Saturday, January 16, 2010

சோழன் செல்வராகவனும் பதிவுலக பாண்டியர்களும்.....

ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க மிக மிக ஆர்வமாக இருந்தவர்களில் நானும் ஒருவன். படம் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் முழுக்கதையையும், அனைத்து காட்சிகளையும், பாசிட்டிவ்,நெகட்டிவ் பாயிண்டுகளையும் நமது பதிவுலக நண்பர்களின் அவசர அதிரடி பதிவுகள் மூலம் அறிந்தாயிற்று.

பாண்டியர்களுக்கு பயந்து ஏதோ ஒரு தீவில் மறைந்து வாழும் சோழர்களை தேடிச் சென்று பழிவாங்கும் பாண்டியர்களின் கதை என நண்பர்கள் பதிவுகள் மூலம் அறிந்தேன்.

பதிவில் ஒரு படம் ஏற்றுவதற்குள்ளே நமக்கு நாக்கு தள்ளுதே என்றும்
பொக்கிஷம், உன்னைப் போல ஒருவன், வேட்டைக்காரன் விமர்சன வரிசையில் இப்போது ஆயிரத்தில் ஒருவன் படமும் துரத்தி துரத்தி கிழிக்கப்பட்டிருப்பதால் தோன்றியது தான் பதிவின் தலைப்பு.

இரண்டு நாள்களுக்கு பின் இப்போதுதான் நடுநிலையான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.

குறையில்லாத எந்த பொருளும் இந்த உலகத்தில் கிடையாது. நமக்கு பிடித்த மாதிரி ஒரு பதிவு எழுத நேரம் ஒதுக்கவே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. மூன்று வருடம் இதே சிந்தனையாக இருப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை விமர்சனம் எழுதும் நண்பர்கள் யோசிக்க வேண்டும்.

அவதார் ரேஞ்சுக்கு இல்லை என்று அங்கலாய்ப்பவர்களே, அது 1200 கோடி பிராஜக்ட்.12 வருட உழைப்பு. நூறு கோடி கொடுங்கள் அடுத்த பாகத்தை செல்வராகவன் மிக சிறப்பாக எடுத்து காண்பிப்பார்.

பொங்கல் விடுமுறையில் தினம் ஒரு படம் பார்த்து விட்டு ப(ப்ப)ரபரப்பான சில பதிவுகள் எழுதிவிட்டு பின் வழமையான வாழ்விற்கு திரும்பி விடுவோம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு வருத்தமும், வேதனையும் அடைவார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் மாற நேரிடும்.


தமிழனை தமிழன் தட்டி கொடுக்கா விட்டாலும் திட்டி கெடுக்காமல் இருந்தாலே போதும். தமிழினம் தன்னாலே தலைநிமிரும்.

16 comments:

vasu balaji said...

:)). இது நல்லா மட்டுமில்ல சரியாவும் இருக்கு

Raju said...

ஹி..ஹி..வட போச்சே...!

Prathap Kumar S. said...

சரி...சரி...டென்ஷனாதீங்க தல... பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்...பதிவு வச்சுருக்கறவன் விமர்சனம் போடுறான்.... இதெல்லாம் நாட்டு சாதாரணம் சாமி...

எலே பசுபதி... அண்ணன் துபாய் ராசாவுக்கு ஒரு சோடா சொல்லுலே...

பிரபாகர் said...

ஆமாம் ராஜா!

ஆளாளுக்கு டரியலாக்கிட்டு இருக்காங்க!

பிரபாகர்.

அன்புடன் மலிக்கா said...

நாந்தான் ஃபஸ்ட்

நல்லாருக்கு இடுகை

துபாய் ராஜா said...

// நாஞ்சில் பிரதாப் said...
சரி...சரி...டென்ஷனாதீங்க தல... பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்...பதிவு வச்சுருக்கறவன் விமர்சனம் போடுறான்.... இதெல்லாம் நாட்டு சாதாரணம் சாமி...//

வாங்க தம்பி பிரதாப், பக்கோடா சாப்பிடட்டும். அடுத்தவன் கஷ்டப்பட்டு கைக்காசு போட்டு வாங்கினதை குறை சொல்ல வேண்டாமே...

//எலே பசுபதி... அண்ணன் துபாய் ராசாவுக்கு ஒரு சோடா சொல்லுலே...//

வெறும் ஜோடா மட்டும் சொன்னா எப்படி.... சரக்கு, சைடு டிஷ் சேர்த்து சொல்லுங்க.... :))

சு.செந்தில் குமரன் said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள்
படத்தை இன்னும் விளக்கமாக உணர ,
படிக்க வாருங்கள்
"ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தமிழீழ முழக்கம்" in
www.susenthilkumaran.blogspot.com

அகல்விளக்கு said...

கடைசி வரியில் உள்ளது படத்தின் விமர்சனம்...

:-))

நல்முயற்சிகளுக்கு வரவேற்பில்லாதது வருத்தமளிக்கிறது...

அத்திரி said...

நல்லாவே சொல்லியிருக்கீங்க

கண்ணா.. said...

தலைப்பே சும்மா கும்முன்னு இருக்கு...

:))

ஜெட்லி... said...

மீண்டும் நான் ஆயிரத்தில் ஒருவனை திங்களன்று இரண்டாவது முறையாக பார்த்தேன்

Jerry Eshananda said...

"ராஜ சபை களைகட்டுது".

அபி அப்பா said...

ஏன் ராசா ஏன் ராசா ஏன் இத்தினி ரென்சன்???? கூல் கூல் !!!

Radhakrishnan said...

தட்டிக் கொடுப்பவரைத் தட்டிக் கொடுப்போம்.

தட்டிக் கழிக்கப்பட வேண்டியவரை தட்டிக் கழிப்போம்.

பதிவர்கள் சூளுரை. ;)

சரண் said...

சரியாச் சோன்னீங்க துபாய் ராஜா. இந்திய நண்டு கதைதான் ஞாபகத்துக்கு வருது. என்னமோ இவிங்க ஒலக சினிமா எடுக்குற ஆளுங்கனு ஒரு நெனப்பு. விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எந்த ஒரு படைப்பும்.. ஆனா அதுக்காகவே எல்லோரும் திட்டுறாங்கன்னு நாமளும் மொக்கையா அங்கே உருவி இங்கே உருவி பதிவு போட்டா நல்லாவா இருக்கும். ( நிறைய பேர் இதுக்காகவே இருக்காங்கன்னு எனக்கு நல்லா தெரியும்) நானும் உங்களைப்போலவே படம் பார்க்கவில்லை. ஆனால் என் நண்பன் ஆயிரத்தில் ஒருவனை மறுதலிக்க முடியாத படம் என்று சொல்லி இருப்பதால் இந்த ஆரவார களேபரங்கள் முடிந்தபிறகு பார்க்கலாம் என்று இருக்கிறேன். செல்வராகவன் சினிமாக்களில் சில படங்களில் சில எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்்கூட ஒரு கலைஞனாக அவரின் உழைப்பை நேசிக்கிறேன்.

சரண் said...

சரியாச் சோன்னீங்க துபாய் ராஜா. இந்திய நண்டு கதைதான் ஞாபகத்துக்கு வருது. என்னமோ இவிங்க ஒலக சினிமா எடுக்குற ஆளுங்கனு ஒரு நெனப்பு. விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எந்த ஒரு படைப்பும்.. ஆனா அதுக்காகவே எல்லோரும் திட்டுறாங்கன்னு நாமளும் மொக்கையா அங்கே உருவி இங்கே உருவி பதிவு போட்டா நல்லாவா இருக்கும். ( நிறைய பேர் இதுக்காகவே இருக்காங்கன்னு எனக்கு நல்லா தெரியும்) நானும் உங்களைப்போலவே படம் பார்க்கவில்லை. ஆனால் என் நண்பன் ஆயிரத்தில் ஒருவனை மறுதலிக்க முடியாத படம் என்று சொல்லி இருப்பதால் இந்த ஆரவார களேபரங்கள் முடிந்தபிறகு பார்க்கலாம் என்று இருக்கிறேன். செல்வராகவன் சினிமாக்களில் சில படங்களில் சில எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்்கூட ஒரு கலைஞனாக அவரின் உழைப்பை நேசிக்கிறேன்.