ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க மிக மிக ஆர்வமாக இருந்தவர்களில் நானும் ஒருவன். படம் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் முழுக்கதையையும், அனைத்து காட்சிகளையும், பாசிட்டிவ்,நெகட்டிவ் பாயிண்டுகளையும் நமது பதிவுலக நண்பர்களின் அவசர அதிரடி பதிவுகள் மூலம் அறிந்தாயிற்று.பாண்டியர்களுக்கு பயந்து ஏதோ ஒரு தீவில் மறைந்து வாழும் சோழர்களை தேடிச் சென்று பழிவாங்கும் பாண்டியர்களின் கதை என நண்பர்கள் பதிவுகள் மூலம் அறிந்தேன்.
பதிவில் ஒரு படம் ஏற்றுவதற்குள்ளே நமக்கு நாக்கு தள்ளுதே என்றும்
பொக்கிஷம், உன்னைப் போல ஒருவன், வேட்டைக்காரன் விமர்சன வரிசையில் இப்போது ஆயிரத்தில் ஒருவன் படமும் துரத்தி துரத்தி கிழிக்கப்பட்டிருப்பதால் தோன்றியது தான் பதிவின் தலைப்பு.
இரண்டு நாள்களுக்கு பின் இப்போதுதான் நடுநிலையான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.
குறையில்லாத எந்த பொருளும் இந்த உலகத்தில் கிடையாது. நமக்கு பிடித்த மாதிரி ஒரு பதிவு எழுத நேரம் ஒதுக்கவே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. மூன்று வருடம் இதே சிந்தனையாக இருப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை விமர்சனம் எழுதும் நண்பர்கள் யோசிக்க வேண்டும்.
அவதார் ரேஞ்சுக்கு இல்லை என்று அங்கலாய்ப்பவர்களே, அது 1200 கோடி பிராஜக்ட்.12 வருட உழைப்பு. நூறு கோடி கொடுங்கள் அடுத்த பாகத்தை செல்வராகவன் மிக சிறப்பாக எடுத்து காண்பிப்பார்.
பொங்கல் விடுமுறையில் தினம் ஒரு படம் பார்த்து விட்டு ப(ப்ப)ரபரப்பான சில பதிவுகள் எழுதிவிட்டு பின் வழமையான வாழ்விற்கு திரும்பி விடுவோம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு வருத்தமும், வேதனையும் அடைவார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் மாற நேரிடும்.
தமிழனை தமிழன் தட்டி கொடுக்கா விட்டாலும் திட்டி கெடுக்காமல் இருந்தாலே போதும். தமிழினம் தன்னாலே தலைநிமிரும்.
