Showing posts with label சமூகம்/செய்திகள்/மருத்துவம். Show all posts
Showing posts with label சமூகம்/செய்திகள்/மருத்துவம். Show all posts

Monday, June 29, 2009

25-வது பதிவு – இலவச இதய அறுவை சிகிச்சை




எனது இந்த 25-வது பதிவு , எல்லோருக்கும் உபயோகமான பதிவாக இருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பெங்களூருவில் அமைந்துள்ள சத்ய சாய்பாபா ஆசிரமம் கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு பயன்தரும் பல நல்லதிட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.பல கோடிகள் செலவழித்து ஆந்திர மாநிலத்தில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தது , சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்திற்கு 200 கோடி நிதியதவி அளித்தது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மேலும் பல ஆண்டுகளாகவே நாடு முழுவதுமுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு அறக்கட்டளையின் மூலம் பண உதவி அளித்து வருகிறது.



தற்போது அவர்களது சொந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் குழந்தைகளின் எல்லாவிதமான இதய நோய்களுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் அனைத்தையும் இப்பதிவில் இணைத்துள்ளேன். இந்த முக்கியமான தகவலை தங்கள் நண்பர்கள், உறவினர்கள் அலுவலகத்தோழர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.இதய நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியை செய்வோம்.

நன்றி.வணக்கம்.