மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக நடந்து திரு.செந்தில் நாதன் முழுமையாக குணமடைந்திட உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் தொடர்ந்திடுங்கள்.
இதுவரை எல்லாம் இனிதாக நடந்தது.இனி நடப்பவையும் எளிதாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
இன்னுமொரு இனிய செய்தி: நண்பர் திரு.கடையம் ஆனந்த் அன்புடன் சுவையான பதிவர் விருது (Scrumptious Blog Award) கொடுத்துள்ளார்.
வலையுலகம் வந்து வாங்கிய முதல் விருது என்பதால் மகிழ்ச்சியையும், இன்னும் சுவையாக பலபதிவுகள் இடவேண்டும் என்ற ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. நன்றி திரு.ஆனந்த்.விருது விதிகளின்படி எனக்கு கிடைத்துள்ள இந்த விருதினை இன்னும் பத்து பேருக்கு கொடுத்து சிறப்பிக்கவேண்டுமாம். நான் விருது கொடுக்க விரும்பும் நண்பர்கள்.
1. 'காதல் மழை' லோகு
2. டக்ளஸ்
3. ஜாக்கி சேகர்
4. ரசிகை
5. விக்னேஷ்வரி
6. சந்தோஷ்
7. இரும்புத்திரை அரவிந்த்
8. கானா பிரபா
9. சி.கருணாகரசு
10. திரு.கலாப்ரியா
மற்றும் பல நண்பர்களுக்கும் கொடுக்க ஆசைதான். அடுத்து வரும் விருதுகளை விடுபட்டவருக்கு வழங்கி சிறப்பிப்பேன்.
நன்றி. வணக்கம்.