Saturday, April 03, 2010

எட்டாப்பு கவிதைகள்...


தொழிலாளி 
ஒரு வருடமாக ஓடாத ஆலை
உருப்படியா கிடைக்கலையே ஒரு வேலை
வெளியே போனால் கடன்காரர் உரித்து விடுவார் தோலை
உங்களுக்கு தெரியுமா அந்த ஆளை
அவன் தான் தொழிலாளி.


வியாபாரி
குறைந்த விலைக்கே பொருட்களை வாங்கி
அதிக விலைக்கு விற்பான் மனசு நீங்கி
அதனை வாங்க ஏழைகள் ஏங்கி
அதன் மூலம் வயிறு வீங்கி
வாழ்பவன் தான் வியாபாரி


எட்டாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியர் விடுமுறையில் சென்றார். அந்த ஒரு மாதம் மட்டும் எங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க வந்த பயிற்சி ஆசிரியை இலக்கிய மன்ற வகுப்புகளில் வித்தியாசமாக அனைவரையும் கதை, கவிதை, எழுதச் சொன்னார். எதுகை மோனையாய் எழுதுவதுதான் கவிதை என்றெண்ணி எத்தனையோ தத்துபித்து கவிதைகள் எழுதினாலும் அப்போது எழுதியவற்றிலே என்னை மிகவும் கவர்ந்தது கீழே உள்ள கவிதைதான்.இதனை ஏற்கனவே பதிவாகவும் இட்டுள்ளேன்.கவர்ச்சி

நிலாக் கன்னியிடம்
அப்படியென்ன
கவர்ச்சி ??!!.


அவளைச் 

சுற்றிமட்டும் 
அத்தனை
நட்சத்திரக் காளையர்கள் !!.!!.


இன்னொரு நண்பன் எழுதியது...

ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.


இன்னொரு நண்பனோ பலபடி மேலே போய் கல்கி, சாண்டில்யன் போல மிகப்பெரிய சரித்திரக்கதை எழுதி அழகழகாய் படங்களும் வரைந்து யாரிடமும் காண்பிக்காமல் வைத்திருந்தான். ஒரு நாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனது படைப்புகளை எல்லாம் காண்பித்தான். அவனது திறமை கண்டு மிரண்ட நான் அதன்பின் பதிவுலகம் வரும்வரை கவிதை எழுதுவதையே விட்டுவிட்டேன். அவன் வீட்டிற்கு செல்வதையும்தான்.


17 comments:

Raju said...

\\ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\

எனக்கு ரொம்ப பிடிச்சது அண்ணே..!

துபாய் ராஜா said...

/ ♠ ராஜு ♠ மொழிந்தது...
\\ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\

எனக்கு ரொம்ப பிடிச்சது அண்ணே.!/

சேருவது இனம். இந்த வரலாற்று கவிதையை எழுதிய எனது நண்பனின் மின்மடல் முகவரி தரவா தம்பி ராஜூ.. :))

Paleo God said...

ரைட்டு..:)

ஜீவன்பென்னி said...

raajaanne kavithaikal superu. ettappula ellarume ippudithaan kavithai eluthuvangala.

கண்ணா.. said...

ஸேம்.. ப்ளட்.. நானும் எட்டாப்பில் செத்து போன நாய்குட்டியை நினைத்து கவிதை எழுதினேன்..


அது ஞாபகம் வந்திட்டுண்ணே...

\\ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\


யாருண்ணே இது.. என்ன மாதிரியே யோசிக்குறாரு

துபாய் ராஜா said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ரைட்டு..:) //

டபுள் ரைட்டு..... :))

துபாய் ராஜா said...

// ஜீவன்பென்னி said...
raajaanne kavithaikal superu. ettappula ellarume ippudithaan kavithai eluthuvangala.//

அந்த சின்ன வயசுல தோணுறது அப்படித்தானே இருக்கும் ஜீவன்...

துபாய் ராஜா said...

//கண்ணா.. said...
ஸேம்.. ப்ளட்.. நானும் எட்டாப்பில் செத்து போன நாய்குட்டியை நினைத்து கவிதை எழுதினேன்..


அது ஞாபகம் வந்திட்டுண்ணே...//

கண்ணா, நாய்க்குட்டி செத்ததுக்கு கவிதை எழுதுனீங்களா... இல்லை நீங்க எழுதுன கவிதையை கேட்டு நாய்க்குட்டி செத்துப்போச்சா.... :))\\ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.\\


யாருண்ணே இது.. என்ன மாதிரியே யோசிக்குறாரு//

அந்த நண்பன் இப்போ துபாய்ல தான் ஒரு பிஸ்கட் கம்பெனில வேலை பார்க்கான்.உங்ககூட கோர்த்து விட்டுடவா கண்ணா... :))

நாடோடி said...

//நிலாக் கன்னியிடம்
அப்படியென்ன
கவர்ச்சி ??!!.

அவளைச் சுற்றி
மட்டும் அத்தனை
நட்சத்திரக் காளையர்கள் !!.!!.///
ப‌லே...ப‌லே...எத்த‌னாம் வ‌குப்பு...

பிரபாகர் said...

எட்டாப்புலேயேவா!

கலக்குங்க! நானும் ஒரு கவிதைய எழுதி (பத்தாவுதுலன்னு நினைக்கிறேன்) வாரமலருக்கு அனுப்பி 20 ரூவா கொடுத்தாங்கங்கோ...)

அன்பே,
உன்னை நிலவுக்கு
ஒப்பாக சொல்லமாட்டேன்...
எனெனில்,
அது களங்கமாய் இருக்கிறது...

இந்த அர்த்தத்தில், சரியாய் நினைவிலில்லை...

பிரபாகர்...

லோகு said...

கரெக்ட்.. நானும் எட்டாவது படிக்கும் போது இப்படித்தான் எதுகை மோனையோட கவிதை? எழுதி பொங்கல் வாழ்த்தெல்லாம் கொடுத்துட்டு இருந்தேன்..

எல்லோரும் சேம் பிளட் தான் போல..

Ahamed irshad said...

அசத்துங்க........

vasu balaji said...

அப்பவே ஆரம்பிச்சாச்சா:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
இன்னொரு நண்பன் எழுதியது...
ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.
//

அவரு இப்ப என்ன பண்றாருங்க சார்..
( விஜய ராஜேந்திரன்கிட்ட அசிஸ்டெண்டா இருப்பாரோ?)

எறும்பு said...

Supero super kavithai...

Chitra said...

ஏ கிட்டு..
உன்கிட்டே இருக்கு லட்டு
கொடுத்திடு அதைப் பிட்டு
இல்லைன்னா முதல்ல திட்டு
அப்புறம் மண்டையில் விழும் குட்டு.


.....இது கவுஜ...... சூப்பர்! இதை போல இன்னும் அவர், ஜாங்கிரி, ஜிலேபி, அல்வா பத்தி எல்லாம் எழுதணும். :-)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... பள்ளிக் கிறுக்கல்களை இப்போது பார்த்தால் சிரிப்பு தான் வரும்.