Sunday, October 04, 2009

அடுத்து வேட்டியா ஐயா மருத்துவரே.....

எப்போதோ எதிர்பார்த்த செய்தி இன்று நடந்திருக்கிறது.......

செய்தியின் சுட்டி : http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?news_id=5181

திண்டிவனம் : அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பா.மக., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற முடிவு எடுக்கப்பட்டது. இதனை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமதாஸ் நிருபர்களிடம் அறிவித்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் இன்று காலை முதலே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏராளமான தொண்டர்களும் அங்கு திரண்டிருந்தனர். கூட்டம் நடந்த அறைக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அனுமதிக்கவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ராமதாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போ அடுத்து வேட்டியா ஐயா மருத்துவரே.........

7 comments:

லோகு said...

சேலையையே எத்தனை நாளைக்கு துவைச்சுட்டு இருக்கறது.. அதா ஒரு சேஞ்சுக்கு வேட்டி துவைக்கலாம்னு.........

Jerry Eshananda said...

வருகிற ஜனவரியில் தமிழக தேர்தல் வரலாம், மூன்றாயிரம் கோடி ரூபாய் கோவை உள்ளிட்ட தென் தமிழக மெங்கும் வோட்டுக்கு ஆயிரமென பேசிமுடிவாகிவிட்டது

vasu balaji said...

சந்தேகமே இல்லாமல். மக்கள் தொண்டுதான் முக்கியம். தனியா நின்னா மொத்த ஓட்டும் போடுறோம்னு சொன்னா மாட்டன்னா சொல்லப் போறாரு.

பின்னோக்கி said...

ஆரம்பிச்சுட்டாரு அடுத்த ரவுண்டு. உலகம் உருண்டைன்னு ப்ரூவ் பண்ணிகிட்டே இருக்காரு...

Thamira said...

:-)) எதிர்பார்த்ததுதானே.!

அ. நம்பி said...

//சேலையையே எத்தனை நாளைக்கு துவைச்சுட்டு இருக்கறது.. அதா ஒரு சேஞ்சுக்கு வேட்டி துவைக்கலாம்னு......//

உண்மை. ஒரே விதமான வேலையையே செய்துகொண்டிருந்தால் அலுத்துப்போகும்; புதிய உற்சாகத்துக்கு மாற்றம் தேவைதான்.

வேட்டி துவைப்பது சற்று எளிது. நீளம் எட்டு முழம்தான். புடவை...?

(நான் அரசியல் பேசவில்லை. அன்பர் லோகு சொன்ன துவைக்கும் வேலை குறித்துத்தான் கருத்துச் சொல்கிறேன்.)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பச்சோந்தியெல்லாம் எப்போ மாறும்னு சொல்ல முடியாது .