Saturday, March 21, 2015

காதல் ஏக்கம்



பாவை
உன் மீது
கொண்டேன்   
பாங்காய்
காதல் ஏக்கம்


பாழாய்
போனது
பாவி உன்னால்
பலநாள்
 இரவு தூக்கம்


 வஞ்சி
உன்னை
அடைவதே
வாலிபன்  
என்
வலிய நோக்கம்


கொஞ்சிப்
 பேசி
கொடுத்திடு
 குறைவிலா ஊக்கம்

தத்தை 
உன் செயலால்
தணிந்திடுமே
தாங்க முடியா என்
காதல் காய்ச்சலின்
தாக்கம்...


4 comments:

Jokkaali said...

#தத்தை
உன் செயலால்
தணிந்திடுமே
காதல் காய்ச்சலின்
தாக்கம்...#
என்ன செயல் செய்தால் இந்த காய்ச்சல் போகும் :)

KILLERGEE Devakottai said...


இது உங்களுக்குமா ? நான் நினைச்சேன் நமக்கு மட்டும்தானோ....னு.....

துபாய் ராஜா said...

//Bagawanjee KA said...
என்ன செயல் செய்தால் இந்த காய்ச்சல் போகும் :)//

Bagawanjee KA.... அதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.... :)))

துபாய் ராஜா said...
This comment has been removed by the author.