கட்டி அணைத்து
முத்தம் கொடுத்தால்
கன்னங்கள் சிவக்கும்
சரிதான்....
ஆனால்
எட்டி நின்று
ரசிக்கும்போது கூட
நித்தம்
உன் கன்னங்கள்
சிவப்பதன்
காரணம் என்னடி...
------------------------
மோதலின் போது
ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறுகன்னத்தை காட்டு
தத்துவம் சொல்லும் நீ.....
மிகுந்த காதலின்போது
உன்னொரு கன்னத்தில்
முத்தமிட்டால்
மறுகன்னம் காட்ட
மறுப்பதன்
காரணம் என்னடி...
9 comments:
:) ahaa
நயமாக ஒரு கவிதை..
கவிதை அருமை.
ராஜாவுக்கு சிரிப்பழகி மேலதான் பிரியமோ...
எல்லாக் கவிதைகளும் சினேகமாய் சிரிக்கிறதே...
// வானம்பாடிகள்said...
:) ahaa //
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி பாலா சார்.
//முனைவர்.இரா.குணசீலன்said...
நயமாக ஒரு கவிதை..//
வரவிற்கும் நல்லதொரு கருத்திற்கும் நன்றி பேராசிரியரே...
// சே.குமார்said...
கவிதை அருமை.
ராஜாவுக்கு சிரிப்பழகி மேலதான் பிரியமோ...
எல்லாக் கவிதைகளும் சினேகமாய் சிரிக்கிறதே... //
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே. சினேகமான சிரிப்பழகியின் படம் காரணம் எனது ஆரம்பகால பதிவுகளை படித்தால் படித்தால் புரியும் தோழரே... :))
// FOOD said...
காதல் ரசம்.//
//FOOD said...
ஆனாலும் ஆசை அதிகம்தான்..//
போங்க சித்தப்பா சார். எனக்கு வெட்கம், வெட்கமா வருது. :))
rhyme is neet
// சி.பி.செந்தில்குமார்said...
rhyme is neet//
Thanx for ur Comment.
Post a Comment