Saturday, March 27, 2010

அவள் பெயர் ரெஞ்சு... மாநிறம்... வயது 23...


நித்தியானந்தா - ரஞ்சிதா பத்தி எதுவும் மேட்டர் இல்லீங்க.... இந்த தடவை ஊருக்கு போகும் போது நடந்த சம்பவம்...

கெய்ரோவில் பிளைட் கிளம்பவே கொஞ்சம் லேட்டானதால் துபாய் ஏர்போர்ட் போய் சேரவும் நேரமாகி விட்டது. துபாயிலிருந்து திருவனந்தபுரம் செல்ல இருக்கும் கனெக்டிங் பிளைட் கிளம்ப ஒரு மணி நேரம் மட்டுமே இருந்ததால் அவசர அவசரமாக ட்யூட்டி ஃபிரீ ஷாப்களை நோக்கி ஓடினேன். இங்கு எகிப்தில் 18 கேரட் நகைகள் மட்டுமே இருந்ததால் தரமான 22 கேரட் தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பதற்காகவே துபாய் வழியாக பயணம் மேற்கொண்டேன். கண்ணில் பட்ட நகைக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விசாரித்ததில் வேறு கடைகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.

அவ்வளவு பெரிய ஏர்போர்ட்டில் ஒரே ஒரு நகைக்கடை மட்டுமே இருந்ததால் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விற்பனை பிரதிநிதிகளும் அதிகமாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்த நான் கஸ்டமர் கேட்ட ஏதோ மாடல் நகை எடுப்பதற்காக கொஞ்சம் தள்ளி வந்த ஒரு விற்பனை பிரதிதி பெண்ணிடம் “எக்ஸிக்யூஸ் மீ, ஐ வாண்ட் டூ பை அரவுண்ட் 6,000 யூ.எஸ் டாலர்ஸ்” என்று கூறவும் “ஒன் மினிட்” என்றவள் அந்த கஸ்டமரிடம் சென்று அவர் கேட்ட மாடல் இல்லை என்று கூறி விட்டு என்னிடம் வந்து யூ வாண்ட் டூ பை பிஸ்கட் ஆர் ஆர்ணமண்ட்ஸ்” என்று வினவினாள்.

“போத்.ஃபர்ஸ்ட் ஷோ மீ சம் பேங்கிள்ஸ் அண்ட் செயின்ஸ்” என்று கூறி அவள் காண்பித்த மாடல்களில் பிடித்தவற்றை வாங்கி கையிலிருந்த பையினுள் வைத்துவிட்டு அடுத்ததாக சாக்லேட்டுகள் வாங்க சென்றேன்.

நண்பர்கள், உறவினர்கள் என நிறைய பேருக்கு கொடுக்க வேண்டியிருந்த்தால் விதவிதமான சாக்லேட்களை நிறைய வாங்கினேன். அவற்றை எல்லாம் கையிலிருந்த பையினுள் வைத்துவிட்டு தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்டை மட்டும் சட்டை பாக்கெட்டில் எடுத்து வைத்து கொண்டேன். அதற்குள் செக் இன் நேரமாகிவிட்டதால் ஃபார்மாலிட்டிகள் முடித்து விமானத்தில் ஏறி இருக்கை தேடி அமர்ந்தேன்.

நீண்ட பயணம் அலுப்பாக இருந்ததால் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தபோது “எக்ஸ்க்யூஸ் மீ” என்றொரு குயில் குரல் கேட்டது. ஏர்ஹோஸ்டஸ் ஆக இருக்கலாம் என்று சலிப்புடன் கண்களை திறந்த என் அருகில் ஒரு அழகிய இளம்பெண் நின்று கொண்டிருந்தார். ’30-E’ என்றவாறு பயணச்சீட்டை காண்பித்தபின்தான் அவர் என்னருகே அமரக்கூடியவர் என புரிந்தது.

நான் இருந்த 30ம் வரிசையில் A,B - இடது ஓரம், C,D,E,F- நடுவில், G,H- வலது ஓரம். நான் F . ஓரத்து இருக்கையில் அமர்ந்திருந்ததால் என்னைத்தாண்டி தான் அவர் இருக்கையில் சென்று அமரமுடியும். அந்த பக்கமும் ஆண்களே அமர்ந்திருந்ததால், “இஃப் யூ வாண்ட்,யு கேன் சிட் திஸ் கார்னர் சீட். ஐ வில் சிட் இன் யுவர் சீட்” என்று நான் கேட்க “இஃப் யூ ஹேவ் நோ பிராப்ளம். ப்ளீஸ்” என்று அவர் கூறவும் நான் எழுந்து அவர் இருக்கையில் அமர அவர் “தேங்யூ” என்றவாறு என் இருக்கையில் அமர்ந்தார்.

சராசரி உயரம். மாநிறம். 25 வயதிற்குள்தான் இருக்கும். ஜீன்ஸ் பேண்ட். முழுக்கை சட்டை. குட்டையான கூந்தலை பின்னாமல் விரித்து விட்டிருந்தார். அவர் அணிந்திருந்த பவர் கண்ணாடி குறையாக தெரியாமல் அழகாகவே இருந்தது என்றாலும் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. ”ஐ ஆம் ரெஞ்சு” என்று அறிமுகப்படுத்தி கொண்டவரிடம் ”ஐ ஆம் ராஜா” என்றேன். திருவனந்தபுரத்தில் வீடு என்று கூறவும் அவரோடு எனக்கு தெரிந்த மலையாளத்தில் சம்சாரிக்க தொடங்கினேன்.

அறிவிப்பிற்கு பின் விமானம் கிளம்ப நான் அவரிடம் “துபாயில எவுடையானு” என வினவவும் “இல்லை ஷார்ஜா. ஒரு ஹாஸ்பிட்டலில் லேப் டெக்னீசியனா பணி.சார் துபாயோ”. ”இல்லை.முன்னே துபாய்ல இருந்தது. இப்போ பணி எகிப்தில்”.மேலும் சகஜமாக பேசி கொண்டு வந்ததிதிலிருந்து தோழிகளோடு ஷார்ஜாவில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும் இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு செல்வதாகவும் அறிந்தேன்.

அந்த நேரத்தில் உணவு வர அவர் வேண்டாம் என மறுக்கவும் ஏன் என்று கேட்டதில் “இரண்டு நாள்களாக காய்ச்சல்” எனவும் “ஏற்கனவே மருந்து உட்கொண்டுள்ளதால் உணவு தேவையில்லை” என்று கூறவும் “சரி.நீங்கள் ஓய்வெடுங்கள்” என்று கூறி விட்டு சாப்பிட்ட பின் நானும் கண்ணயர்ந்தேன்.

விமானம் இறங்கப் போகும் அறிவிப்பு வரவும் கண்விழித்து தயாரானோம். தலை பயங்கரமாக வலிப்பதாகவும், வாந்தி வருவது போல் உள்ளதாகவும் அவர் கூற விமானம் இறங்கும் நேரம் என்பதால் பாத்ரூமுக்கு எழுந்து செல்ல முடியாது எனவே இருக்கையில் இருந்த வாமிட் பேக்கை எடுத்து கொடுத்தேன்.

அதற்குள் விமானமும் இறங்கி விட அவர் மிகவும் களைப்பாக இருந்ததால் அவர் மறுக்க மறுக்க அவர் பைகளையும் நானே எடுத்து கொண்டேன். கீழே இறங்கி செக் அவுட் முடித்து ஒரு தள்ளு வண்டியை எடுத்து வந்து எனது கைப்பையையும், அவரது கைப்பைகளையும் வைத்து தள்ளிக் கொண்டே பிரயாணப் பெட்டிகள் எடுக்கும் இடத்திற்கு வந்தோம்.

பிரயாணப் பெட்டிகளும் ஏற்கனவே வந்திருந்ததால் ஏற்கனவே இருந்த தள்ளு வண்டியில் அவரது பெட்டிகளையும், இன்னொரு தள்ளு வண்டியில் எனது பெட்டிகளையும் வைத்து தள்ளிகொண்டு வெளியே வந்தோம். அவரது அண்ணன் அவரை அழைத்து செல்ல வந்திருந்த்தால் நன்றி கூறி விடைபெற்று சென்றார். அதற்கு முன்பே எனது மனைவியும், அப்பாவும் கண்ணில் பட்டுவிட்டதால் நான் அவர்களை நோக்கி வேகமாக சென்றேன்.

காருக்கு சென்று தள்ளு வண்டியில் இருந்து பெட்டிகளை எடுத்து வைக்கும் போது கைப்பை இல்லாததை கண்டு அதிர்ந்த நான் ரெஞ்சுவின் தள்ளுவண்டியில் இருந்து எனது பையை எடுக்க மறந்ததை உணர்ந்தேன். நல்லவேளை பாஸ்போர்ட், ரிட்டர்ன் டிக்கெட், வாங்கிய தங்கம் எல்லாம் சட்டைப் பையிலே இருந்தது. துபாய் ஏர்போர்ட்டில் வாங்கிய சாக்லேட்டுகள் மட்டுமே கைப்பையில் இருந்தன. எனது முகமாற்றதை கண்டு "என்ன ,என்ன" என்று கேட்ட மனைவியையும், அப்பாவையும் கலவரப்படுத்த விரும்பாமல் “நீங்கள் காரிலே இருங்கள்.நான் பாத்ரூம் சென்று வருகிறேன்” என்று கூறி ஏர்போர்ட் பார்க்கிங் முழுதும் தேடியும் ரெஞ்சுவும், அவள் அண்ணனும் கண்களில் படவில்லை.

ரெஞ்சுவின் அலைபேசி எண்ணோ, மின் மடல் முகவரியோ வாங்கி வைக்க மறந்ததை நொந்தவாறு வேறுவழியில்லாமல் ஏதோ நம்பிக்கையில் சரி பார்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கிளம்பினேன். திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து சேர மாலை 4 மணி ஆகிவிட்டது.

வீட்டிற்கு வந்தபின் தான் கவனித்த மாதிரி கைப்பையை உடன் பயணித்த நண்பர் தவறுதலாக எடுத்து சென்று விட்டதாகவும் பின்னர் வீட்டுக்கு எடுத்து வருவார் என்றும் கூறி சமாளித்தாலும் என் மனதில் ஏதேதோ குழப்பம். " ஒரு வேளை நான் ஏர்போர்ட்டில் தங்கம் வாங்கி கைப்பையில் வைத்ததை பார்த்து திட்டமிட்டே எடுத்து சென்று இருப்பாரோ ' என்று கூட தோன்றியது. " சரி எப்படியோ... தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது " என்று ஆறுதல் கொண்டேன்.

உடல் அலுப்பு, நேர மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்ற குழப்பங்களால் இரண்டு நாள்களுக்கு பின்தான் இணையதளம் சென்றேன். “சாரி” என்று தலைப்பிட்டு வந்திருந்த மெயில் எனக்கு ஆனந்தத்தையும்,அதிர்ச்சியையும் ஒருங்கே தந்தது. ஆம். அது ரெஞ்சு அனுப்பியிருந்த மெயில். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் மயக்கம் வருவது போல் இருந்ததால் காரில் ஏறி படுத்துவிட்டதாகவும் தள்ளுவண்டியை தள்ளி வந்த அவர் அண்ணனே பைகளையும், பெட்டிகளையும் காரில் எடுத்து வைத்தும் வீட்டுக்கு வந்து இறக்கியும் வைத்தாராம். இவர் வீட்டுக்கு சென்றதும் உறங்கிவிட்டாராம். இரவுதான் எழுந்தாராம். மறுநாள் தோழியர் கொடுத்து விட்ட பொருள்களை வாங்க அவர்கள் உறவினர்கள் வாங்க வந்தபோது தான் எனது கைப்பையை கவனித்துள்ளார். நல்லவேளையாக அதில் கட்டப்பட்டிருந்த சீட்டில் நான் எனது மின்மடல் முகவரியை எழுதியிருந்ததால் உடனே மெயில் அனுப்பியிருக்கிறார். அவரது அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

உடன் அலைபேசியில் அழைத்து பேசினேன். தவறுக்கு மன்னிப்பு கேட்டவரிடம், ' மறந்து வந்தது நான்தான். எனவே வருத்தப்பட வேண்டாம் ' என்று கூறி நடுவில் திருவனந்தபுரம் வரும் வாய்ப்பு இல்லை. எனவே பத்து நாட்களுக்கு பின் விடுமுறை முடிந்து திரும்பும் வழியில் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்தேன்.அதன்படியே கிளம்பும் முன்தினம் ரெஞ்சுவிற்கு போன் செய்து அவர்கள் அண்ணனிடம் ஏர்போர்ட்டுக்கு கொடுத்து விடும்படி கூறினேன். ஆனால் அவரோ நான் செய்த உதவியை கேள்விப்பட்ட அவர்கள் வீட்டில் அனைவரும் என்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் எனவே கண்டிப்பாக வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டு விட்டுதான் செல்லவேண்டும் என்றும் அன்பு கட்டளையிட்டார்.

மறுநாள் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது ரெஞ்சுவுடன் அவர், தாய், தந்தை, சகோதரர்கள் அனைவரும் மிகவும் நன்றி கூறி மிகவும் சிறந்த காலை உணவையும் அளித்தார்கள். அவர்களிடம் விடைபெற்று ரெஞ்சு தந்த பையை வாங்கி வீட்டில் சேர்த்துவிடுமாறு டிரைவரிடம் கொடுத்துவிட்டு ஏர்போர்ட் சென்று நடைமுறைகள் முடித்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.

அதிகாலையிலே வீட்டில் கிளம்பிய அலுப்பில் கண்மூடி புதியதொரு குடும்பத்தின் உறவு கிடைத்தது குறித்து எனது மனம் மகிழ்ந்து கொண்டிருந்தபோது என் அருகில் வந்தமர்ந்த வாட்டசாட்டமான ஐரோப்பிய இளம்பெண் "எக்ஸ்க்யூஸ் மீ,ஹவ் டூ அட்ஜஸ்ட் தி சீட்" என்று கேட்டதால் கண்விழித்தேன். இருக்கையின் செயல்பாட்டை விளக்கிய கூறிய என்னிடம் கேரளாவிற்கு சுற்றுலா வந்ததாக கூறி அவர் பேச ஆரம்பித்தவுடன் இவரிடம் இணைய தொடர்பு முகவரியை வாங்கி கொள்ளவேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது.

31 comments:

vasu balaji said...

நட்பூக்கள்.:)

Paleo God said...

அனுபவம் : சூப்பர் !!
நட்பு : சூப்பரோ சூப்பர்!!!
புனைவு : ? ங்கே..:(

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள் said...
நட்பூக்கள்.:) //

கதைக்கேற்ற கருத்து அருமை பாலா சார்.... :))

ராம்ஜி_யாஹூ said...

nice, so the lesson of the story is , let us write our email id/phone number inside all our bags.

துபாய் ராஜா said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அனுபவம் : சூப்பர் !!
நட்பு : சூப்பரோ சூப்பர்!!!
புனைவு : ? ங்கே..:(//

வரவிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி திரு.ஷங்கர். புனைவை என்பதை நிஜம் என்று மாற்றிவிட்டேன். :))

துபாய் ராஜா said...

//ராம்ஜி_யாஹூ said...
nice, so the lesson of the story is , let us write our email id/phone number inside all our bags.//

அன்பு ராம்ஜி சார்,வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. ஏர்வேஸ் நிர்வாகம் நமது ஹேண்ட் லக்கேஜில் கட்டக்கொடுக்கும் அட்டையில் பெயர்,முழு முகவரி, போன்/மொபைல் எண், இணையதொடர்பு முகவரி எல்லாமே எழுதுமாறு கேட்டுள்ளார்கள்.ஆனால் பலர் எழுதுவதில்லை. நல்லவேளை அன்று நான் எழுதியிருந்தேன். :))

சிநேகிதன் அக்பர் said...

ரயில் சினேகம் மாதிரி ப்ளைட் சினேகம்.

இந்த பயணம் இனிமையாக அமைந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனாலும் நீங்க மோசம். கொண்டு செல்லும் பொருள் மேல் கவனம் இல்லாமல் எப்படி இருக்க முடிந்தது உங்களால்?

( அப்புறம் இந்த ப்ளைட்டில் ஆண்கள் ஏரியா பெண்கள் ஏரியா என்று பிரிக்காமல் கலந்து கட்டி உட்கார வைக்கிறதுல ஏதேனும் சூட்சமம் இருக்குதா. ஏன் கேட்டேன்னா சென்ர முறை செல்லும் போதும் இதே மாதிரி ஒரு நிகழ்வு எனக்கு ஏற்பட்டது.)

துபாய் ராஜா said...

//அக்பர் said...
ரயில் சினேகம் மாதிரி ப்ளைட் சினேகம்.

இந்த பயணம் இனிமையாக அமைந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனாலும் நீங்க மோசம். கொண்டு செல்லும் பொருள் மேல் கவனம் இல்லாமல் எப்படி இருக்க முடிந்தது உங்களால்?//

வாங்க அக்பர். வெகுநாட்களுக்கு பின் உறவுகளை பார்த்த மகிழ்ச்சியில் கவனம் சிதறிவிட்டது.


//( அப்புறம் இந்த ப்ளைட்டில் ஆண்கள் ஏரியா பெண்கள் ஏரியா என்று பிரிக்காமல் கலந்து கட்டி உட்கார வைக்கிறதுல ஏதேனும் சூட்சமம் இருக்குதா. ஏன் கேட்டேன்னா சென்ர முறை செல்லும் போதும் இதே மாதிரி ஒரு நிகழ்வு எனக்கு ஏற்பட்டது.)//

ஏர்வேஸ்காரங்கதான் இதற்கு பதில் சொல்லணும்.உங்க அனுபவத்தையும் எழுதுங்க.

லோகு said...

//அந்த பக்கமும் ஆண்களே அமர்ந்திருந்ததால், “இஃப் யூ வாண்ட்,யு கேன் சிட் திஸ் கார்னர் சீட். ஐ வில் சிட் இன் யுவர் சீட்” என்று நான் கேட்//

என்னா ஒரு வில்லத்தனம். அந்தப்பக்கம் இருந்த ஆண்களின் சாபம் தான் உங்களை ரெண்டு நாள் அலைய வச்சிருக்குது.

துபாய் ராஜா said...

//லோகு said...
//அந்த பக்கமும் ஆண்களே அமர்ந்திருந்ததால், “இஃப் யூ வாண்ட்,யு கேன் சிட் திஸ் கார்னர் சீட். ஐ வில் சிட் இன் யுவர் சீட்” என்று நான் கேட்//

என்னா ஒரு வில்லத்தனம். அந்தப்பக்கம் இருந்த ஆண்களின் சாபம் தான் உங்களை ரெண்டு நாள் அலைய வச்சிருக்குது.//

ஆஹா.. லோகு... அப்படியும் இருக்குமோ.... :))

பா.ராஜாராம் said...

அருமையான அனுபவம் ராஜா.பகிர்ந்ததும் அழகு.

கண்ணா.. said...

//எனது மனைவியும்,அப்பாவும் கண்ணில் பட்டுவிட்டதால் நான் அவர்களை நோக்கி வேகமாக சென்றேன்//

புரியுதுண்ணே.......

கண்ணா.. said...

அண்ணே...

ஃபாலோவர் லிஸ்ட் இல்ல...தமிழிஷ் வோட் பட்டன் இல்ல... என்னண்ணே வியாபாரம் பாக்குற...?

சட்டு புட்டுன்னு ரெண்டையும் இணைச்சுருண்ணே...

ஆடுமாடு said...

எல்லாத்துக்கும் லக் வேணும்பாங்களே... அது இதுதானா?

நான் பிளைட்ல போகும்போதெல்லாம் பக்கத்துல தாத்தா, பாட்டிகளாக வந்து உட்கார்றாங்களே..!

பேக்ல சங்கிலிய வச்சிருந்தாலும் கைக்கு வந்திருக்கும். அப்படிதானே!

பிரபாகர் said...

பிரயாணத்துலயும் கலங்கி, கலக்கியிருக்கீங்க! நல்லா இருந்துச்சி.... அய்யாவோட தலைப்பூ, அவரின் அனுபவ வெளிப்பாடு....

பிரபாகர்.

கண்மணி/kanmani said...

இன்னமும் நாட்டுல நல்லவங்க இருக்காங்க போல...
உதவும் மனசு உங்களுக்கும்
நன்றி காட்டும் பண்பு ரெஞ்சுவுக்கும்

வாழ்க நட்பு

துபாய் ராஜா said...

//பா.ராஜாராம் said...
அருமையான அனுபவம் ராஜா.பகிர்ந்ததும் அழகு.//

வாங்க, வாங்க அண்ணாச்சி, ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம சபைப்பக்கம் வந்திருக்கீங்க.சந்தோஷம்.

துபாய் ராஜா said...

// கண்ணா.. said...
//எனது மனைவியும்,அப்பாவும் கண்ணில் பட்டுவிட்டதால் நான் அவர்களை நோக்கி வேகமாக சென்றேன்//

புரியுதுண்ணே.......//

கண்ணா,என் இனமய்யா நீர்... :))

துபாய் ராஜா said...

// ஆடுமாடு said...
எல்லாத்துக்கும் லக் வேணும்பாங்களே... அது இதுதானா?

நான் பிளைட்ல போகும்போதெல்லாம் பக்கத்துல தாத்தா, பாட்டிகளாக வந்து உட்கார்றாங்களே..!

பேக்ல சங்கிலிய வச்சிருந்தாலும் கைக்கு வந்திருக்கும். அப்படிதானே!//

அண்ணாச்சி, நம்ம ராசி நல்ல ராசி... அம்புட்டுதான் சொல்லமுடியும்.. :))

துபாய் ராஜா said...

//கண்மணி/kanmani said...
இன்னமும் நாட்டுல நல்லவங்க இருக்காங்க போல...
உதவும் மனசு உங்களுக்கும்
நன்றி காட்டும் பண்பு ரெஞ்சுவுக்கும்

வாழ்க நட்பு//

முதல் வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி கண்மணி அவர்களே...

மரா said...

பகிர்வுக்கு நன்றி...நாட்டுல நல்லவங்களும் நெறையா இருக்கங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சந்திப்பு, நாம் கவனமாக இல்லாவிட்டால் சில நேரம் இழப்பு ஏற்படும்.

எனவே கவனமாக இருங்க ராஜா.

மின்மினி RS said...

அருமையான பதிவு ராஜா சார்..,

கவனம் தேவை.. நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மின்மினி RS said...

துபாய் ராஜா சார், உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

ஹுஸைனம்மா said...

//தங்கம் வாங்கி கைப்பையில் வைத்ததை பார்த்து திட்டமிட்டே//

சந்தர்ப்ப சூழ்நிலை, இப்படித்தான் எப்பவும் ஏடாகூடமா எதையாவது நினைக்க வைக்கும்!!

நாடோடி said...

அனுபவ கதை நல்லா இருக்கு...

//மிகவும் சிறந்த காலை உணவையும் அளித்தார்கள்.//

புட்டும் கொண்டை கடலை கறியும் சாப்பிட்டேன் என்று சொல்லுங்கள்.

ஜீவன்பென்னி said...

natpugal thodrattum.

Anonymous said...

சூப்பர் ராஜா உங்களது நட்பு.
(உங்களது எல்லா பதிவும் அருமை)

சாமக்கோடங்கி said...

ஐயோ அப்பா... இவ்ளோ பெரிய இடுகையா...

DREAMER said...

நல்லவங்க நட்பு, பூமில மட்டுமில்ல, ஆகாயத்துலயும் கிடைக்கும் என்பது உங்களது அனுபவம் உணர்த்தியிருக்கு! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

Anonymous said...

That's so nice of her. கண்டிப்பாக அட்ரஸ் எழுதாவிட்டாலும், நம்பர், ஈமெயிலாவது எழுதுவது நல்லது. Good Lesson for everyone.