Tuesday, September 29, 2015

கன்னி உடையே… காக்கும் படையே…




வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை.


கன்னி உடையே… காக்கும் படையே…

உப்பில்லா பண்டம்
ஒன்றாகிடும்
 குப்பையிலே…

ஒப்பிலா  பலபண்பும்
ஒருசேரப் பழுதாகும்
பளிங்குப் பாவை
 உன் ஒழுக்க
நடைஉடை தப்பையிலே…

கண்ணுக்கு  நெருக்கமான இமை அழகு…

கன்னி உனக்கு ஒழுக்கமான உடை அழகு…

இமையில்லா கண் என்னாகும்
எண்ணிப்பார் பெண்ணே…

இடுப்புத்தெரியும் உடையால்
உன் இளமை ஆகிடும்
எதிர்பாரா நேரம் புண்ணே…

ஒய்யார உடையணியும் பெண்ணே…

உடனே இழப்பாய் நற்பெயரினை
பார்க்கும் பல பேர் முன்னே…

  கொஞ்சமாய் நீ
அணியும் துணியாலே…

வன்மமும், வஞ்சமும்
வலுவாய் வந்திடும்
பழிபாவம் பணியாத
சில அணியாலே…

தூசு, துரும்பு பட்டால்
கண் கெட்டிடும் பெண்ணே…

துஷ்டர் குறும்பு  செய்தால்
பட்டுப் பாழாகிடும்
உன் வாழ்க்கையெனும்
 விலையிலாப் பொன்னே...  

நைச்சியமாய்
உடை அணிவது
நல்லதொரு பண்பு…

நாணம் அகற்றி
நீ திரிந்திட்டால்
 நாள்தோறும் வந்திடுமே
நிச்சயமாய் ஊரெங்கும்
 பலப்பல வம்பு…
  
உடையும் பொருளுக்கெல்லாம்
அணிந்திட்டாய்  
ஓராயிரம் வகையினில்
வண்ண உறை…

நாகரீக உடையா
நங்கை உனக்குச் சிறை…

ஆளைக் கண்டு
மோகிப்பர் பலர்…

பெயரைக் கொண்டு
போகிப்பர் சிலர்…

நினைவில் நிறுத்தி
நிர்மூலம்
செய்வரும் உளர்….

உதவாத காரணங்கள்
கூறி பூட்டி
வைக்க வில்லை
உன்னை வீட்டிற்குள்ளே…

உடலழகை  
பாவி பலர்
கண்பட
காட்டி திரியாதே
நாட்டிற்குள்ளே…

 எதிரியை வெல்ல உண்டு
எத்தனையோ  உலகில் படை…

எத்திக் கடந்திடு எளிதாய்
எதிரே வரும் தடை…

உன் இளமையைக் காத்திட
 எப்போதும் அணிந்திடு
இடத்திற்கேற்ற உடை…

உடல் மறைத்து
உடை அணிவது
உன்னதப் பண்பாடு...

மடல் நீங்கிய
மலர் பார்ப்பது
மனிதர் கண்பாடு...

மனம் கொண்டு
அறிவாய் மங்கை நீ
படப்போகும் பெண்பாடு...

அறிவுரை மறந்து
ஆணவத்தால்
நீ நடந்தால்
அதன்பின்
எல்லாம் உன்பாடு....


--------------------------------------------------------------------------------------------------------

 " கன்னி உடையே… காக்கும் படையே… " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் உறுதி அளிக்கிறேன்.

அன்பு நண்பர்களே, வலைப்பதிவர் சந்திப்பு விழா குறித்தான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வலைப்பதிவர் திருவிழா-2015 என்ற தளத்தோடு இணைந்திருங்கள். தங்கள் பெயரும் விபரமும் வலைப்பதிவர் கையேட்டில் இன்னும் சேர்க்காத நட்புக்கள் நம்மைப் பற்றிய ஆவணப் பெட்டகம் அது என்பதை மறக்காமல் உடனே சேர்த்து விடுங்கள்... 

வலைப்பதிவர் விழா தொடர்பான தொடர்புகளுக்கு...




11 comments:

துபாய் ராஜா said...

// வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றி...நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com //



அன்புள்ள திரு.தனபாலன் மற்றும் விழாக் குழுவினருக்கு,

வணக்கம்.

படைப்பை அனுப்பியவுடன் பதிவில் ஏற்றிய வேகம் கண்டு வியந்தேன். விழா மீதான தங்கள் ஆர்வத்திற்கும், ஈடுபாட்டிற்கும் தலைவணங்குகிறேன்.

நன்றி. வணக்கம்.

ஹிஷாலி said...

நல்ல சிந்தனை பெற்றி பெற வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

// ஹிஷாலீ said...

நல்ல சிந்தனை. பெற்றி பெற வாழ்த்துக்கள் //

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி திரு.ஹிஷாலீ.

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே நல்ல அறிவுரை சொல்வது போன்ற பாணியில் கவிதை நடையை ரசித்தேன் போட்டியில் வெற்றி பெற எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

ஊமைக்கனவுகள் said...

நாகரிகக் கட்டுடைப்பை உரக்கத் திட்டும் கவிதை.

வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நன்றி.

Iniya said...

அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

துபாய் ராஜா said...

// KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே நல்ல அறிவுரை சொல்வது போன்ற பாணியில் கவிதை நடையை ரசித்தேன் போட்டியில் வெற்றி பெற எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் //

தொடர் தள வரவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே...

துபாய் ராஜா said...

// கரந்தை ஜெயக்குமார் said...
அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே... //

தொடர் வருகைக்கும், ஊக்கக் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

துபாய் ராஜா said...

// ஊமைக்கனவுகள். said...

நாகரிகக் கட்டுடைப்பை உரக்கத் திட்டும் கவிதை.வெற்றிபெற வாழ்த்துகிறேன். //

முதல் வரவிற்கும், முத்தான கருத்திற்கும் நன்றி திரு.ஊமைக்கனவுகள்.



துபாய் ராஜா said...


// Iniya said...

அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!//

முதல் வரவிற்கும், ஊக்க கருத்திற்கும் நன்றி திரு.Iniya...