Wednesday, April 21, 2010

நீண்ண்ண்ண்ண்ண்ண்ட விடுமுறை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். கால, நேரம் பார்க்காமல் திட்டம் முடியும் வரை கடுமையாக உழைக்க வேண்டிய துறை கட்டுமானத் (Construction) துறையாகும் .என்னதான் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று வந்தாலும் முழுமையாக பணி நிறைவடைந்து ஒரு மனத்திருப்தியோடு சென்றால்தான் விடுமுறையை முழுமையாக அனுபவிக்க முடியும். ஒன்றரை வருட கடும்பணிக்கு பின் ஒரு நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது. குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஊரில் இருக்கலாம் என எண்ணம். ஊரில் இருக்கும் நேரம் வலையுலகம் பக்கம் வரமாட்டேன். எனவே வலைப்பூவிற்கு வருகை தரும் நண்பர்கள் எனது அனைத்து பல்சுவைப் பதிவுகளையும், பகிர்வுகளையும் படித்து ரசித்து மகிழ வேண்டுகிறேன்.



ஒரு இனிய காதல் தொடர்கதை

சில குளிர்ச்சியான கவிதைகள்











பயணப்பதிவுகள்
விறுவிறுப்பான திகில் கதைகள்



மேலும் பல சுவாரசியமான பதிவுகளுக்கும், பகிர்வுகளுக்கும் வலைப்பூவின் வலதுபக்கம் உள்ள மாதம் வாரியாக உள்ள பெட்டகத்தை திறந்து பார்த்து, படித்து மகிழுங்கள்.


நாளை (23.04.10 - வெள்ளி) எகிப்திலிருந்து கிளம்பி துபாய் வழியாக நாளை மறுநாள் (24.04.10 - சனி) காலை திருவனந்தபுரம் செல்கிறேன். அதன்பின் இரண்டு, மூன்று மாதங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாம் என எண்ணம். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொந்த ஊரில்தான் இருப்பேன். சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுதும் பரவலாக பயணம் செய்ய வேண்டியும் உள்ளது. ஊரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் thubairaja@gmail.com என்ற இணைய முகவரிக்கு தனிமடல் இடுங்கள். நிச்சயம் சந்திப்போம்.

நன்றி. வணக்கம்.

26 comments:

Chitra said...

Have a safe and fun vacation!

Starjan (ஸ்டார்ஜன்) said...

இறைவனின் கிருபையால் ஊருக்கு நல்லபடியாக சென்று மகிழ்ச்சியுடன் விடுமுறையை கழியுங்கள் ராஜா.

நண்பனை வழியனுப்பி வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். வாழ்த்துக்கள் ராஜா.

நாடோடி said...

விடுமுறை ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.....

சைவகொத்துப்பரோட்டா said...

மகிழ்ச்சியான விடுமுறை
நாட்களுக்கு வாழ்த்துக்கள்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்க‌ள் சீனிய‌ர்
நானும் மே மாச‌ க‌டைசில‌ வ‌ருவேன்.ச‌ந்திக்க‌லாம்...

ராமலக்ஷ்மி said...

விடுமுறை இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.

[நம்ம ஊருக்குதானே:)?]

'பரிவை' சே.குமார் said...

மே மாதம் வருகிறேன். கண்டிப்பாக சந்திக்கலாம். விடுமுறை சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

ஊரில் சந்திப்போம் ராஜா! மகிழ்ச்சிகரமான விடுமுறை நாட்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

பனித்துளி சங்கர் said...

ஆஹா ! இந்தியா போகிறீர்களா மிகவும் மகிழ்ச்சி நண்பரே . சொந்தங்கள் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள் .

நானும் விரைவில் வருவேன் . உங்களது விடுமுறை உங்களின் எண்ணப்படி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் .

கண்ணா.. said...

நீங்க முன்னாடி போங்க...

நான் பின்னாலே வாரேன்.........!!


ஆமாண்ணே நானும் அடுத்த வார்ர்ரரம்ம்ம் ஊருக்கு வாரேனே...:))

Ananya Mahadevan said...

நாங்க உங்களை மிஸ் பண்ணுவோம் ராஜா.. ஆனால் நீங்க ஊர்ல மனைவி, குழந்தையுடன் இருப்பீங்க.. சோ மகிழ்ச்சி! நல்லா எஞ்சாய் பண்ணுங்க! ஒரு வேளை இந்த இடைப்பட்ட கால்த்தில் இந்தியா வந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்!
அன்புடன்
அநன்யா

vasu balaji said...

வாங்க வாங்க. வலைப்பூ தள்ளிவெச்சிட்டு ’பூ’ஜா கூட ஜாலியா விளையாடுங்க. :))

Anonymous said...

Have a safe flight. மகிழ்ச்சிகரமான விடுமுறை நாட்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

ஜீவன்பென்னி said...

வாழ்த்துகள் பயணம் இனிதாக அமைய.

எல் கே said...

have a safe journey and enjoy urself with family. may god bless you my friend

ஹுஸைனம்மா said...

இனிய விடுமுறைக்கு வாழ்த்துக்கள்!!

Paleo God said...

சாக்லேட் பை பத்திரம் அண்ணாச்சி!!

:))

பத்மா said...

நல்ல மனநிம்மதியோடும் சந்தோஷத்தோடும் விடுமுறையை கழிக்க வாழ்த்துக்கள்

Thamira said...

என்னா நம்பிக்கையா உங்களுக்கு இதையெல்லாம் படிப்போம்னு.?

ஏப்ரல் 29 - ஜூன் 2. நான்கு நாட்கள் நானும் அதே தாலுகாவில்தான் இருப்பேன். தொடர்பலாம் : thaamiraa@gmail.com

ஹேமா said...

எங்கடா காணோமேன்னு பார்த்தேன்.ஓ...விடுமுறையா !
சரி சந்தோஷமா இருந்திட்டு வாங்க.பாத்திட்டு இருக்கோம்!

DREAMER said...

கோடை விடுமுறையை மிகச்சிறப்பாக கொண்டாடிவிட்டு குதூகலத்துடன் திரும்ப வாழ்த்துக்கள்..! அதுவரை உங்கள் கதைகளையும், பல்சுவை இடுகைகளையும், படித்துக் காத்திருக்கிறோம்..!

-
DREAMER

Ahamed irshad said...

விடுமுறை நாட்களுக்கு வாழ்த்துக்கள் ராஜா...

சாரி துபாயை

விட்டுட்டேன்

வாழ்த்துக்கள் துபாய்ராஜா...

சாமக்கோடங்கி said...

ஜமாய்ங்க துபாய் ராஜா... வாழ்த்துகள்..

அன்புடன் நான் said...

"நீண்ண்ண்ண்ண்ண்ண்ட விடுமுறை"....
ஆனா மிக மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட விடுமுறையா இருக்கே.
எப்ப வருவிங்க???

தக்குடு said...

sowkyamaa irkeyilaa annaachi?...:)

அகல்விளக்கு said...

ரொம்ப நாள் ஆச்சே அண்ணா....

எப்ப திரும்ப வருவீங்க.... :(