Sunday, September 18, 2011

தாய் நீ(ர்) தாய்...


ஊற்றுச் சேய்
ஓடைக் குழந்தை
அருவிக் குமரி
ஆற்று மங்கை
  அலைகடல் பெண்....


சூரியக் கணவன்
சுடுகதிர் பட்டு
நீராவிக் கர்ப்பம்
    நீ தரித்து....


நெடுமழையாய்
பிரசவித்தாய்
நீர்சூழ்
  பிரபஞ்சத்தில்.....

9 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

துபாய் ராஜா said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ... //


வாங்க வாங்க வழக்குரையரே... :))

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

துபாய் ராஜா said...

// FOOD மொழிந்தது...

//நெடுமழையாய் பிரசவித்தாய் நீர்சூழ் பிரபஞ்சத்தில்.....//

இப்ப நெல்லைக்கு இதுதான் தேவை.வரட்டும், வரட்டும்//

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சித்தப்பா சார்.

காடுகள் அழிக்கப்படுவதும், சுற்றுச்சூழல் குறித்து வெகு ஜனங்களுக்கு அக்கறை இன்மை ஆகியவற்றால் நமது நெல்லை மட்டுமல்ல,உலக அளவில் மழை அளவு மிகவும் குறைந்து விட்டது.

ஆய்வுகள் வேறு மூன்றாம் உலகப்போர் நீருக்காகவே இருக்கும் என்று பயம் காட்டுகின்றன.

வருங்காலம் மட்டுமல்ல நாம் வாழும் காலமும் நீருக்காக பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். :((

துபாய் ராஜா said...

// சே.குமார்said...

கவிதை அருமை... //

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே...

vasu balaji said...

good one:)

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

கவிதை ரொம்ப அருமையாயிருக்கு..

துபாய் ராஜா said...

வரவிற்கும், கருத்திற்கும் நன்றி வானம்பாடிகள் ஐயா,லஷ்மி அம்மா,
அமைதிச்சாரல் அக்கா.