Sunday, August 27, 2006

உண்மை


பூமி
சூரியனை
சுற்றி
இயங்குகிறதாம்.

சந்திரன்
பூமியை
சுற்றி
இயங்குகிறதாம்.

இதெல்லாம்
உண்மையோ,
இல்லையோ.
என் அன்பே !

நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.

12 comments:

உங்கள் நண்பன்(சரா) said...

//பூமி
சூரியனை
சுற்றி
இயங்குகிறதாம்.
//

அப்புடுடியா?

//சந்திரன்
பூமியை
சுற்றி
இயங்குகிறதாம்//

கண்டுபோட்டுட்டாருப்பா சாக்ரடீசு!

//நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.
//

அய்யோ! அம்மா! கண்டிக்கிறதுக்கு ஆளே இல்லையா?:)))))))

கல்யாணத்துக்கு அப்புறம் சுற்றி சுற்றி வந்து வீட்டு வேலை செய்யுறத பெருமையா சொல்ல ஒரு கவிதை வேறு!

:)))))


அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

இது ஆவறதில்ல!!

பொது இடத்தில இப்படியா போட்டு உடைக்கிறது. கொஞ்சம் அடக்கியே வாசிங்க! : - )))

துபாய் ராஜா said...

// உங்கள் நண்பன் said...
அப்புடுடியா? //

அப்படித்தான் சொன்னாய்ங்க.

//கண்டுபோட்டுட்டாருப்பா சாக்ரடீசு!//

ஆமா,அவர் கண்டதை நான் பதிவாப்
போட்டுட்டேன்.

//அய்யோ! அம்மா! கண்டிக்கிறதுக்கு ஆளே இல்லையா?:)))))))//

கண்டிக்கிற ஆள் ஊர்ல இருக்கதுதான்
பிரச்சினை நண்பா.

// கல்யாணத்துக்கு அப்புறம் சுற்றி சுற்றி வந்து வீட்டு வேலை செய்யுறத பெருமையா சொல்ல ஒரு கவிதை வேறு! //

எப்படியாவது 'உண்மை'யை
கண்டுபிடிச்சிடறாங்கய்யா. :-))))

ALIF AHAMED said...

/./
நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை

/./

கல்யாணமாயிடுச்சு வேற வழி...::)

துபாய் ராஜா said...

//தம்பி said...
இது ஆவறதில்ல!!

பொது இடத்தில இப்படியா போட்டு உடைக்கிறது. கொஞ்சம் அடக்கியே வாசிங்க! : - ))) //

தம்பியண்ணே,அடக்கி அடக்கி வச்சுதான் ஆறா உடைச்சிட்டுப்போகுது.
:))).

துபாய் ராஜா said...

//மின்னுது மின்னல் said...
கல்யாணமாயிடுச்சு வேற வழி...::) //

வாம்மா மின்னல்.'உண்மை'தான்.

Anonymous said...

வாழ்துக்கள் ராஜா..இப்ப தான் வலைபூ பக்கம் வருகிறேன்.
லியோ சுரேஷ்.
துபாய்

துபாய் ராஜா said...

//வாழ்த்துக்கள் ராஜா..இப்ப தான் வலைபூ பக்கம் வருகிறேன்.
லியோ சுரேஷ்.துபாய்//

வாங்க சுரேஷ்.நானும் உங்களைப்போல
அனானியா வந்து ஐக்கியமானவன்தான்.

தினமும் முடிந்தவரை எல்லோரது பதிவுகளையும் படித்து பின்னூட்டம் இடுங்கள்.

விரைவில் தனி வலைப்பூ தொடங்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

தனி வலைபூவா நானா...ஏதோ பெரியவுங்க அசீர்வதம் (டேய் தமிழ்ல டைப் பண்னுறதுக்கே ஜல்லியடிக்குரே)கொஞ்ச நாள் ஆகட்டும்.நன்றி.
லியொ சுரேஷ்.
துபாய்

துபாய் ராஜா said...

சரி சுரேஷ்,நீங்க சொன்னமாதிரி நல்லா ஜல்லியடிச்சு,தார் ஊற்றி,பாதை தயார்
பண்ணிட்டு வாங்க.

நாமக்கல் சிபி said...

//நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.//

இப்படித்தான் நல்ல புள்ளையா சமர்த்தா சரண்டர் ஆகணும்!

:-)

துபாய் ராஜா said...

// நாமக்கல் சிபி @15516963 said...
//நான்
உன்னை
சுற்றி
இயங்குவது
மட்டும்
உண்மை.//

இப்படித்தான் நல்ல புள்ளையா சமர்த்தா சரண்டர் ஆகணும்!

:-) //

ஆமா சிபி.என்ன தப்பு பண்ணினாலும்
சரண்டர் ஆயிட்டா தண்டனை கம்மின்னு நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். :-))))))