Tuesday, September 20, 2011

தமிழா…..தமிழா

ஓட்டு வீடு,
ஓலைக்குடிசையில்
தூசி,தும்பு
மண், மட்டி
ஒட்டி விழும்
மழைத்தண்ணீர்
வேட்டித்துணியில்
வடிக்கட்டி
தவலையில் பிடித்து
தவணையில் குடித்து
வளர்ந்தோம்
அப்போது…..


தண்டா பானி
மினரல் வாட்டர்
பிராண்ட் மாறி
குடித்தால்
த்ரோட் இன்வக்சன்
சளி, கபம்,காய்ச்சல்
ரூபாய் தொள்ளாயிரம்
செலவு
நாளொன்றிற்கு
இப்போது…..

8 comments:

காந்தி பனங்கூர் said...

உண்மை தான் நண்பா. அந்த காலத்தில் காய்கறிகளை சாப்பிட்ட மக்களுக்கு எந்த உபாதையும் இல்லாமல் இருந்தார்கள். இப்போ பீசா, பர்கர் என்று என்னத்தையோ சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கிறோம்.

பழசை நினைக்க வைத்த பதிவு.

துபாய் ராஜா said...

// காந்தி பனங்கூர் மொழிந்தது...

உண்மை தான் நண்பா. அந்த காலத்தில் காய்கறிகளை சாப்பிட்ட மக்களுக்கு எந்த உபாதையும் இல்லாமல் இருந்தார்கள். இப்போ பீசா, பர்கர் என்று என்னத்தையோ சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கிறோம்.

பழசை நினைக்க வைத்த பதிவு.//

கவிதைக்கேற்ற கருத்து. சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உங்களக்கு நன்றாக kavithai வருகிறது
பதிவு கலக்கல் .
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி

இரசிகை said...

nallaayirukku...

உணவு உலகம் said...

நாமெல்லாம் இப்ப நோய் எதிர்ப்பு சக்தியில்லாம போய்ட்டோம்.

தக்குடு said...

என் மனதின் ஆதங்கம் தங்களின் கோபவரிகளில் படித்தேன். அருமை!! வாழ்த்துக்கள்!!

'பரிவை' சே.குமார் said...

Kavithai Arumai... Raja.

துபாய் ராஜா said...

யானைகுட்டி @ ஞானேந்திரன்
இரசிகை
Food சித்தப்பா சார்
தக்குடு தம்புடு
நண்பர் குமார்
அனைவர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.