Showing posts with label பயணம்/அனுபவம்/சமூகம். Show all posts
Showing posts with label பயணம்/அனுபவம்/சமூகம். Show all posts

Friday, April 16, 2010

சிட்டாடல் கோட்டை - அலெக்சாண்டிரியா - எகிப்து

சிட்டாடல் கோட்டை எகிப்து நாட்டில் அலெக்சாண்டிரியா நகரத்தின் மையத்தில் மத்தியதரைக்கடல்கரையில் அமைந்துள்ளது. கடல்வழியே அன்னியர்கள் புகுந்து விடாமல் கண்காணித்து தடுக்கவும், நகரின் பாதுகாப்பிற்காகவும் பண்டைய மன்னர்களால் கட்டப்பட்டது.






வெளிமதில் சுவர்கள்



கோட்டையின் உள்சுவர்கள்


கோட்டையின் கீழ் சுரங்கப்பாதைகள்



கோட்டையின் உள்ளே அமைந்துள்ள மீன் காட்சியகம்



கோட்டையின் உள்ளே...




மேல் கூரையில் செங்கல் சித்திரங்கள்


உள் அறைகளில் சில புராதன நினைவுச்சின்னங்கள்




கோட்டையின் நடுவில்...




கோட்டையின் மேல்தளம்



மத்தியதரைக்கடல், கப்பல்கள், அலெக்சாண்டிரியா நகரம்







Saturday, April 10, 2010

சூயஸ் கால்வாய்

எகிப்தில் ஏறத்தாழ எல்லா இடங்களையும் பார்த்து விட்டாலும் கட்டுமானத்துறையின் மிகப்பெரும் சாதனையான சூயஸ் கால்வாயை சென்று பார்க்க தகுந்த நேரம் வாய்க்கவில்லை. நாங்கள் இருக்கும் அலெக்சாண்டிரியா நகரிலிருந்து சுமார் 250கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இக்கால்வாய் அமைந்துள்ள போர்ட் சைட் நகருக்கு நேற்று திடீர் பயணமாக கிளம்பிவிட்டோம்.

சூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக்கால்வாயினால் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது. இக்கால்வாய் அமைந்த பின் கிட்டத்தட்ட 6000கிலோ மீட்டர் பயண தூரம் குறைந்ததால் உலக கப்பல் போக்குவரத்தில் இக்கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

சூயஸ் கால்வாய் வழிப்பாதையை குறிக்கும் உலக வரைபடமும், கால்வாயின் வழியில் உள்ள முக்கிய எகிப்து நாட்டு நகரங்களை காட்டும் படமும்.



பச்சை நிறமே.... பச்சை நிறமே....

பயண வழியே பேரீச்சை மரத்தோட்டங்கள்


பேரீச்சை மரங்களுக்கிடையே ஊடு பயிராக காய்கறிச் செடிகள்




நெல் வயல்களும், கீரைத் தோட்டங்களும்...




நீண்ட பயணத்தின் நடுவே சிறு ஓய்வு
எங்கள் வாகனமும், ஓட்டுநரும்

எங்கள் ஓட்டுநர் திரு.ஆதில் எங்கள் மீது பேரன்பும், பிரியமும் கொண்டவர். அலுவலகத்திற்கு மட்டும் அல்லாமல் எங்கள் எல்லா எகிப்திய பயணங்களிலும் உடன்வந்து பல உதவிகள் செய்தவர். பகலில் இந்த சாலை ராடார் கண்காணிப்பில் இருப்பதால் காலையில் செல்லும் போது மெதுவாக 4மணி நேரம் ஓட்டி சென்றவர் இரவு திரும்பும் போது 2மணி நேரத்தில் பறந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்த்தார்.


செல்லும் வழியில் ஒரு சிறிய மீன்பிடி துறைமுகம்




அழகிய மணல் மேடுகள்
இந்த மணல் மேடுகளுக்கு பின்புறம் கடல்



வந்தாச்சு...வந்தாச்சு... சூயஸ் கால்வாய் வந்தாச்சு
இக்கரையிலிருந்து அக்கரை ஒரு பார்வை


பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இக்கரையிலிருந்து அக்கரை சென்று பார்த்து விட்டு திரும்பி வர இலவசமாக கப்பலகள் தொடர்ந்து இயங்கி கொண்டே உள்ளன. நாம் செல்லும் கார்களையும் மிகச்சிறிய கட்டணம் செலுத்தி கப்பலில் ஏற்றிச்செல்லாம்.


படகில் ஏறி பயணம்


கப்பலில் இருந்து கால்வாயின் தோற்றம்



கால்வாயை கடக்கும் கப்பல்கள்




அக்கரையில் அமைந்துள்ள அழகிய மசூதி



நாங்கள் சென்ற கப்பல். கார்களையும் ஏற்றி செல்லலாம்.



கப்பலில் இருந்து கரையில் இறங்கும் கார்கள்



பிரிட்டிஷார் வசித்த பழைய காலத்து வீடுகள்


கண்ணைக் கவரும் கால்வாயும், கப்பல்களும்...



அன்பு நண்பர்களே, மூன்றாம் நூற்றாண்டிலே புராதான மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின் பல நாட்டு அரசுகளின் விடாமுயற்சியால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு பல போர்களையும், போராட்டங்களையும் சந்தித்து தற்போது எகிப்திற்கு பெரும் வருமானத்தை அள்ளித்தரும் சூயஸ் கால்வாய் குறித்த மேலதிக வரலாற்று தகவல்களையும், அரிய பல புகைப்படங்களையும் இந்த சுட்டியில் சென்று பார்த்து மகிழுங்கள்.