Wednesday, January 27, 2010

எகிப்தில் ஒரு வரலாற்றுப்பயணம் - பாகம் 8 – ப்ஃபிலே கோவில் – உள்பிரகாரமும், கலைநயம் மிக்க பிரமாண்ட தூண்களும்

மோசமான வானிலையின் காரணமாக இணைய இணைப்பு சரியாக இல்லாததால் படங்களை இணைப்பது மிகவும் கடினமான செயலாக இருந்தாலும் நண்பர்கள் உங்களின் தொடர் வருகையும், ஊக்கமும் எனது இந்த ஆக்கத்திற்கு மிக்க உற்சாகத்தை தருகின்றன. பகலில் பணி அதிகமாக இருப்பதால் இரவெல்லாம் விழித்திருந்து படங்களை பதிவில் ஏற்றி வருகிறேன்.

முழு பயணத்தொடரும் படிக்க விரும்புவர்கள் முதல் பதிவில் இருந்து படித்தால் அனைத்து படங்களோடு தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

சில குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ‘பேக்கேஜ் டூர்’ வழங்கும் பல நிறுவனங்கள் ப்ஃபிலே கோவில் அழைத்து செல்வதில்லை. இணையத்திலும் இக்கோவிலை பற்றிய தகவல்கள் அதிகமாக இல்லை என்பதால் இந்த அரிய புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பதிவில் ப்ஃபிலே கோவிலின் உள்பிரகாரங்கள் மற்றும் கலைநயம் மிக்க பிரமாண்ட தூண்களின் படங்களை இணைத்துள்ளேன். தூண்கள், சுவர்களெங்கும் வழிபாட்டு முறைகளையும், அந்த கால கட்டத்தில் நடந்த பல நிகழச்சிகளையும் சித்திர வடிவ எழுத்துக்களாகவும், ஓவியங்களாகவும் பதிவு செய்துள்ளார்கள்.

உள்பிரகாரங்கள்



ஒரு நினைவுப் படம்


வழிபாட்டு முறைகள்
நமது இந்திய கோவில்களை போன்றே அடுக்கடுகான நுழைவாயில்கள்




பீடம்
வெளிவானம்
தூணின் மேல்புற வேலைப்பாடு
தூண்களின் வித்தியாச வேலைப்பாடு கவனித்து பார்த்தால் தெரியும்
வெளிப்பிரகார தூண்கள்



தூண்களின் நுணுக்கமான மலர் வடிவ மேல்பீடத்தில் தெய்வ முகங்கள்
மேல்விதானங்களை இணைக்கும் தூண்கள்


நவீன கட்டிட கலைக்கு சவால் விடும் நேர்த்தியான வரிசை
மதில் சுவரோடு இணையும் பிரகார தூண்கள்
நீலவானப் பின்னணியில் நிமிர்ந்து நிற்கும் தூண்கள்
அரங்கம் ஒன்றின் தூண்கள்
காற்று வரும் இடைவெளி வழியே நீர்நிலையும், மலைக்குன்றும்
சில பிரமாண்ட தூண்கள்




சென்ற பதிவில் பலாபட்டறை திரு.ஷங்கர் அவர்கள் என்ன கேமரா என்ற விபரமும் தருமாறு கேட்டிருந்தார். இந்த சுற்றுலாவில் பங்கு கொண்ட அறுவரிடமுமே SONY, PANOSONIC, FUJI, CANON, KONICA, YASHIHA என உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களின் நவீன கேமராக்கள் இருந்தன. இந்த கேமராக்களின் வசதிகள் மிக சிறப்பானவை. பகல்,இரவு மற்றும் சூரிய வெளிச்சத்தின் தன்மைக்கேற்ப mode மாற்றிக் கொண்டால் நேரில் பார்க்கும் effect இருக்கும்.
இந்த பதிவில் உங்களோடு பகிர்ந்து கொண்டு வரும் அனைத்து படங்களுமே எடுத்தது எடுத்தபடியானவை. எந்த ஒரு Photo Shop Software ம் பயன்படுத்தி படத்தின் தரத்தை கூட்டவில்லை என்பது கூடுதல் தகவல். இந்த கேமராக்களின் உதவியால் இந்த டூரின் போது மொத்தமாக 5000 புகைப்படங்கள் எடுத்தோம். லேப்டாப்களும் எடுத்து சென்றிருந்ததால் பயணத்தின் போதே உடனுக்குடன் கேமராவில் இருந்து டவுண் லோடு செய்து கொண்டோம்.

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத விஷயத்தை ஒரு புகைப்படம் சொல்லி விடும் என்பதால் இந்த பகிர்வில் நிறைய படங்களை இணைத்து வருகிறேன். கண்டு மகிழுங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

(பயணம் தொடரும்)

11 comments:

ஜீவன்பென்னி said...

தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சபீர் அகமது (ஜீவன்பென்னி).

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை நண்பா மணி அவர்களே ...

இந்த படங்களை எடுத்த இடங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பகிர்வு.

நேரில் சென்று பார்க்கும் உணர்வை தந்தது.

பகிர்வுக்கு நன்றி ராஜா.

கலகலப்ரியா said...

wow.. superb pictures... nanri nanri nanri..

ஹேமா said...

படங்கள் மிக மிகத் துல்லியம்.
அழகு.அருமையாய் எடுத்திருக்கு.
நன்றியும் பாராட்டும்.

அத்திரி said...

எல்லா படங்களும் அருமை

Ananya Mahadevan said...

உங்க புண்ணியத்துல ஃப்ரீயா ஈஜிப்டு டூர் போனாப்ல இருக்கு. படங்கள் எல்லாம் மிகத்துல்லியம். மிகவும் நன்றி. ஆமா, இவங்க நமக்கு முன்னாடியே இந்த மாதிரி தூண்களை எழுப்பி இருக்காங்களா?

பிரபாகர் said...

என்ன சொல்ல ராஜா? ஆறேழு கேமிராவில் அசத்தலாய் அழகுபட அளித்திருக்கிறீர்கள்... அருமையிலும் அருமை...

பிரபாகர்.

Jawahar said...

பிரமாதமான படங்கள். ரொம்ப ரசித்தேன். 'தொட்டு தொட்டு தொட்டு செல்லும் அயீஸ் காற்றிலே' என்கிற பாட்டு ஞாபகம் வந்தது!

http://kgjawarlal.wordpress.com

ஜோதிஜி said...

ஆகா ரொம்ப நாள் இழந்து விட்டேன் என்ற உணர்வு உள்ளே வந்து உள்வாங்கியது தோன்றியது. சிறப்பான பங்களிப்பு. நன்றி ஜெரி.