Monday, October 10, 2011

அன்பே... என் அன்பே...


உயிர்ப்பறவை
உடலை
விட்டுச்செல்லும்
 நேரம்...

அன்பே...
என் அன்பே...

உன் 
நினைவுகளோடுதான்
என்
அஸ்தமனம்
  நேரும்...


உறவென்று
சொல்லிட
உலகில்
  பலருண்டு...

உடலொட்டிய
உயிர்
ஒன்றே ஒன்று...

அன்பே...
என் அன்பே...

உரக்கச்
சொல்வேன்
அது
நீயே என்று...


பணிக்காக
பறந்தேன்
  பல நாடு...

அன்பே...
என் அன்பே...

காதல்பிணி
தீர
எப்போதும்
இருப்பேன்
இனி
நான்
உன்னோடு...

9 comments:

vasu balaji said...

:))அதென்ன எல்லாக் காதலும் சினேகாக்கு:))

துபாய் ராஜா said...

// வானம்பாடிகள்said...

:))அதென்ன எல்லாக் காதலும் சினேகாக்கு:)) //

சிநேகமெல்லாம் செந்தமிழ்நாட்டு தமிழச்சிக்கு மட்டும்தான் என்பதுதான் காரணம் அய்யா...

ஆரம்பக்கட்ட பதிவுகளைப் படித்தால்
இன்னொரு முக்கிய காரணமும் புரியும்... :))

கவிதைகளைப் பற்றி கருத்தொன்றும் சொல்லவில்லையே அய்யா....

துபாய் ராஜா said...

// FOOD said...

//பணிக்காக பறந்தேன் பல நாடு...
அன்பே... என் அன்பே...
காதல்பிணி தீர எப்போதும் இருப்பேன் இனி நான் உன்னோடு...//

என்ன ஒரு உயிர்ப்பு உங்கள் கவிதைகளில்! நன்று. //

வரவிற்கும்,ரசனையான கருத்திற்கும் நன்றி சித்தப்பா சார்.

சேக்காளி said...

மதினி போட்டுருக்கற நகையெல்லாம் நீங்க துபாயிலருந்து கொண்டாந்ததாண்ணே?.

'பரிவை' சே.குமார் said...

அருமையான + சினேகமான கவிதை.

துபாய் ராஜா said...

// சேக்காளிsaid...

மதினி போட்டுருக்கற நகையெல்லாம் நீங்க துபாயிலருந்து கொண்டாந்ததாண்ணே?.//

(தெனாலி கமல் குரலில் படிக்கவும்)அப்படியென்றும் வைத்துக் கொள்ளலாம் சேக்காளி. ஏனென்றால்(சிநேகா) மதினியே துபாயில் படிச்சு வளர்ந்தவங்கதானே... :))

துபாய் ராஜா said...

//சே.குமார்said...

அருமையான + சினேகமான கவிதை.//

அருமையான கருத்திற்கும், சிநேகமான வரவிற்கும் நன்றி தோழரே...

Starjan (ஸ்டார்ஜன்) said...

காதலோடு கவிநயமும் சேர்ந்திருக்கு.. ஆனா பாருங்க., இங்கே சினேகாவும் சேர்ந்திருக்காங்களே..:))

கவிதை சூப்பர் ராஜா.

துபாய் ராஜா said...

// Starjan ( ஸ்டார்ஜன் )said...

காதலோடு கவிநயமும் சேர்ந்திருக்கு.. ஆனா பாருங்க., இங்கே சினேகாவும் சேர்ந்திருக்காங்களே..:))

கவிதை சூப்பர் ராஜா. //

நீங்க பார்க்கத்தானே சிநேகாவை சேர்த்திருக்கோம் ஸ்டார்ஜன்... :))