Wednesday, December 16, 2009

ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும்...

இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியும், மார்கழி மாதப்பிறப்பும் ஒரே நாளில் வந்துள்ளன. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். பள்ளி பருவத்தில் எல்லா வீடுகளிலும் காலையில் வண்ணப்பொடிகளால் கோலமிட்டு, கோலத்தின் நடுவில் தினம் ஒரு பூ வைப்பதை பார்த்து வியந்தது, அரையாண்டு தேர்வு விடுமுறையில் காலையிலே எழுந்து பனி,குளிர் பாராமல் குளித்து, கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து சுடச்சுட கையில் வாங்கிய வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை காலை உணவாகவே சாப்பிட்டது என பல நிகழ்ச்சிகள் பசுமையாக உள்ளத்தில் வந்து போகின்றன.

சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதால் ஆஞ்சநேயர் மீது சிறுவயது முதலே மிகப்பிரியம். இராமாயணம்,மகாபாரதம் இரண்டு இதிகாசங்களிலுமே இவரது பங்களிப்பு இருப்பது எப்போதும் மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம்.

கடந்த இரண்டு மாதமாக பணிப்பளு அதிகம். இருக்கையில் அமர நேரமில்லை. வலைப்பக்கம் வரமுடியாமல் வேலை அதிகமாக இருந்ததால் நள்ளிரவில்தான் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடிந்தது என்றாலும் பின்னூட்டம் இட முடியாத படி அலுப்பு. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மார்கழி மாதம் போல் மனதில் எப்போதும் குளிர்ச்சி நிலவவும், தொய்வில்லாமல் தொடர்ந்து பதிவுகள் எழுதிடவும் ஆஞ்சநேயர் அருள்வாராக.


5 comments:

Prathap Kumar S. said...

ஆஞசநேயர் அருள் புரியட்டும்,,, இரண்டாவது உள்ள கோலம்போடும் போட்டோ கலக்கல்..

விக்னேஷ்வரி said...

தமிழகத்தில் இருந்ததால் நேற்று கோவில் போய் ஹனுமானிற்கு சல்யூட் அடித்து வந்து விட்டேன்.

மார்கழி பத்தி நான் ஒரு பதிவு எழுதிட்டிருக்கேன்.

vasu balaji said...

வாங்க வாங்க ராஜா. ஆஞ்சநேயர் என்றாலே எனர்ஜிதானே:)

Jawahar said...

கோலம் போட்டோ அருமை. நல்ல கவரேஜ். கிரிஷ்ணகிரியில் இருக்கும் காட்டாஞ்சநேயர் பற்றி இந்தத் தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும். என்ன நினைத்து அங்கே தேங்காய் கட்டினாலும், 45 நாட்களுக்குள் கை மேல் பலன் கிடைக்கிறது. நானே பர்சனலாக இரண்டு அக்கேஷன் பார்த்து விட்டேன். (தமன்னாவை கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற மாதிரி வேண்டுதல்கள் நிறைவேறாது!)

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

கலக்கல்.