“சார் என்ன சார் தெனமும் இப்படி லேட்டாகுது” என்று கேட்ட முருகனிடம். “உனக்கு என்னடே நீதான் இருட்டு முன்னாடி எறங்கிடுதியே. பாப்பம்டே இன்னிக்காவது சீக்கிரம் முடியுதான்னு “என்று பதில் கூறினாலும் 'என்னடா வேலை இது' என்று அலுப்பாகவே இருந்தது.
காற்றாலை நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்காக தினமும் மெஷின் மீது 250 அடி ஏறி இறங்குவது என்பது மிக கடினமான வேலை. கம்பெனி ஆள்களோடு காண்ட்ராக்ட் ஆள்களும் பாதிக்கு பாதி இருப்பார்கள். கடினப்பணி காரணமாக காண்ட்ராக்ட்டில் வேலைக்கு வருபவர்கள் தாக்குபிடிக்க முடியாமல் சில நாட்களில் வேலையை விட்டு சென்றுவிடுவார்கள். எனவே அடிக்கடி புதிய ஆட்கள் வந்து போய் இருப்பர். அப்படி எங்கள் அணீயில் புதிதாக வந்தவன்தான் முருகன். வேலை செய்கிறானோ இல்லையோ ‘சளசள’வென்று வாயாடுவதில் சூரன்.
அன்றும் அப்படித்தான் வேலை முடிந்து இறங்க நேரமாகிவிட்டது. நன்றாக இருட்டியும் விட்டது. இறங்கும் நேரம் “முருகனை எங்கப்பா” என்றதற்கு, ”சார் அவன் அப்பலே எறங்கிட்டான்” என்று பதில் வந்தது. கீழே வந்து மெசின் செக்யூரிட்டியிடம் கேட்டதற்கு “சார், இப்படி காட்டுக்குள்ள போனான். இருங்க போய் பார்த்துட்டு வர்றேன்” என்று கூறி விட்டு அவனை தேடிப் பார்க்கச் சென்றார்.
எல்லோரும் கீழே இறங்கி உடையெல்லாம் மாற்றி வண்டியில் ஏறும்வரை முருகனும், செக்யூரிட்டியும் வரவில்லை. அனைவரும் பொறுமையிழந்த நேரம் முருகனை அழைத்துக் கொண்டு செக்யூரிட்டி வந்தார். கலகலப்பான முருகனின் முகம் பேயறைந்தாற்போல் வெளிறிப்போய் இருந்தது.
"சார் ‘முறுக்கு முனி’ட்ட மாட்டிகிட்டான். கோயில்ல கொண்டு போய் தண்ணி கோரி எறிஞ்சா சரியா போயிடும்" என்று செக்யூரிட்டி கூறியதை கேட்ட எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
(தொடரும்)
9 comments:
நல்லா போகுது...தொடருங்கள்
தொடர்க.. (ஒரு அத்தியாயத்துக்கு இது ரொம்பக்கொஞ்சம்)
முறுக்கு முனி நல்ல நொறுக்கு தீனி. தொடர்கிறோம் ராசா.
Waiting...!
ம்...ம்... தொடருங்க... அசத்தல்
அச்சோ...பேய்க்கதை.
மறுபடியும் அமானுஷ்யமா கலக்குறிங்க போங்க திக் திக் தொடர்கள் தொடரட்டும்....
சீக்கிரம் முறுக்கு முனிய காட்டுங்க இல்லாட்டி புடிச்சு கட்டுங்க....பயமா கீது
:-ss.. ithu padikkalaamungalaa.. namakku muni nu sonnaale pothum.. thoongaa vizhigal.. avvv... :((
Post a Comment