Showing posts with label அனுபவம்/செய்திகள்/சமூகம். Show all posts
Showing posts with label அனுபவம்/செய்திகள்/சமூகம். Show all posts

Friday, September 18, 2015

'இந்தோனேஷியா காட்டுத் தீ ' (Haze) - காரணம் யார்….


Haze என்னும் புகைமூட்டப் பிரச்சினை நம்மைப் போன்ற இந்திய மக்களுக்கு ஒரு செய்தி மட்டும் தான். ஆனால் அதனால் வருடாவருடம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு  ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஏற்படும் தீர்க்கமுடியாத பிரச்சினையாகும்.

உலகின் பெரும்பகுதி பசுமை மாறாக்காடுகளை கொண்ட இந்தோனேஷியாவில் கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக காட்டுத் தீ  தொடர்ந்து எரிந்து வருகிறது. அதனால் உண்டான கருஞ்சாம்பல் புகையானது அண்டை நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளை சூழ்ந்து சுற்றுப்புறசூழல் கேட்டை உருவாக்கியுள்ளது. இவற்றில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்  மலேஷியாவும், சிங்கப்பூரும் தான் . 

காற்றில் கலந்துள்ள மாசின் அளவுக் குறியீடு (P.S.I) நூறுக்குள் மேல் போனாலே ஆரோக்கியக்கேடு ஆகும்.  இருநூறை எட்டிவிட்டால் முகமூடி  அணிந்துதான் நடமாட வேண்டும். ஆனால் இந்தோனேசியாவில் தற்போது இந்த குறியீட்டின் அளவு ஆயிரத்தையும் தாண்டி விட்டது. இந்த புகை மூட்டப் பிரச்சினையினால் நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு நோய்களினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


24-hr PSI
Healthy persons
Elderly, pregnant women, children
Persons with chronic lung disease, heart disease
≤100
(Good/Moderate)
Normal activities
Normal activities
Normal activities
101 - 200
(Unhealthy)
Reduce^ prolonged** or strenuous*** outdoor physical exertion
Minimise^^ prolonged** or strenuous*** outdoor physical exertion
Avoid^^^ prolonged** or strenuous*** outdoor physical exertion
201 - 300
(Very Unhealthy)

Avoid^^^ prolonged** or strenuous*** outdoor physical exertion
Minimise^^ outdoor activity
Avoid^^^ outdoor activity
>300 
(Hazardous)

Minimise^^ outdoor activity
Avoid^^^ outdoor activity

Avoid^^^ outdoor activity

கடந்த முப்பதாண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு முக்கியக் காரணம் காடுகள் தீ வைத்து அழிக்கப்படுவதுதான். விஷமிகள் தீ வைக்கின்றனர். விவசாயிகள் தீ வைக்கின்றனர். மரக்கடத்தல் மாஃபியாக்கள் தீ வைக்கின்றனர் என்று பலவிதமான காரணங்கள் கூறப்பட்டு வந்த இந்த பிரச்சினைக்கு அனைத்து நாடுகளும் இந்தோனேசியாவையே குற்றம் சாட்டி வந்தன. கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வந்த பின்னும் கட்டுக்குள் வராத இந்த காட்டுத் தீ பிரச்சினைக்கு கடந்த மூன்றாண்டுகளாக இந்தோனேஷியா தகுந்த ஆதாரங்களோடு சிங்கப்பூர், மலேஷியாவை குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளது.

உலகெங்கும் பாமாயில் எனப்படும் பனை எண்ணெயின் தேவை அதிகரித்த போது சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்கள் மலேஷியாவில் இருந்த ரப்பர் தோட்டங்களையும், காடுகளையும் அழித்து எண்ணெய்ப் பனையை பயிரிட்டு லாபம் சம்பாதித்தனர். இடப்பிரச்சினை, உலகளாவிய எண்ணெய் தேவையின் காரணமாக நாடு விட்டு நாடு இந்தோனேஷியாவிற்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்திய இந்த முதலாளிகள் காட்டிய பண ஆசையினால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இந்தோனேஷியாவின் ஏழை விவசாயிகளும், பண்ணை முதலாளிகளும் தங்கள் தோட்டங்களை அழித்தும், காடுகளை ஆக்ரமிப்பு செய்தும் எண்ணெய்ப்பனையை பயிரிட ஆரம்பித்தனர். 

இதன் காரணமாகவே வருடா வருடம் கோடை காலத்தில் இந்தோனேஷியக் காடுகள் சிங்கப்பூர், மலேஷிய தொழிலதிபர்களது ஊக்கத்தோடும், ஒத்துழைப்போடும் கொளுத்தப்பட்டு காட்டுத் தீயானது பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது. அதன் காரணமாக எழும் கருஞ்சாம்பல் புகை மூட்டமும் இந்தோனேஷியாவிலும், அண்டை, அயல் நாடுகளிலும் மிகவும் மோசமான காற்றுத் தூய்மை கேட்டை ஏற்படுத்தி மக்களின் உடல்நிலையையும் சீர்குலைக்கிறது என்பது இந்தோனேஷியாவின் குற்றச்சாட்டு.
ஒரு சில பணவெறி பிடித்த தொழிலதிபர்களின் பேராசையால் உலகச் சுகாதாரம் சீர்கேடு அடைவதையும், இந்த பூமி தோன்றிய நாள் முதல் உள்ள பசுமைக் காடுகள், அரிய வகை தாவரங்கள், மரங்கள், வன விலங்குகள், பறவைகள் அழிவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட நாடுகளோடு, உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆண்டுதோறும் பாதிக்கப்படும் சாதாரண பொதுமக்களின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் ஆகும்.

Wednesday, September 16, 2015

நதி நீர் இணைப்பு - தமிழகத்தை முந்தியது ஆந்திரம்


நாட்டின் முதல் நதிநீர் இணைப்பு திட்டத்தை
மிகக் குறுகிய காலத்தில்
ஆந்திரம் அமைதியாக சாதித்து விட்டது...

தமிழகம் தடை, தாமதம் தாண்டுவது எப்போது....


அமைதியாக சாதித்த ஆந்திரம்...

இந்தியாவில் கங்கை நதிக்கு பிறகு 2வது நீளமான நதி கோதாவரிதான். கிருஷ்ணா நதி மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது.மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைக்கும் கோதாவரி நதி சுமார் 1465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். 

கடந்த ஜனவரி 1ஆம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டு, மார்ச் 9ஆம் தேதி திட்டப்பணிகள் தொடங்கின. அதன்படி கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வந்து  ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  பட்சீமா கிராமத்தில், கிருஷ்ணா நதியில் வந்து இணையும் படி திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதற்காக 124 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டப்பட்டது. 

இந்த பணிகள் அனைத்தும் 5 மாதம் 15 நாட்களிலேயே நிறைவடைந்தது.  இதையடுத்து  கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திட்டம்,  நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் தொடங்கி வைத்தார். 

கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக வந்த தண்ணீர், பட்சீமா கிராமத்தின் வழியாக ஓடும் கிருஷ்ணா நதியில் திறந்து விடப்பட்டது.  இந்த திட்டத்தின் மூலம் 80 டிஎம்சி தண்ணீர் வீணாவது தடுக்க முடியும். அதோடு இரு நதிகளும் இணையும் பட்சீமா கிராமமும் சுற்றுலாத்தளமாக மாற்றப்பட உள்ளது.

இரு நதிகளை இணைப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. ஆந்திர அரசு இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.


இப்போது தமிழகத்திற்கு வருவோம்...'

'இந்தியாவிலேயே தமிழகம்தான் நதி நீர் இணைப்புக்கு முன்னோடி , இதோ நாங்கள் நதி நீர் இணைப்பை தாமிரபரணியில் 'வெள்ள வடிகால் திட்டம்" மூலம் ஆரம்பிக்கிறோம்,' என்று  அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட, தாமிரபரணி -கருமேனி  ஆறு - நம்பி ஆறு இணைப்பு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.369 கோடியாகும். 2009ல்  ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010ல் ரூ.41 கோடியும் அதற்கு அடுத்த ஆண்டு ரூ.107 கோடியும் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டு  கட்ட பணிகள் முடிவடைந்தன. அதன்படி தாமிரபரணி ஆற்றிலிருந்து மூலக்கரைப்பட்டி வரை கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்தது. 


மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் 2012-13ம் நிதி ஆண்டில் ரூ.100 கோடியும் 13-14ம் நிதி ஆண்டில் ரூ.156 கோடியும் 14-15ம்  ஆண்டில் ரூ.119 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் மேம்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதில் 24.8 கோடி மட்டுமே  செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையை பொது பணித்துறை அரசுக்கு திரும்ப அனுப்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை  வறண்ட பகுதிக்கு திருப்பி விடும் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்  . என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், திட்டத்தின் மூன்றாம் கட்ட பணி எதற்காக நிறுத்தப்பட்டது. பணியை எப்போது மீண்டும் தொடங்குவீர்கள். எவ்வளவு காலத்திற்குள் பணியை முடிப்பீர்கள். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எதற்காக மீண்டும் திரும்ப அனுப்பினீர்கள்.  இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப்பேற்பது' என்று அடுக்கடுக்காக அரசுக்கு கேள்விகள் எழுப்பி உரிய பதிலை மூன்று வார காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். ஓராண்டிற்கு மேலாகியும் வழக்கு குறித்து மேல் கொண்டு தகவல்கள்  ஏதும் இல்லை.

தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் வெற்றி அடைந்தால் நெல்லை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான ராதாபுரம் வட்டாரப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளம் பெருகி
 தரிசு நிலங்கள் விளைநிலங்கள் ஆகும். மக்களின் வாழ்வாதாரமும், விவசாயமும் சிறக்கும். வரும் காலங்களில் பல தமிழக நதிகள் இணைக்கப்படுவதற்கு முன்னோடித் திட்டம் ஆகவும் இருக்கும். 


இரண்டு நாள் மாநாட்டில் இரண்டு லட்சம் கோடி அன்னிய முதலீடு திரட்டியதாக விளம்பரம் செய்யும் தமிழக அரசு தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீரும் வகையில் நதிநீர் இணைப்பு திட்டங்களிலும் முனைப்பையும், முழு முயற்சியையும் காட்டினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.