Thursday, August 06, 2009

தொடக்கப்பள்ளி


திரு,ராஜாராம் அவர்கள் அவரது வலைப்பூவில் ஒரு பள்ளியின் புகைப்படம் கொடுத்து கவிதை போட்டிக்கு அழைத்திருந்தார்.

எண்ணத்தில் தோன்றியவற்றை உடனே எழுதி பதிவிட்டேன்.

நல்லதொரு சிந்தனையை தூண்டிய நண்பருக்கு நன்றி.


-----------------------------------


உயிரினம்
மெய்யினம்
என்னுயிர்
படித்தது
இங்கினம்.


------------------------------------------


ஓரொண்ணு ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
உன் நினைவு
எப்போதும்
எனக்குண்டு.


---------------------------------------------

நான்
படித்த
பள்ளி
விட்டு
சென்றேன்
ரொம்ப
தள்ளி.


---------------------------------------------

ஏற்றி
விட்ட
ஏணி.

ஊர்
கடக்க
உதவிய
தோணி.

இடிக்கும்
முன்
பார்க்க
வா நீ.


---------------------------------------------------

6 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கவிதைகள்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ராஜா,கடிதம் பார்த்தேன்.நம் தொடக்க பள்ளி நம் பால்ய சிநேகிதி போன்றே.வயிறும் வாழ்விற்காகவும் நாமெல்லாம் எங்கெங்கோ கிடந்தாலும் மனசு முழுக்க மண்ணிலும் பால்யத்திலுமே.கொண்டாட்டத்தில் நீங்களும் கை நனைத்தது அவ்வளவு சந்தோசம்.நம் வீட்டிலும் உங்கள் கொடி ஏற்திருவோம்.அன்பு நிறைய மக்கா.

நட்புடன் ஜமால் said...

ஓரொண்ணு ஒண்ணு
ஈரொண்ணு ரெண்டு
உன் நினைவு
எப்போதும்
எனக்குண்டு.]]


இதனை அதிகம் இரசித்தேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கவிதை. உங்களை எழுதத் தூண்டிய நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அழகான நினைவலைகள்.நானும் எழுதியிருக்கிறேன்.நினைவைத் தூண்டிவிட்ட பா.ரா வுக்கு நன்றிகள்.

Anonymous said...

முதலாவது: கவிதை கவிதை