Tuesday, June 30, 2009

அற்பனுக்கு வாழ்க்கை வந்தால்.............

அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க.நம்ம அரசியல்வியாதிங்க ஆட்சிக்கு வந்தா என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க.
------------------------------------------------------------------------------------------

புதுடில்லி: உத்தர பிரதேச தலைநகர் லக்னோ முழுவதும், மாயாவதி தன் சிலைகளைத் திறந்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிலைகள் வைக்க மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவதா எனக் கண்டித்துள்ளது. மனு தொடர்பாக மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


உ.பி., மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவர், கடந்த 25ம் தேதி லக்னோ நகரின் பல இடங்களில், தன் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் சிலைகளையும் திறந்து வைத்தார். சிலைகள் திறக்கப்படுமென, அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இவற்றை திறந்து வைத்தார். இந்தச் சிலைகளுக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் செலவிடப்பட்டது. இதை எதிர்த்து ரவிகாந்த் என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில், அவர் கூறியிருந்ததாவது: லக்னோ நகரின் பல இடங்களில், மாயாவதி தன் சிலைகளை நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தையும் நிறுவியுள்ளார். இதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக மாயாவதி, இவ்வளவு அரசுப் பணத்தை வீணடித்துள்ளார். உ.பி., மாநில கலாசாரத் துறையின் பட்ஜெட்டில், 90 சதவீதம் சிலைகள் வைப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.


யானைச் சிலைகள்: லக்னோவில் 15 மீட்டர் சுற்றளவில் 60 யானைச் சிலைகளை நிறுவியுள்ளார். இதற்காகவும், அவரின் சிலைகளை நிறுவவும் மட்டும் 52.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறிய செயல். சிலைகள் அமைப்பதற்காக அரசு பணத்தை மாயாவதி செலவிட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். சிலை வைப்பதற்கு கோர்ட் தடை விதித்து விடக்கூடாது என்பதற்காகவும், சிலைகள் வைப்பதை எதிர்த்து வரும் 3ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அறிவித்ததாலும், அரைகுறையாகக் கட்டப்பட்ட பல சிலைகளையும் கடந்த 25ம் தேதி அவர் திறந்து வைத்துள்ளார்.

பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அல்லது உருவங்களை பெரிய அளவில் நிறுவக்கூடாது என, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயாவதி சார்பில் உ.பி., மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில அட்வகேட் ஜெனரலுமான எஸ்.சி.மிஸ்ரா ஆஜரானார். உ.பி., மாநில அரசு சார்பில் ஆஜரான வி.வி.லலித் கூறியதாவது: சிலைகள் வைப்பதற்காக மாயாவதி செலவிட்ட அனைத்து தொகைகளுக்கும் மாநில சட்டசபை அனுமதி அளித்துள்ளது என்றார்.

இதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிலைகள் வைக்க அரசு பணத்தை ஏராளமான அளவில் செலவிட்டது தொடர்பாக, முதல்வர் மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். நான்கு வாரங்களுக்குள் நோட்டீசிற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். மேலும், உ.பி., அரசு, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உ.பி., மாநிலத்தில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 5.9 கோடி பேர், தங்களின் ஜீவனத்தை நடத்த முடியாமல் போராடி வருகின்றனர். மேலும், குழந்தைகள் இறப்பு வீதமும் உ.பி., மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிலைகள் வைப்பதற்காக பல 100 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டதை நியாயப்படுத்த முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பொதுமக்களின் பணத்தை முறையாகச் செலவிட வேண்டும். அந்தப் பணத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.
-------------------------------------------------------------------------------------------
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, தன் சிலையையும், தன் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தையும் மாயாவதி நிறுவியுள்ளதால் என்ன பயன்? இந்திய அரசியலில் இதை விட வெட்கப்படத்தக்க விஷயம் வேறு இருக்குமா என்ன?

சிலைகள் வைக்க செலவிட்ட 1,000 கோடி ரூபாயை, ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், கல்வி அறிவை மேம்படுத்தவும் செலவிட்டிருக்கலாம்.
நல்லவேளை நடந்து முடிந்த தேர்தலில் இந்த அம்மா சார்ந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.இந்த அம்மா மட்டும் பிரதமர் ஆகியிருந்தால், அய்யய்யோ............ நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.


நல்லவேளை....... நாடும், நாமும் தப்பித்தோம்.

10 comments:

துளசி கோபால் said...

வியாதிகளுக்கு இதைவிட்டா வேற சான்ஸ் கிடைக்காதுல்லேயா?

ஒரு சந்தேகம்.

அர்த்தராத்ரியில் மழை வந்தா குடை பிடிக்கக்கூடாதா?

அப்புறம் யானைச் சிலைகள்.

போயிட்டுப்போகுது. அதுகள் இருக்கட்டும்.

இந்தியாவில் ஏழைகள் இல்லைன்னு சாதிக்கப்போறாங்க.
என்னவோ போங்க(-:

ramalingam said...

நமது சட்டசபையிலும் முதல்வரை மற்ற ஜால்ராக்கள் அளவுகடந்து புகழுவதைப் பார்க்கும்போது இங்கும் அதேநிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

இது நம்ம ஆளு said...

அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

துபாய் ராஜா said...

வணக்கம் துளசியம்மா.ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

//"வியாதிகளுக்கு இதைவிட்டா வேற சான்ஸ் கிடைக்காதுல்லேயா?"//

அடுத்த தேர்தல்ல மக்களோட சிகிச்சை எப்படின்னு பார்க்கத்தானே போறோம்.

//"ஒரு சந்தேகம்.

அர்த்தராத்திரியில் மழை வந்தா குடை பிடிக்கக்கூடாதா?"//

மழை வந்தா பிடிக்கலாம்.குடை இருக்கிறது என்பதற்காக பிடிக்ககூடாது.

//"அப்புறம் யானைச் சிலைகள்.

போயிட்டுப்போகுது. அதுகள் இருக்கட்டும்."//

நீகக சொன்னா சரி.

//"இந்தியாவில் ஏழைகள் இல்லைன்னு சாதிக்கப்போறாங்க.
என்னவோ போங்க(-:"//

உண்மைதான்.

துபாய் ராஜா said...

//"நமது சட்டசபையிலும் முதல்வரை மற்ற ஜால்ராக்கள் அளவுகடந்து புகழுவதைப் பார்க்கும்போது இங்கும் அதேநிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது."//

வணக்கம் ராமலிங்கம்.வருகைக்கு நன்றி.

ரொம்ப ஆடினா அடுத்த வருஷம் ஆப்பு நிச்சயம்னு நம்ம முதல்வருக்கு தெரியும்கிறதனால தமிழ்நாட்டில் இந்த நிலைமை வராது.

துபாய் ராஜா said...

//"அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க"//

ஆண்டவா,அரசியல் வியாபாரிகளிடம் இருந்தும்,புரளி கிளப்பும் குறளிகளிடம் இருந்தும் எங்களை காப்பாத்து.

Vidhya Chandrasekaran said...

திருந்தவே திருந்தாத ஆட்கள்:(

துபாய் ராஜா said...

//"திருந்தவே திருந்தாத ஆட்கள்:("//

ஆமாம் வித்யா.ஆனால் மக்கள் மனது வைத்தால் திருந்தாத ஆட்களையும் தேர்தல் மூலம் திருத்திவிடலாம்.

இரசிகை said...

kashttam thaan.....

Anonymous said...

சித்ராக்கா புளொக்ல அவங்களுக்கு பணமாலை போட்டாங்கனு படிச்சேன். காலம்.