Tuesday, April 13, 2010

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நமது முன்னோர்கள் காலம் காலமாக சீரும்,சிறப்புமாக கொண்டாடிய பண்டிகை. தமிழர்கள் மட்டுமல்ல திராவிட மக்களால் அண்டை மாநிலம் ஆந்திராவில் யுகாதி என்றும், மலையாளிகளால் சித்திரை விசு என்றும் சித்திரை மாதப்பிறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாள் காட்டிகளும், பல்வேறு குறிப்புகளும் தமிழ் ஆண்டின் தொடக்கமாம் சித்திரை மாதத்தின் சிறப்பை அறுதியிட்டு கூறுகின்றன.


என்னதான் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வரலாற்றில் அவர்கள் பெயர் இடம்பெற சட்டம் போட்டு மாற்றினாலும் நாளை ஆட்சிக்கு வருபவர்கள் அவர்கள் பெயர் பெற மறுபடியும் தமிழ் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று அறிவிக்கப்போவது நிச்சயம். விடுமுறை நாள்களை குறைக்க வேண்டுமென்றால் பொங்கல், தீபாவளி போன்ற மற்ற முக்கியமான பண்டிகைகளையும் கோடை விடுமுறைக்கு மாற்றி விடலாமே...


மற்றவர்களை கேலி, கிண்டல் செய்யும் நாத்திக அரசியல்வியாதிகள் வீடுகளில் நள்ளிரவு யாகங்களும், ஹோமங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் செல்லாத கோயில்கள் இல்லை. செய்யாத பூஜைகள் இல்லை. ஏன் நமது முதல்வரே மஞ்சள் சால்வை மகிமை தெரிந்தவர்தானே... பிறகு ஏன் சாதாரண மக்களின் சடங்கு, சம்பிரதாயங்களிலும், நம்பிக்கைகளிலும் குறுக்கிட வேண்டும்.


எங்கள் ஊரில் சித்திரை விசு பத்து நாள்களுக்கும் மேல் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். வரிசையாக கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வரர் கோவில் என ஒவ்வொரு நாளும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு கடைசியாக பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவோடு சித்திரை விசு பண்டிகை சிறப்பாக முடிவடையும்.


இந்த பண்டிகைக்காக எல்லா ஊர்களில் இருந்தும் பாபநாசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். லட்சக்கணக்கான மக்கள் பாபநாசம் ஆற்றில் குளித்து கோயிலுக்கு சென்று வழிபடுவர். கூட்ட நெரிசலின் காரணமாக வழக்கமாக பாபநாசம் பஸ் டிப்போ வரை செல்லும் பேருந்துகள் இந்த பண்டிகையின் போது மட்டும் விக்கிரசிங்கபுரத்திலே நிறுத்தப்பட்டு விடும்.


விக்கிரமசிங்கபுரம் முதல் பாபநாசம் வரை சாலையோரம் பண்டிகை கால கடைகள் காணலாம். விடிய விடிய சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நல்ல கூட்டம் என வீட்டுக்கு போன் செய்து அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உள்ளூர், வெளியூர் மக்களை மகிழ்விக்க ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் இரவுகளில் கச்சேரிகளும், பட்டிமன்றங்களும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.துபாயில் இருந்தவரை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லாப் பண்டிகைகளையும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து மிகச்சிறப்பாக விருந்துகள் நடத்தி கொண்டாடுவோம். 2006 சித்திரை விசு அன்று உடன் இருந்த இனிய மலையாள நண்பர் முந்திய இரவே தட்டில் பழங்கள், கண்ணாடி வைத்து அலங்கரித்து விட்டு காலையில் அனைவரையும் எழுப்பி கண்விழிக்காமல் அழைத்து சென்று கனிநோக்கச் செய்தார். பின் ஊரில் செய்வது போலவே வெல்லத்தில் அவல் நனைத்தும், எரிசேரி, புளிசேரி, அவியல், பாயாசம், அடைப்பிரதமன் போன்ற பாரம்பரிய பண்டிகை உணவுகளை சுவையாக தயாரித்து சிறப்பான விருந்தளித்தது மறக்கவே முடியாது.


அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரை விசு திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

25 comments:

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ராஜா... வந்து படிக்கறேன் வெவரமா..

அன்பரசன் said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

படிக்கவே மகிழ்ச்சியாக
இருக்கிறது!!!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பிரபாகர் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜா!

ரொம்ப அனுபவிச்சி எழுதியிருக்கீங்க!

பிரபாகர்...

நாடோடி said...

வ‌ண‌க்க‌ம் தோழ‌ரே... உங்க‌ளுக்கும் என‌து இனிய‌ த‌மிழ் புத்தாண்டு ந‌ல் வாழ்த்துக்க‌ள்..

Raju said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்ண்ணே..!

settaikkaran said...

அருமையான இடுகை!

கண்ணா.. said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

பூஜா குட்டிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்

:)

Ananya Mahadevan said...

ரொம்ப ரசிச்சுப்படிச்சேன்... உங்கள் வர்ணணை அழகு! ஊர்ச்செய்திகளும் நாட்டு நடப்பையும் மிகவும் ரசனையுடன் சொல்லி இருக்கிறீர்கள். துபாய்க்கொண்டாட்டங்கள் அருமையோ அருமை!

தக்குடு said...

//வரிசையாக கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வரர் கோவில் என ஒவ்வொரு நாளும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு கடைசியாக பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி கோயில் தெப்பத்திருவிழாவோடு// அட!! நம்ப ஊர் பயபுள்ளையா நீங்க?? சபாஷ்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ராஜா!

எறும்பு said...

வாழ்த்துக்கள்...

Chitra said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜா!

கண்ணா.. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜாண்ணா..

நான் ஏற்கனவே இதுக்கு கமெண்டு போட்டேனே.... காணோமே...!!!

நீங்க எடுத்து ஒளிச்சு வச்சுருந்தீங்கன்னா... போட்ருங்கண்ணே.....

அ. நம்பி said...

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Radhakrishnan said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அத்திரி said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

ராஜேஷ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமையான பதிவு

ஜீவன்பென்னி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல பகிர்வு.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

shaan said...

ஒரு சின்ன திருத்தம். யுகாதி இன்று கொண்டாடப்படுவது அல்ல. மார்ச் மாதமே கொண்டாடப்பட்டு விட்டது. காரணம் தெலுங்கு கன்னட மக்களின் வருடம் சந்திரன் விண்ணில் வலம் வருவதைப் பொறுத்து அமைந்தது. தமிழர் மலையாளிகளின் புதுவருடம் சூரியன் விண்ணில் வலம் வருவதைப் பொறுத்து அமைந்தது. பர்மா, கம்போடியா, இலங்கை, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இன்று தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவாளர்கள் தெலுங்கு புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்ததை இங்கு நினைவு கூர வேண்டியிருக்கிறது.

பத்மா said...

நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் ராஜா

பனித்துளி சங்கர் said...

வணக்கம் நண்பரே மிகவும் சிறப்பான பதிவு !

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சாந்தி மாரியப்பன் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.