Thursday, June 25, 2009

கலிகாலத்தில் காதல் படும் பாடு............


காதலும்,வீரமும் தமிழரின் இரு கண்கள்.

கண்ணியமான காதலும், விவேகமான வீரமும் தமிழர் வாழ்வில் இரண்டற கலந்தவை.

இக்கலிகாலத்தில் நம்மக்களிடம் சிக்கி காதல் படும்பாட்டை பாருங்கள்.

------------------------------------------------------------------------------------------

ஒரு தலை காதலால் உண்டான விபரீதம்....

பெண் போலீஸ் வேடம்:வாலிபர் கைது

சென்னை: "முறைப்படி பெண் கேட்டேன். தர மறுத்ததால் தான், பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியைக் கடத்தினேன்'' என்று மாணவி கடத்தலில் சிக்கிய வாலிபர் போலீசாரிடம் கூறினார். தப்பிய கார் டிரைவரும் கைதானார்.சென்னை திருவொற்றியூர் சண்முகபுரத்தில் வசித்து வருபவர் ஜெயராமன்; தனியார் நிறுவன ஊழியர். இவரது இரண்டாவது மகள் சுந்தரி (17) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). திருவொற்றியூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவிகளோடு சுந்தரி வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பெண் போலீஸ் வேடத்தில் வந்த மர்ம நபர் சுந்தரியை சுமோ காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர்.

கார் அம்பேத்கர் நகர் சுரங்கப்பாதை வழியாக செல்வதை அறிந்த போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து சாலை சந்திப்புக்கள் வழியாக அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று காரை சுற்றி வளைத்து, மாணவியை மீட்டனர்.பெண் போலீஸ் வேடமிட்டு கடத்திய திருமங்கலத்தைச் சேர்ந்த வாலிபர் முருகனை (24) போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய கார் டிரைவர் நாகராஜன் (25) இரவில் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையின்போது முருகன் கூறியதாவது:ஜெயராமன் குடும்பத்தினர் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். நான் அங்கு பஞ்சர் கடை வைத்திருந் தேன், கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தேன். நான் அவர்களது குடும்பத் தில் ஒருவனாகத்தான் இருந்தேன். இரண்டாவது மகள் சுந்தரி மீது எனக்கு மோகம் இருந்தது. இதனிடையே ஜெயராமன் திருவொற்றியூர் சென்று விட்டார்.சுந்தரியை எனக்கு பிடித் திருந்ததால், முறைப்படி சென்று பெண் கேட்டேன். அப்போது தகராறு ஏற்பட்டு விட்டது.சுந்தரியின் அக்காவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதாக போலீசில் மாட்டிவிட்டனர். சுந்தரியை கடத்தி திருமணம் செய்ய திட்டமிட்டேன்.

பெண் போலீஸ் போல் சென்றால், கடத்த வசதியாக இருக்கும் என கருதினேன். பெரியமேடு சென்று இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து போலீஸ் உடை வாங்கினேன். சவுரி முடியும் வாங்கினேன். பள்ளியில் இருந்து சுந்தரி வீடு திரும்பியபோது பெண் போலீஸ் வேடத்தில் அவரைக் கடத்தினேன்.சற்று நேரத்தில் போலீசார் என்னை சுற்றி வளைத்த தால் என் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. அந்த குடும்பத்தால் இரண்டாவது முறை ஜெயிலுக்கு போகிறேன் என போலீசாரிடம் கூறினான்.கடத்தலுக்கு பயன் படுத்திய காரும், தங்க தாலியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முருகன், அவரது கார் டிரைவர் நாகராஜன் இருவரும் நேற்று திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-----------------------------------------------------------------------------------------

இணைந்த காதல்.பிரித்த உறவுகள்.........

கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன்: காதல்மணம் செய்த பெண் கதறல்

சென்னை: ""தினமும் அடித்து, உதைத்து சித்திரவதை செய்வதால், இனிமேல் கணவனுடன் சேர்ந்து வாழமாட்டேன்; அவரிடமிருந்து எனக்கு விடுதலை வாங்கித் தரவும்,'' என திருமணமான நாற்பதே நாளில் மகளிர் போலீசில் இளம்பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.அரக்கோணம் கைனூர் கிராமத்தை சேர்ந்தவர் பவானி(19); பத்தாவது படித்துள்ளார். பாட்டி யின் பராமரிப்பில் வளர்ந்த பவானி, வேலை தேடி சென்னைக்கு வந்தார். தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மதிய சாப்பாட்டிற்காக அங்குள்ள மெஸ்சுக்கு பவானி சென்று வருவது வழக்கம்.

அப்போது, அங்கு வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தை சேர்ந்த ஷேர்ஆட்டோ டிரைவர் சுகுமார்(22) என்பவருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. மூன்று மாதம் இருவரும் காதலித்தனர். பின் மின்ட் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பவானியின் கழுத்தில் தாலி கட்டி, மனைவியாக சுகுமார் ஏற்றுக் கொண்டார்.திருமணம் ஆனது முதல் வியாசர்பாடி பி.வி.காலனியில் தனியாக இருவரும் வசிக்கத் துவங்கினர். ஆனால், சுகுமாரின் தாய் சுசிலா, தந்தை மாரி ஆகியோர் பவானியை கணவனுடன் சேர்ந்து வாழ விடாமல் துன்புறுத்தியதாக கூறப் படுகிறது.மேலும், பவானியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கணவன் மற்றும் அவரது பெற்றோர் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

அடி உதையை தாங்க முடியாமல் தன்னை காப்பாற்றும்படி எம்.கே.பி.நகர் மகளிர் போலீசில் பவானி புகார் செய்துள்ளார்.வரதட்சணை வாங்கி வர வேண்டும் என கேட்டு மாமியார், மாமனார் தினமும் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். இனிமேல் கணவன் சுகுமாருடன் வாழ முடியாது.அவரிடமிருந்து எனக்கு விடுதலை வாங்கித் தரவும், நான் எனது பாட்டியிடமே சென்றுவிடுகிறேன்' என பாதிக்கப்பட்ட பவானி அழுது புலம்பினார்.
-----------------------------------------------------------------------------------------

முறையற்ற காதல்.முடிந்த வாழ்க்கை.......


ஊராட்சிதலைவர் கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் மனைவி கைது



திருவண்ணாமலை: ஆரணி அருகே ஊராட்சி தலைவர் கொலையில், அவரது மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி; தி.மு.க.,வை சேர்ந்தவர். கடந்த 22ம் தேதி வீட்டில் தூங்கிய சுந்தரமூர்த்தி, வெடிவிபத்தில் உடல் கருகி இறந்தார்.ஆரணி போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது குடும்ப பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.செந்தாமரையின் அக்காவுக்கு சுந்தரமூர்த்தியை திருமணம் நிச்சயம் செய்த நிலையில், அவரது அக்கா வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதனால் வேறு வழியின்றி, செந்தாமரைக்கும், சுந்தரமூர்த்திக்கும் திருமணம் செய்து வைத்தனர்.செந்தாமரைக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணமான சில நாட்களில் வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட அவர், தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து, கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (27) என்ற வாலிபருடன் செந்தாமரைக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தங்களுக்கு இடையூறாக இருந்த சுந்தரமூர்த்தியை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் திட்டமிட்டனர். கடந்த 22ம் தேதி இரவு, திருவிழாவில் வெடிக்கும் உயர்ரக வகை பட்டாசுகள், ஐந்து லிட்டர் பெட்ரோலை மதியழகன் வாங்கி வந்து செந்தாமரையிடம் கொடுத்தார்.

பட்டாசு, பெட்ரோல் கேன் ஆகியவற்றை சுந்தரமூர்த்தி படுக்கையின் கீழ் அவரது மனைவி வைத்து விட்டார். சென்னை சென்று வந்த சுந்தரமூர்த்தி, இரவு 11 மணிக்கு படுக்கைக்கு சென்றார். அதிகாலை வேளையில் அவர் அயர்ந்து தூங்கிய போது, கேனில் இருந்த பெட்ரோலை, அவரது படுக்கை அறையில் மதியழகன் ஊற்ற, செந்தாமரை தீ வைத்துள்ளார். பின் மதியழகன் அங்கிருந்து தப்பிவிட்டார்.தீ வைத்தவுடன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. தீ கரும்புகை மூட்டத்துடன் இருந்ததால் அறையிலிருந்து சுந்தரமூர்த்தி தப்பி வெளியே வர முடியாமல் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரிந்தது.

வெடிவெடித்ததில் அவர் இறக்கவில்லை என்பதும், பெட்ரோல் தீ விபத்தில் அவர் இறந்திருப்பது பிரேதப் பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தாமரையையும், மதியழகனையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் செந்தாமரை கொடுத்த வாக்குமூலத்தில், "என் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை. மதியழகனுடன் எட்டு மாதமாக கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்தேன். இந்த சந்தோஷத்துக்கு, சுந்தரமூர்த்தி தடையாக இருப்பார் எனக் கருதி, அவரை மதியழகனுடன் சேர்ந்து கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார்.


6 comments:

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்ம்!

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
துபாயா நீங்க.? நானும்தான்..
டைம் இருந்தா நம்ம கூட்டதுல
ஐகியம் ஆகுங்க!!

ஓட்டும் போட்டாச்சு..

லோகு said...

நல்ல தொகுப்பு..

காதல் இல்லை இதெல்ல்லாம்இனக் கவர்ச்சி தான்

துபாய் ராஜா said...

"ஹ்ம்ம்ம்!"

ஆமாங்க சந்தனமுல்லை.இந்தகாலத்துல காதலும் பெருமூச்சுதான் வாங்குது.

வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

//அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கலையரசன்.

//துபாயா நீங்க.? நானும்தான்..
டைம் இருந்தா நம்ம கூட்டதுல
ஐகியம் ஆகுங்க!!//

கூட்டம் எங்கேன்னு சொல்லுங்க. கொழுந்துவிட்டு எரிவோம்.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

துபாய் ராஜா said...

//நல்ல தொகுப்பு..//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

//காதல் இல்லை இதெல்ல்லாம்இனக் கவர்ச்சி தான் //

ஆமாம் லோகு.எல்லோருக்கும் இது புரியமாட்டேங்குதே.......


தொடர்ந்து வருகை தாருங்கள்.