரிட ஆரம்பித்தனர். 
இதன் காரணமாகவே வருடா வருடம் கோடை காலத்தில் இந்தோனேஷியக் காடுகள் சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்களது ஊக்கத்தோடும், ஒத்துழைப்போடும் கொளுத்தப்பட்டு காட்டுத் தீயானது பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது. அதன் காரணமாக எழும் கருஞ்சாம்பல் புகை மூட்டமும் இந்தோனேஷியாவிலும், அண்டை, அயல் நாடுகளிலும் மிகவும் மோசமான காற்றுத் தூய்மை கேட்டை ஏற்படுத்தி மக்களின் உடல்நிலையையும் சீர்குலைக்கிறது என்பது இந்தோனேஷியாவின் குற்றச்சாட்டு.
இதன் காரணமாகவே வருடா வருடம் கோடை காலத்தில் இந்தோனேஷியக் காடுகள் சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்களது ஊக்கத்தோடும், ஒத்துழைப்போடும் கொளுத்தப்பட்டு காட்டுத் தீயானது பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது. அதன் காரணமாக எழும் கருஞ்சாம்பல் புகை மூட்டமும் இந்தோனேஷியாவிலும், அண்டை, அயல் நாடுகளிலும் மிகவும் மோசமான காற்றுத் தூய்மை கேட்டை ஏற்படுத்தி மக்களின் உடல்நிலையையும் சீர்குலைக்கிறது என்பது இந்தோனேஷியாவின் குற்றச்சாட்டு.
ஒரு சில பணவெறி பிடித்த தொழிலதிபர்களின்
பேராசையால் உலகச் சுகாதாரம் சீர்கேடு அடைவதையும், இந்த பூமி தோன்றிய நாள் முதல் உள்ள பசுமைக் காடுகள், அரிய வகை தாவரங்கள், மரங்கள், வன விலங்குகள், பறவைகள் அழிவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட நாடுகளோடு, உலக நாடுகள் அனைத்தும்
சேர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆண்டுதோறும் பாதிக்கப்படும் சாதாரண
பொதுமக்களின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் ஆகும்.
4 comments:
பணமேகம் மனி்தனை எவ்வவோ தவறுகளை செய்யத் தூண்டுகிறது போகும் பொழுது கொண்டு போவது என்ன என்று நினைத்துப் பார்த்தால் மனிதனின் வாழ்வின் அவசியம் புரிந்து விடும்.
// KILLERGEE Devakottai said...
பணமேகம் மனி்தனை எவ்வவோ தவறுகளை செய்யத் தூண்டுகிறது போகும் பொழுது கொண்டு போவது என்ன என்று நினைத்துப் பார்த்தால் மனிதனின் வாழ்வின் அவசியம் புரிந்து விடும்.//
ஆம் நண்பரே. 'பணம் மட்டும் வாழ்க்கையா...இந்த பாழாய் போன மனிதருக்கு....' என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
அருமையான பதிவு
நானும் இது வரை ஏதோ தன்னிச்சையான நிகழ்வு என எண்ணினேன் தற்போது தங்கள் விளக்கம் விடையளித்துள்ளது.
// செந்தில்குமார் senthilkumar said...
அருமையான பதிவு
நானும் இது வரை ஏதோ தன்னிச்சையான நிகழ்வு என எண்ணினேன் தற்போது தங்கள் விளக்கம் விடையளித்துள்ளது. //
முதல் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே...
3:50 PM Delete
Post a Comment