Tuesday, February 09, 2010

குழியில் தள்ளிய குட்டிச்சாத்தான்...

மாதம் ஒரு திகில் கதையாவது எழுதலைன்னா அரேபிய அர்த்த ராத்திரிகளில் நல்லா தூக்கம் வரமாட்டேன்கிறது. படிச்சா உங்களுக்கு தூக்கம் வராதுன்னு சொல்றது என் காதுல விழலீங்கோ...

இதுக்கு முன்னாடி எழுதின பேய்க் கதையெல்லாம் படிக்காதவங்க வரிசையா எல்லாத்தையும் படிச்சிடுங்க .

3. “சந்திரமுகியை சந்தித்தேன்”


போல இதுவும் காற்றாலையில் வேலை பார்த்த போது நடநத சம்பவம்தான்.

காற்றாலைகள் மரபுசாரா மின் உற்பத்தியில் முக்கிய இடம் வகிப்பவை. இயற்கை மூலப்பொருள், குறைவான முதலீட்டில் நிறைவான உற்பத்தி, சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமை என எல்லா விஷயத்திலும் தனிப்பெருமை வாய்ந்தவை. எனது பதினாறு வருட வேலை அனுபவங்களில் இயற்கை சார்ந்த காற்றாலைப்பணியே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்ததாக இருக்கிறது.

நமது நாட்டில் 1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவளர்ச்சி அடைந்தது என்பதால் ஐ.டி. துறையை போல இந்த துறையிலும் இளைஞர்களே அதிகம். (அப்பாடி.., நாமளும் யூத்துதான்ங்க்கிற விஷயத்தை தெளிவுபடுத்தியாச்சு.).

காற்றாலையில் பராமரிப்பு துறையில் பணி என்பது ஒரு நாட்டின் இராணுவத்தின் பணி போல. இரவு பகல் பாராமல் எந்த நேரம் மெஷினில் பழுது ஏற்பட்டாலும் உடனே சென்று அதனை முழுமையாக தீர்க்கும் வரை மெஷினை விட்டு இறங்காமல் இருப்பது என்பது மிகவும் கடினமானது.

சரி நியூஸ் ரீல் போதும் கதைக்கு வருவோம்.

தேவர்குளம் செக்சனில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது தினமும் அம்பையிலிருந்து நெல்லை.பின் நெல்லையில் இருந்து தேவர்குளம் என பேருந்து பயணம். எனது டீம் உறுப்பினர்கள் தேவர்குளம் கம்பெனி விடுதியிலே தங்கியிருந்தார்கள். வாரம் ஒரு முறை அவரவர் ஊர்களுக்கு சென்று வருவார்கள்.

ஒரு நாள் அதிகாலையிலே ஊத்துமலை செக்சனிலிருந்து அழைப்பு. அவர்கள் செக்சன் மெஷின் ஒன்றில் பிரச்சினை. அவர்களது மெயிண்டெனன்ஸ் டீம் வேறு ஒரு வேலையில் பிசியாக இருந்ததால் எங்கள் டீமோடு வந்து உதவும்படி கேட்டுகொண்டார்கள். சரி என்று ஒத்துகொண்டு தேவர்குளம் வந்து ஆட்கள், தேவையான கருவிகள் எல்லாம் திரட்டி குறிப்பிட்ட மெஷினுக்கு சென்றோம். முதல் டீம் மேலே ஏறி என்ன பிரச்சினை என்று பார்த்து சொல்லிவிட்டார்கள். சற்று பெரிய பிரச்சினைதான்.

உடனடியாக அடுத்த டீமையும் மேலே அனுப்பி அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டு மாற்ற வேண்டிய பாகத்தை மெயின் ஸ்டோரில் இருந்து எடுத்து வர மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது.

நான்கு மணி அளவில் நானும் மேலே ஏறி வேலையில் ஈடுபட்டேன். பழுதடைந்த பாகத்தை கழற்றி கீழே இறக்க மாலை ஏழரை மணி ஆகிவிட்டது. புதிய பாகத்தை மேலே ஏற்றவே எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும். அதன்பின் வேலை முடித்து மெஷினை ஓட்ட எப்படியும் ஆறுமணி நேரத்திற்கும் மேலாகிவிடும். முந்திய தினம் அரசு விடுமுறை என்பதால் எல்லோருமே ஊருக்கு சென்று வந்திருந்தார்கள். அவரவர் வீட்டிலிருந்து அதிகாலையிலே கிளம்பி வந்தபடியால் அனைவருமே மிக அலுப்பாக இருந்தனர். இருந்தாலும் வேலையை முடித்துவிட்டுதான் இறங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அப்போது காற்று சீசன் இல்லை என்பதால் உற்பத்தி குறைவுதான். எனவே உற்பத்தி மேலாளரிடம் பேசி மறுநாள் காலை வந்து வேலை தொடங்க அனுமதி வாங்கிவிட்டேன். மேலேயே கருவிகளை பத்திரமாக வைத்து விட்டு எல்லோரையும் கீழே இறங்க சொன்னேன்.

அப்போது எனது டீமிலிருந்த கணேஷ், ”சார்,நீங்க எப்படி ஊருக்கு போவீங்க” என்று கேட்டான்.”இல்லைப்பா, இன்னைக்கு ரொம்ப நேரமாயிட்டுது. அதனாலே பேசாம இவங்களோட போய் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட வேண்டியதுதான்.” என்றேன்.

“சார், என்னோட வீடு ஆலங்குளம். எனக்கு ஊத்துமலையில் ஒரு பிரெண்ட் இருக்கான்” என்றவனை புரியாமல் பார்த்தேன்.

( தொடரும் )

31 comments:

ஹேமா said...

திகில் தொடரா.ஆர்வமா பயத்தோட பாத்திட்டு இருக்கேன் அடுத்த பதிவுக்காக.

Anonymous said...

காதலர் தினத்துக்கு ஏதாச்சும் போடாம ஏன் இந்த ட்ராகுலா வெறி:)

கலகலப்ரியா said...

sorry rajah.. horror thodar ellaam.. ennaala padikka mudiyathu.. :((... avvvv..

துபாய் ராஜா said...

/ஹேமா said...
திகில் தொடரா.ஆர்வமா பயத்தோட பாத்திட்டு இருக்கேன் அடுத்த பதிவுக்காக...//

ஹேமா,இந்த கதை படிச்ச முதல் ஆளு நீங்கதான்... தொடர்ந்து வாங்கோ... :))

துபாய் ராஜா said...

//சின்ன அம்மிணி said...
காதலர் தினத்துக்கு ஏதாச்சும் போடாம ஏன் இந்த ட்ராகுலா வெறி:)//

வாங்க, வாங்க சின்ன அம்மிணி... திகில் இல்லாத காதல் தித்திக்குமா... காதலர் தினத்துக்குதான் இன்னும் நாலு நாள் இருக்கே... காதல் கவிதையும், கதைகளுமா கலக்கிப்புடுவோம் கலக்கி... :))

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
sorry rajah.. horror thodar ellaam.. ennaala padikka mudiyathu.. :((... avvvv..//

ப்ரியா, இதெல்லாம் சும்மா ஜுஜூபி கதைகள்... நாங்கள்லாம் இருக்கும்போது உங்களுக்கு அப்படி என்ன பயம்...

நான் உங்களை ரொம்ப ரொம்ப தைரியமானவர்ன்னுல நினைச்சேன். :((

உங்க பயம் தெளியற வரை திகில் கதைகள் தொடரும். :))

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

இன்னும் அதிகமான அழுத்தத்துடன் எழுதவும்

Raju said...

ரைட்டு..போலாம்..!
அடுத்த பார்ட்டு.

எறும்பு said...

கதை திகிலை கிளப்புது.. கண்டினிவ்..
:)

எறும்பு said...

இன்னும் குட்டிச்சாத்தான் வரலையே?

துபாய் ராஜா said...

// நண்டு=நொரண்டு மொழிந்தது...
இன்னும் அதிகமான அழுத்தத்துடன் எழுதவும்..//

நண்டண்ணா, இது ஸ்டார்ட்டிங் தான்... அடுத்து வரும் பாகங்களையும் படிங்க....

தவிர இன்னும் அழுத்தி எழுதினா கீ போர்டு உடைஞ்சிடும்... :))

கோச்சுக்காதீங்க... சும்மா லுல்லூலாயிக்கு... :))

துபாய் ராஜா said...

// ♠ ராஜு ♠ said...
ரைட்டு..போலாம்..!
அடுத்த பார்ட்டு//

வாங்க தம்பி ராஜூ, அடுத்த பார்ட் இன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு... :))

vasu balaji said...

வெயிட்டிங்கு

கண்ணா.. said...

//1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவளர்ச்சி அடைந்தது என்பதால் ஐ.டி. துறையை போல இந்த துறையிலும் இளைஞர்களே அதிகம். (அப்பாடி.., நாமளும் யூத்துதான்ங்க்கிற விஷயத்தை தெளிவுபடுத்தியாச்சு.). //

ஹல்லோ............1990 லதான் நீங்க யூத்து....இது 2010

கண்ணா.. said...

என்ன பாஸ் திகில் தொடர் சொல்லுறீங்க....இன்னும் மோகினி வரலையே...

சும்மா கும்முன்னு அருந்ததி அனுக்‌ஷா படத்தை போட்டு விடுங்க...கலர்புல்லா இருக்கும்..ஹி..ஹி

சிநேகிதன் அக்பர் said...

கலக்கலா இருக்கு பாஸ் உங்க எழுத்து.

அடுத்த பகுதி எப்போன்னு ஆவலா எதிர் பார்க்கிறோம்.

அப்புறம் முக்கியமான விசயம். நீங்க யூத்துதான்.

துபாய் ராஜா said...

// எறும்பு said...
கதை திகிலை கிளப்புது.. கண்டினிவ்..
:)//

வரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி எறும்பாரே... :))

துபாய் ராஜா said...

// எறும்பு said...
இன்னும் குட்டிச்சாத்தான் வரலையே?//

வர்ர்ர்ருருரும்.ஆனா வர்ர்ராது.... :))

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள் said...
வெயிட்டிங்கு..//

வாங்க பாலா சார்... நம்ம சபையில எப்பவுமே உங்களுக்கு கன்ஃபார்ம்டு சீட்டு தான்.... :))

துபாய் ராஜா said...

// கண்ணா.. said...
//1990-க்குப் பின்னே காற்றாலை தொழில்நுட்பம் பெருவளர்ச்சி அடைந்தது என்பதால் ஐ.டி. துறையை போல இந்த துறையிலும் இளைஞர்களே அதிகம். (அப்பாடி.., நாமளும் யூத்துதான்ங்க்கிற விஷயத்தை தெளிவுபடுத்தியாச்சு.). //

ஹல்லோ............1990 லதான் நீங்க யூத்து....இது 2010//

அவ்வ்வ்வ்வ்... கண்ணா.. ஏன் இந்த கொலை வெறி... நான் காத்தாடில வேலை பார்த்தது 2006- 2008 தான். ஒரு புள்ளி விபரம் கொடுத்தா கோலம் போட்டு கொதற வாரியளே... :))

1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன். வேணும்ன்னா எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்டை ஸ்கேன் பண்ணி அனுப்புறேன் பாஸ்... :))

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ஓ ....அப்படியா ,,,
தி்கில் மன்னன் பராக்....பராக் ...பராக்...

கண்ணா.. said...

//1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன்//

பர்ஸ்ட் அட்டெம்ட்ன்னு வச்சா கூட 16 வயசு..அப்புறம் ஓரு 20 வருசம் ஸோ இப்ப உங்களுக்கு 36 வயசு....

யூத் பட்டத்தை பார்டர்ல மிஸ் பண்ணுறீங்களே ராஜா.....இப்ப உங்க இளவரசந்தான் யூத்து.....


எப்பிடி மடக்குனோம் பாத்தியளா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆர்வமாய் நானும் எதிர்பாக்கிறேன் நாளையை ..

தேவர்குளம் அய்யனார்ஊத்து , கயத்தார் என நம்ம ஏரியாவா இருக்கு ..

கலக்குறீங்களே .. ஆமா எதாவது மோகினியை கண்டீங்களா ராஜா ..

துபாய் ராஜா said...

//கண்ணா.. மொழிந்தது...
என்ன பாஸ் திகில் தொடர் சொல்லுறீங்க....இன்னும் மோகினி வரலையே...//

கண்ணா, இது குட்டிச்சாத்தான் கதை... மோகினியைப் பார்க்கணும்ன்னா பழைய கதைகளைப் படிங்க.... :))

//சும்மா கும்முன்னு அருந்ததி அனுக்‌ஷா படத்தை போட்டு விடுங்க...கலர்புல்லா இருக்கும்..ஹி..ஹி//

கண்ணா, உங்க ரோசனையை மைண்ட்ல வச்சுகிடுதேன்... :))

துபாய் ராஜா said...

//அக்பர் said...
கலக்கலா இருக்கு பாஸ் உங்க எழுத்து.

அடுத்த பகுதி எப்போன்னு ஆவலா எதிர் பார்க்கிறோம்.//

நன்றி அக்பர்.உங்களைப் போன்ற நண்பர்களின் தொடர்வருகையும், ஊக்கமும்தான் எனது எழுத்திற்கு ஆணிவேராக இருக்கிறது.

//அப்புறம் முக்கியமான விசயம். நீங்க யூத்துதான்...//

என் இனமய்யா நீர்.... :))

துபாய் ராஜா said...

//நண்டு=நொரண்டு said...
ஓ ....அப்படியா ,,,
தி்கில் மன்னன் பராக்....பராக் ...பராக்...//

நன்றி நண்டாரே... நம்ம சபையில நண்பர்கள் எல்லாருமே ராஜாதான்... :))

துபாய் ராஜா said...

// கண்ணா.. said...
//1990ல்தான்ங்க பத்தாப்பு முடிச்சேன்//

பர்ஸ்ட் அட்டெம்ட்ன்னு வச்சா கூட 16 வயசு..அப்புறம் ஓரு 20 வருசம் ஸோ இப்ப உங்களுக்கு 36 வயசு....//

அவ்வ்வ்வ்வ்வ்வ்... கண்ணா, சபையில இப்படியா சட்டுன்னு உடைக்கிறது...

ஒத்துக்கிறேன். உண்மையிலே நீரு புள்ளி (விவர) ராசாதான்... :))


//எப்பிடி மடக்குனோம் பாத்தியளா..//

அசந்தா மடக்குறது உங்க பாலிசி... மடங்கினாலும் அசராம இருக்குறது எங்க பாலிசி.... :))

துபாய் ராஜா said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆர்வமாய் நானும் எதிர்பாக்கிறேன் நாளையை ..

தேவர்குளம் அய்யனார்ஊத்து , கயத்தார் என நம்ம ஏரியாவா இருக்கு ..//

அட..ஊர் பேரெல்லாம் கரெக்ட்டா சொல்றீங்களே... ஷேக்கு.. நீங்களும் காத்தாடில வேலை பார்த்தீங்களா....

//கலக்குறீங்களே .. ஆமா எதாவது மோகினியை கண்டீங்களா ராஜா ..//

கதையின் தலைப்பிலே பதில் இருக்கு நண்பரே... :))

Unknown said...

நடக்கட்டும்.., நடக்கட்டும்..,

Ananya Mahadevan said...

ராஜா, இப்படி முக்கியமான இடத்துல போய் தொடரும் போட்டுட்டீங்களே. இது நியாயமா? அடுத்த பகுதி சீக்கிரம் வரட்டும். கெஸ்ட் ஹவுஸில் இங்கே பின்னூட்டம் போட்டிருக்கும் கண்ணாவைப்பார்த்தேன்னு சொல்லி சப்புன்னு முடிச்சிராதீங்கப்பூ

துபாய் ராஜா said...

// பேநா மூடி said...
நடக்கட்டும்.., நடக்கட்டும்..,//

வாங்க ஆனந்த், வாங்க....