Showing posts with label அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு / பக்தி / அனுபவம் / துதிபாடல். Show all posts
Showing posts with label அருள்மிகு சுவாமி சங்கிலி பூதத்தார் திருவரலாறு / பக்தி / அனுபவம் / துதிபாடல். Show all posts

Thursday, February 16, 2017

சுவாமி சங்கிலி பூதத்தார் துதி பாடல்


சட்டநாதா, சங்கிலிபூத ஐயா
சங்கடமெல்லாம் நீக்கும் ஐயா


மலைபோல் வரும் துன்பமெல்லாம்
பனி போல் விலக்கும் ஐயா

மலை மேல் ஏறி வந்தோம்
மனஅமைதி தாரும் ஐயா

மாசி மாதம் பிறந்ததையா
மன்னாதி மன்னன்
மகேசன் புதல்வன்
உன் அருளால்  மக்கள்
காசி போகும் பலன் கிடைத்ததையா


தண்டம் ஏந்தி நிற்கும் ஐயா
தங்கள் பிள்ளை நாங்கள்
தவறேதும் செய்தாலும்
தண்டனையின்றி தாங்கும் ஐயா

தளர்ந்து சாயும் நேரம்
தாங்கி பிடிக்கும் ஐயா

மக்கள் அகம் முகம்
மலர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் ஐயா  

கருவூலம் காக்கும் ஐயா
எங்கள் குறை நிர்மூலம் செய்யும் ஐயா

குழப்பத்திரை நீக்கி
குழந்தை போல் காக்கும் ஐயா

பழிக்கும் பகை போக்கி
பலன் பல தாரும் ஐயா

அமிர்தபால ஐயா அடியவர் எங்களுக்கு
எப்போதும் உன் ஆளுமை வேண்டும் ஐயா

உன்னை அறிந்த பிள்ளை எம்மை
ஊரறிய உன்புகழ் பாடி
உவகை கொள்ள செய்யும் ஐயா

ஷேத்ரபால ஐயா உம் பிள்ளை நாங்கள்
தேசம் எங்கு சென்றாலும்
சேதம் ஏதும் இன்றி நல்ல சேதி
பல சிறப்புடனே தாரும் ஐயா

நாங்கள் நம்பும் தெய்வம்
எத்தனையோ என்றாலும்
கூட இருந்தே காக்கும்
குடும்பதெய்வம் நீயே ஐயா

சிலையாய் நின்று சிரிக்கும் ஐயா
நிலையாய் உனக்கு ஏவல் செய்வோம் ஐயா

களையாய் காவல் கொண்டு காக்கும் ஐயா
உயர்வாய் உன் புகழ் சொல்வோம் ஐயா

சட்டநாதன், சங்கிலிபூதம் 
சரணம் போற்றி போற்றி

அமிர்தபாலன், அருள்நாதன்
அபயம் போற்றி போற்றி

தண்டநாதன், ஷேத்ரபாலன்
தவபாதம் போற்றி போற்றி