Monday, April 19, 2010

ஆப்பிரிக்காவின் ஆச்சரியம் - எகிப்து

எகிப்து- ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்து, ஆசிய கலாச்சாரத்தோடு , அரேபிய பழக்க வழக்கங்களோடு, ஐரோப்பிய நாகரிகமும் கலந்த ஆச்சரியமான நாடு. ஆசிய , ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களின் நுழைவாயிலாகவும், அரேபி பேசும் நாடுகளில் பெரியதாகவும் எகிப்து உள்ளது.


ஆப்பிரிக்காக் கண்டத்தில் இருந்தாலும் எகிப்திய மக்கள் மற்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களைப் போன்ற தோற்றம் இல்லாமல் நமது காஷ்மீரிகளைப் போல் சிவந்த நிறமும் , அழகு தோற்றமும் கொண்டவர்கள். நாட்டின் பெரும்பான்மைப் பகுதி பாலைவனம் என்றாலும் வற்றாத ஜீவநதியான நைல்நதியை கால்வாய்கள் மூலம் பலபகுதிகளுக்கும் கொண்டு சென்று பசுமையாக்கி உள்ளனர்.


மாவீரன் அலெக்சாண்டரால் மத்திய தரைக்கடல் கரையில் அமைக்கப்பட்ட அலெக்சாண்டிரியா நகரம் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும் அழகான குளுகுளு நகரமாகும். உலக அளவில் முன்னோடி மாதிரி நகரங்கள் வரிசையில் அலெக்சாண்டிரியா தனி இடம் வகிக்கிறது. இங்கு வருடத்தில் இரண்டு மாதம் மட்டுமே மிதமான கோடைக்காலம். பத்து மாதங்கள் பனிக்கால ஆடைகள் அணிந்து திரியும் மக்கள், இரண்டு மாதக் கோடையில் இரவு , பகல் எப்போதும் கடலில் குளித்து மகிழ்வர்.


புராதான பிரமிடுகள் தலைநகர் கெய்ரோ அருகிலே அமைந்திருந்தாலும், பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும், கோயில்களும் அப்பர் எகிப்து என அழைக்கப்படும் நைல்நதிக்கரையோரம் அமைந்துள்ள அஸ்வான் மற்றும் லோக்சூரிலே உள்ளன. சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற பல இடங்கள் எகிப்தில் உள்ளன. இங்கு வரும் முன் இணையத்தில் எல்லாத் தகவல்களையும் அறிந்து பின் வந்து சுற்றி பார்த்தால் இனிமையான பயணமாக இருக்கும்.எகிப்தின் புராதன பெயர் மஸைர் என்பதாகும். எனவே அவர்கள் மஸ்ரிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்ற அரேபிய நாடுகளை விட எகிப்தில் பேசப்படும் அரேபி மிகவும் இலக்கணச் சுத்தமுடையது. மென்மையான, இனிமையான உச்சரிப்பு கொண்டது. அமீரகத்தில் இருந்தபோது அங்குள்ளவர்களின் கடினமான உச்சரிப்பால் அரேபியை முரட்டு மொழி என்றுதான் நானும் நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு எகிப்தியர்கள் பேசும் இனிமையால் கவரப்பட்டு அரேபியை கற்றறிந்து சரளமாக பேசுகிறேன்.


இந்தியர்கள் என்றால் எகிப்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். காந்திஜி, நேருஜி, இந்திராஜி என நமது தேசத்தலைவர்களை பிரியமாக அழைக்கிறார்கள். லண்டனுக்கு வட்டமேஜை மாநாடு செல்லும் வழியில் காந்தியடிகள் எகிப்து வந்து சென்றதை இப்போதும் பலரும் நினைவு கூறுகிறார்கள். வல்லரசுகளின் பனிப்போருக்கு எதிராக நமது அன்றைய பிரதமர் திரு. நேருவும், எகிப்திய அதிபர் திரு.நாசரும், இந்தோனேஷிய அதிபர் திரு.சுகர்த்தோவும் இணைந்து அணி சேரா இயக்கம் ஆரம்பித்தபின் இந்தியா எகிப்திற்கு பல உதவிகள் செய்துள்ளது என்று நன்றியோடு கூறுகிறார்கள். விமான நிலையத்தில் வந்து இறங்குவது முதல் நாம் இங்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதைதான். இந்திப்படங்கள்தான் எல்லா வீடுகளிலும் 24 மணி நேரமும் டிவி சேனல்களில் ஓடும். ஏனென்றால் நமது கலாச்சாரமும், எகிப்திய கலாச்சாரமும் ஏறக்குறைய ஒன்றுதான். அமிதாப்பச்சன் எகிப்தியர்களின் ஆதர்சன ஹீரோ. எந்த நாட்டில் நீங்கள் எகிப்தியரை சந்தித்தாலும் அமிதாப்பச்சன் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். எகிப்தில் அமிதாப் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக திகழ்கிறார். இப்போதும் வார இறுதிகளில் அவர் நடித்த பழைய ஆக்சன் இந்திப் படங்களே எல்லா டி.வி. சானல்களிலும். அதிபர் தேர்தலில் நின்றால் கூட அன்னபோஸ்ட்டாக ஜெயித்துவிடுவார். ஒருமுறை அவர் எகிப்து வந்திருந்த போது ஏர்போர்ட்டிலும், வழி நெடுங்கிலும் மக்கள் அலை அலையென கூடி உற்சாக வரவேற்பு அளித்தனராம். இந்திப்படங்களில் நடித்துள்ளதால் நமது ரஜினி, கமலுக்கு கூட இங்கு ரசிகர் உண்டு.


வளைகுடா நாடுகளில் இந்தியர்களோடு வேலை பார்த்த எகிப்தியர்கள் பலரும் சரளமாக இந்தி பேசி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர். ரொட்டி போன்று பெரும்பாலும் மிக எளிமையான உணவே உண்ணுகின்றனர். எகிப்து குளிர்ந்த நாடு என்பதால் வியர்ப்பதே இல்லை. எனவே கோடைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் மிக குறைவாகவே நீர் அருந்துகின்றனர். குளிருக்காக எப்போதும் சூடான தேநீர் அருந்திக்கொண்டே இருப்பர். குளிர் காரணமாக பெரும்பான்மையோருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களோடு பெண்களும் சீசா எனப்படும் ஹூக்கா புகைப்பதில் வல்லுநராக உள்ளனர்.பெரும்பாலும் அவரவர் துணையை அவரவரே தேடிக்கொள்கின்றனர். உடன் படிப்பவர்கள், நண்பனின் சகோதரி, உறவினர்கள் என குறுகிய வட்டத்தினுள்ளே காதல் மலர்கிறது. ஆண்கள் முதலில் குறிப்பிட்ட பெண்ணின் சம்மதம் பெற்ற பின் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். பின் நமது நாட்டைப் போலவே மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு சென்று பேசி திருமண நிச்சயார்த்தம் செய்கின்றனர். அதன்பின் எத்தனை ஆண்டானாலும் சொந்த வீடு, வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், நல்ல வேலை, திருமணத்திற்காக மணமகளுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் ஆகியவற்றை மணமகன் சேர்த்த பின்னரே திருமணம் என்பதால் தற்போதைய காலத்தில் எகிப்தில் திருமணம் ஆகாதவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


எகிப்திய மருத்துவர்களும், கட்டுமான பொறியாளர்களும் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். அவர்களது திறமைக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் பார்ப்போரை வியக்க வைக்கும் பிரமிடுகளும், பதப்படுத்தப்பட்ட உடல்களான மம்மிகளுமே சாட்சி.
அலெக்சாண்டிரியா நகரம் -
1 ,

  2

3

கட்டுமானப்பணியில் பல நாடுகள் சென்று கொண்டிருந்தாலும் கடந்து ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை தந்த எகிப்தை விட்டு பிரிவது மனதிற்கு கஷ்டமே....

33 comments:

Chitra said...

இந்தியர்கள் என்றால் எகிப்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். விமான நிலையத்தில் வந்து இறங்குவது முதல் நாம் இங்கு எங்கு சென்றாலும் முதல் மரியாதைதான்


.... Cool! I like it!

vasu balaji said...

எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கும். நமக்குத்தான்...சாரி..

யாசவி said...

Is it true their eating very simple?

My experience they are most eating people.

Most tuf people

Other areas this post is more informative

சைவகொத்துப்பரோட்டா said...

நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது,
உங்கள் கட்டுரை படிக்கும்போது,
வாழ்த்துக்கள், நன்றி.

நாடோடி said...

எகிப்தை ப‌ற்றி ப‌ல‌ தெரியாத‌ விச‌ங்க‌ளை தெரிந்து கொண்டேன்.. தொட‌ருங்க‌ள்.

பனித்துளி சங்கர் said...

எகிப்து"பற்றி நான் இதுவரை அறியாத பல தகவல்களை உங்களின் பதிவின் வாயிலாக அறிந்துகொண்டேன் .
பகிர்வுக்கு நன்றி நண்பரே !

ஏலே மக்கா மீண்டும் வருவோம்ல எகிப்து"போறதுக்கு இல்லைல அடுத்த பதிவை படிக்கல.

க‌ரிச‌ல்கார‌ன் said...

அங்க‌ என‌க்கு ஒரு வேலை கிடைக்குமா சீனிய‌ர்?????

மாதேவி said...

எகிப்தியர்கள் பற்றிய நிறைந்த தகவல்கள்.சிறப்பான இடுகை.

துபாய் ராஜா said...

சித்ராக்கா, வானம்பாடிகள் ஐயா வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

Anonymous said...

சொந்த வீடு, வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், நல்ல வேலை, திருமணத்திற்காக மணமகளுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் ஆகியவற்றை மணமகன் சேர்த்த பின்னரே திருமணம் என்பதால் தற்போதைய காலத்தில் எகிப்தில் திருமணம் ஆகாதவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
//
அட... அப்புறம்...

Anonymous said...

ஒன்றரை ஆண்டுகளாக இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை தந்த எகிப்தை விட்டு பிரிவது மனதிற்கு கஷ்டமே....
//

பிடிச்ச இடத்தை விட்டு போனால் மனசு கணக்க தானே செய்யும்.

Anonymous said...

நல்ல அழகான சுவராசியமான பதிவு தல. எழுத்து ஸ்டைலும் அழகு.

துபாய் ராஜா said...

//யாசவி said...
Is it true their eating very simple?

My experience they are most eating people.

Most tuf people

Other areas this post is more informative//


அன்பு யாசவி, முதல் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

எகிப்து வந்தது முதல் மக்களோடு மக்களாக பழகி அறிந்த அனுபவ கருத்துக்களையே பதிவாக எழுதி உள்ளேன். வழக்கமாக எகிப்தியர்கள் நம்மைப் போல் நேரத்திற்கு உண்ணும் பழக்கம் இல்லாதவர்கள். உள்ளூர் பணம் ஒரு பவுண்டிற்கு நாலு ரொட்டிகள் வாங்கி பசி எடுக்கும் போதெல்லாம் கடிக்கின்றனர். கணக்கில்லாமல் பால் கலக்காத கறுப்பு தேநீர் அருந்துகின்றனர். ஆனால் விருந்து என்று சென்று விட்டால் வெளுத்துகட்டிவிடுவர்.... :))

துபாய் ராஜா said...

நண்பர்கள் சைவகொத்துப்பரோட்டா, நாடோடி ஸ்டீபன்,பனித்துளி சங்கர் தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

துபாய் ராஜா said...

//க‌ரிச‌ல்கார‌ன் said...
அங்க‌ என‌க்கு ஒரு வேலை கிடைக்குமா சீனிய‌ர்?????//

என்ன மாதிரி வேலை வேணும்ன்னு சொல்லுங்க. ஏற்பாடு பண்ணிடலாம் ஜூனியர்.....

துபாய் ராஜா said...

// மாதேவி said...
எகிப்தியர்கள் பற்றிய நிறைந்த தகவல்கள்.சிறப்பான இடுகை.//

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சகோதரி மாதேவி...

ஹுஸைனம்மா said...

//எகிப்தை விட்டு பிரிவது மனதிற்கு கஷ்டமே....//

அடுத்து எங்கே?

ஹேமா said...

எப்பவும் போல நீங்கள் சொல்லும் விஷயத்தோடு ஒன்றிவிட வைத்திருக்கிறீர்கள்.சொல்லும் வேகமும் விதமும் ஒரு காந்தம்.

ஜீவன்பென்னி said...

தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டேன். பதிவு நல்லாயிருக்கு.

துபாய் ராஜா said...

அன்பு நண்பர் ஆனந்த், வரவிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

கண்ணா.. said...

நல்ல அனுபவ பகிர்வு அண்ணா...

இங்கும் மற்ற அரபிகளோடு ஓப்பிடுகையில் எகிப்தியர்கள் நல்ல டெக்னிக்கல் அறிவோடு இருக்கிறார் (இங்கு மற்ற அரபிகளோடுங்கறதை நல்லா அழுத்தி படிச்சுகிடுங்க)

:)

துபாய் ராஜா said...

//ஹுஸைனம்மா said...
//எகிப்தை விட்டு பிரிவது மனதிற்கு கஷ்டமே....//

அடுத்து எங்கே?//

முதல்ல அலத்தூல் வீடு..அப்புறம்தான் அடுத்த நாடு ஹுஸைனம்மா ...

துபாய் ராஜா said...

// ஹேமா said...
எப்பவும் போல நீங்கள் சொல்லும் விஷயத்தோடு ஒன்றிவிட வைத்திருக்கிறீர்கள்.சொல்லும் வேகமும் விதமும் ஒரு காந்தம்.//

உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும்,ஆதரவுமே ஊக்கமும், உற்சாகமும் தந்து உதவுகின்றன. நன்றி ஹேமா.

துபாய் ராஜா said...

அன்பு சகோதரர்கள் ஜீவன் பென்னி, கண்ணா... தொடர்வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் ராஜா, வீட்டுக்கு போறீங்களா ????. அருமையான தகவல்கள், அராபிய கண்டத்திலேயே ஒரு மாதிரி அடி படாமல் பிழைத்து விட்டார்கள் என்றால் அது எகிப்தியர்கள் தான், ( ஈராக் / ஈரான் என்ன நேர்ந்தது என்று நீங்களே பார்த்து கொள்ளுங்கள் ) ... கொஞ்சம் சத்தமாக (?) உரையாடுவார்கள் ( நம்மை போல ) ... அவ்வளவாக சுத்தம் கிடையாது என்று பேச்சு, ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை , இங்கு துபாயில் செயற்கை மனம் கொஞ்சம் ஜாஸ்தி, அமிதாப் பச்சன் நிஜமாகவே பெரிய சக்தி தான் அங்கு.

சுந்தர்

முகுந்த்; Amma said...

//இந்தியர்கள் என்றால் எகிப்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.//

அப்படியா, நல்ல செய்தி. எகிப்த் பற்றி நெறைய தெரிந்து கொண்டேன். செய்திக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

மென்மையாக பேசினாலும் சில சமயம் குரல் உச்சஸ்தாயிக்கு போய் விடுகிறது.

சாப்பிடும் போது ஃபதல் என்று சாப்பிடக் கூப்பிடும் நாகரிகம்.

அஸ்வான் போன்ற இடங்களிலிருந்து வரும் எகிப்தியர்களை எகிப்தியர்களே சயிதி என்று அழைக்கிறார்கள்.இந்த சயிதிகள் நம்ம ஊர் கிராமவாசிகள் மாதிரி போல இருக்கிறது.ஏசு நாதர் தூதர்கள் மாதிரி நீளமான அங்கி அணிகிறார்கள்.சில சமயம் வரலாறு ஏதாவது உல்ட்டாவாகி யூதர்கள் தகிடுதத்தம் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு.

நமக்கெல்லாம் திருட்டுப் பயலே எகிப்திய பெல்லி டான்ஸ் ஜொள்ளு மாதிரி.எகிப்தியர்களுக்கு ஷெனாய் மாதிரி வாத்தியங்களும் பெல்லி டான்ஸும் கல்யாண கலாச்சாரங்கள்.

டீயில சர்க்கரை அதிகமா போடணும்.

பிரமிடுகள் நமக்கும்,மேற்கத்திய நாட்டவருக்குமே பிரமிப்பு.எகிப்துகாரஙகிட்ட கேட்டா அது என்னமோ அரம்ன்னோ என்னவோ சொல்கிறார்.கல்லறைக்கெல்லாம் யார் போவான்னு திருப்பி கேள்வி.

ஆனாலும் எகிப்து பிரமிடுகள் தோண்டத் தோண்ட கலாச்சார,கால,கட்டிட,வரலாற்றுப்
புதையல்.

எகிப்து வராமலே எவ்வளவு பெரிய பின்னூட்டம்.வந்திருந்தா இன்னும் தொடரும்தான்:)

உங்கள் இடுகையின் பெரும்பகுதியின் சாரம் வளைகுடா எகிப்தியர்களிடம் பிரதி பலிக்கிறது.

மெர்சீடிஸ் கார்ன்னா எகிப்துக்கு சுட்டுட்டுப் போயிடறாங்களே?டாக்சி விடறாங்களோ அல்லது புராதன கலைப் பொருளா சேமிக்கிறாங்களா?

ராஜ நடராஜன் said...

//இங்கும் மற்ற அரபிகளோடு ஓப்பிடுகையில் எகிப்தியர்கள் நல்ல டெக்னிக்கல் அறிவோடு இருக்கிறார் (இங்கு மற்ற அரபிகளோடுங்கறதை நல்லா அழுத்தி படிச்சுகிடுங்க)//

நல்ல வேளை அடைப்பான் வந்து உங்களை காப்பாத்துச்சு கண்ணா!இல்லைன்னா தலையில ஒரு கொட்டுத்தான்:)

சிநேகிதன் அக்பர் said...

எகிப்து செல்ல வேண்டும் போல் இருக்கிறது.

உங்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி.

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

சுந்தர் சார், முகுந்த் அம்மா வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

துபாய் ராஜா said...

அன்பு ராஜ நடராஜன் வருகைக்கும், கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி.

ஃபதல் என்று அழைத்து விருந்தோம்பலில் தமிழர்க்கு இணையான நாகரிகம் கொண்டவர்கள் என்பது உண்மையான உண்மை.

அஸ்வான் நகரை சுற்றி அமைந்துள்ள பகுதி நுபியா என்று முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது. அங்கு வாழும் மக்கள் நுபியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்பகுதியை சேர்ந்தவர்கள் சூடானிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால் அவர்கள் நிறம், தோற்றம்,உணவு,உடை பழக்க வழக்கங்கள் எகிப்தியர்களை விட வித்தியாசமாகவே இருக்கும். அஸ்வான் சூடான தட்பவெப்பம் கொண்டது என்பதால் நுபியர்கள் தென்னிந்தியர்கள் போன்ற மாநிறமும்(கறுப்பு), உருவ அமைப்பும் கொண்டவர்கள். கெய்ரோ, அலெக்சாண்டிரியா நகரங்களின் குளிர்ந்த தட்பவெப்பத்தால் எகிப்தியர்கள் வட இந்தியர்களைப் போல நல்ல நிறமாக உள்ளனர்.

எகிப்து வராமலே பெல்லி டான்ஸ், டீ, பிரமிடு நீங்களும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சுருக்கீங்களே.

பெட்ரோல் விலை குறைவு என்பதால் அனைவரும் புதிய, பழைய கார்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்.

நன்றி.வணக்கம்.

துபாய் ராஜா said...

எகிப்து உங்களையும்,ஸ்டார்ஜனையும் அன்புடன் வரவேற்கிறது அக்பர்.

Paleo God said...

அருமையான பகிர்வு தல!

:)