Monday, August 10, 2009

கடிகாரங்களில் 10:10 அமைப்புமுறை ஏன் ??!!.....

நாம் புதிதாக கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் வாங்க எந்த கடைக்கு சென்றாலும் எல்லாக்கடிகாரங்களூம் 10:10 என்ற நிலையிலே பார்வைக்கு வைத்திருப்பர் மற்றும் விளம்பரங்களிலும் அவ்வாறே இருப்பது ஏன் என்று பலமுறை யோசித்திருக்கிறோம்.





இதற்கு சொல்லப்படும் சில காரணங்கள்.
  • திரு.ஆபிரகாம்லிங்கன்,திரு.கென்னடி மற்றும் திரு.மார்ட்டின் கிங் லூதர் சுட்டுக்கொல்லப்பட்ட நேரம் என்பர்.ஆனால் உண்மையாக திரு.லிங்கன் சுடப்பட்டது இரவு 10 மணி 15 நிமிடத்திற்கு இறந்ததோ மறுநாள் காலை 7 மணி 22 நிமிடத்திற்கு. திரு.கென்னடி சுடப்பட்டது மதியம் 12 மணி 30 நிமிடத்திற்கு. திரு.லூதர் மாலை 6 மணி 1 நிமிடத்திற்கு சுடப்பட்டு இரவு 7 மணி 5 நிமிடத்திற்கு இறந்தார்.

    . நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நேரம் என்பதால் அந்த நாசகார நேரத்தின் நினைவாக என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் சின்னப்பையன் வீசப்பட்டது காலை 8 மணி 15 நிமிடத்திற்கு.‘குண்டுப்பையன்’ வீசப்பட்டது காலை 11 மணீ 2 நிமிடத்திற்கு.எனவே இதுவும் உண்மையில்லை.




உண்மையான காரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

1. 10:10 அமைப்பு முறை எளிவான,தெளிவான விதத்தில் வாடிக்கையாளர் கவனத்தை கவர்கிறது.

2. இருமுட்களும் ஒரே நேர்கோட்டு பார்வையில் தெரிகிறது.

3. கடிகாரத்தின் மத்தியில் இருக்கும் உற்பத்தி நிறுவனத்தின் முத்திரை தெளிவாக தெரிகிறது.

4. வழக்கமாக தேதி மற்றும் கிழமை தெரியும் அமைப்பு முறையே 3,6 அல்லது 9 ன் அருகில் இருக்கும்.அவையும் 10:10 அமைப்பில் மறைக்கப்படாது தெளிவாக தெரியும்.

செய்தியாக நான் படித்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தமிழ்படுத்தி பதிவாக இட்டுள்ளேன்.

நான் படித்த செய்தியின் சுட்டி
http://blogs.static.mentalfloss.com/blogs/archives/30391.html.

இதுகுறித்து வேறு ஏதும் தகவல்கள் இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்.

9 comments:

கிளியனூர் இஸ்மத் said...

இவ்வளவுதானா ராஜா...நான் என்னமோ பெரிய விசயமா இருக்குமோன்னு நினைச்சேன்....எளிமையா விளக்கிட்டீங்க....

Anonymous said...

very nice. super

நையாண்டி நைனா said...

தம்பி ராசா....
அது பதிவர் சின்னபையன் கிடையாதுல்லோ... அப்புறம் குண்டு பையன் யாரு? நானா ?
நல்ல தகவல்கள் ராசா, நான் ஏற்கனவே படிச்சிருந்தாலும்.... நீ சொல்லி இருக்கற மற்ற தகவல்கள் புச்சு எனக்கு.

அத்திரி said...

அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல தகவல்

கலையரசன் said...

இன்னொன்னும் உண்டு ராஜா..
அது பார்பதர்க்கு ஸ்மைலி போல இருப்பதால்!!

எப்பூடி??????

சி.கருணாகரசு said...

நண்பரே...கடிகாரத்தில் 10:10 ல் முட்கள் இருக்கும் போது சிரிக்கும் முகம் தெரியும். மாறாக கீழ் பக்கம் முட்கள் இருந்தால் அழுவதுப் போல் தெரியும். எப்படி இருந்தாலும் உங்களின் கருத்து முழுமையாக எற்றுக்கொள்ளும் படியுள்ளது. நன்றி.

ஹேமா said...

ஓ...கடிகாரம் 10.10 ல் நிற்கும்போது இப்படி விஷயங்கள் இருக்கா!இனிக் கவனிப்பேன்.

Unknown said...

அப்படின்னா உலகின் முதல் கடிகார நேரம் எது??